(Reading time: 9 - 17 minutes)

ஏன் லவ் marriage தான் செஞ்சிக்க போறனா, நம்ம officeல இருக்கிற 2, 3 பசங்க எனக்கு தெரிஞ்சே உனக்கு propose பண்ணிருக்காங்க அதுல யாரையாவது ஓகே சொல்லி லவ் பண்ணிருக்க வேண்டித்தானேஎன்றாள் ஒருத்தி.

என்ன டி லவ்வ இப்படி cheap ஆக்கிட்ட. அது ஒரு feel டி. யாரு லவ் சொன்னலும் ஒடனே லவ் வந்துடுமா. எனக்கு ஒரு பையன் மேல லவ் வரனுனா அவன் எப்படி இருக்கனும் தெரியுமாஎன்றாள் நிலா.

தெரியாது மா அதையும் நீயே சொல்லு கேபோம்என்றாள் ஒரு தோழி.

தன் மனதில் காதல் கணவனைப் பற்றி நிலா கட்டிவைத்திருந்த கோட்டையைப் பற்றி செங்கல் செங்கல்லாகப் பிரித்து சொன்னாள்.

நீ கேட்கிற மாதிரி ஒரு பையன flipkart order கொடுத்துத்தான் டீ செய்யனும்என்றாள் கிண்டலாக ஒருத்தி.

சரி இன்னைக்குப் பார்க்க வந்தவனையும் மிஸ் பண்ணிட்ட, இப்ப என்ன பண்ண போறஎன்றாள் ஒரு தோழி.

அதன் இப்போ அவன் நம்பர் கிடச்சிடுசே எப்படியாவது முயற்சி செய்து இந்த விஷயம் பெருசாவதற்குள், நான் அவனை சந்தித்து கல்யாணத்தில் இஷ்டம் இல்லைனு சொல்லிடுவேன்என்றாள் நிலா.

ம்ம்ம் சீக்கிரம் சொல்லுமா, இல்லனா வாய்பே கிடைக்காம straightஆ முதல் இரவில் பேச வேண்டியதா போயிடும்என்றாள் கிண்டலாக இன்னொரு தோழி.

அவள் கிண்டலாகக் கூறியதைக் கேட்டு நிலாவிற்கு ஏனோ கோபம் வந்தது “அப்படியே முதல் இரவில் பேசினாலும், நான் அதையேதான் சொல்லுவேன். எனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லை, விவாகரத்து கொடு நுஎன்று பட படத்தால் நிலா.

அதைக் கேட்ட அனைவருக்கும் shock ஆகி அவளையே பார்த்தனர்.

தொடரும்

Episode # 09

Episode # 11

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.