(Reading time: 13 - 26 minutes)

காத்திருப்பான் என்பதில் ஐயமில்லை!!! தனது புதல்வனின் தயக்கமற்ற செயலைக் கண்டு நிச்சயம் அவன் அன்னையானவள் பூரித்திருப்பாள் என்பதிலும் ஐயமில்லை.

என்றுமில்லாத முயற்சியாய், தனது கை கால்களை சிறிது சிறிதாக அசைக்க முயன்றார் சூர்ய நாராயணன். உடலில் அசைவுகள் ஏற்படுவதை அவரால் உணர முடிந்தது. வாழ வேண்டும் என்ற எண்ணம் இதயத்தில் துளிர்விட, தன்னை தானே சிறையிலிருந்து மீட்டெடுக்கும் பணியினை செய்ய ஆரம்பித்தார் அவர். எவரது எண்ணங்கள் பற்றியும் கவலைக் கொள்ளவில்லை. அவரது எண்ணத்தில் எல்லாம் அவரது கம்பீரம் மீட்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் மட்டுமே இருந்தது. சக்தியாய் அவள் உடனிருந்தால் என்ன இந்நிலைக்கு நிச்சயம் அனுமதித்து இருக்க மாட்டாள். இல்லை என்றால் என்ன, அவள் உயிராக என்னுடன் தானே இருக்கிறாள்!! என் உணர்வாக இருக்கிறாள்!!அவளுடன் வாழ்ந்த சில தினங்களின் நினைவுகள் மட்டும் போதும், விதியுள்ளவரை அதன் ஆனந்தத்தின் நிழலிலே வாழ்ந்து மடிவேன். அவரின் நேர்மறை எண்ணங்கள் பெருக பெருக உடலின் வீரியம் அதிகமானது. மரணத்தின் பிறகு என்னுடைய வாழ்வானது அவளுடன் ஆனந்தமாக இணைந்துவிடும். கண்கள் ஆனந்தத்தில் பணித்தன அவருக்கு!!நிச்சயம் இத்தகு சந்தர்பத்தில் தர்மாவிற்கும் உயிருடன் இருந்திருக்கலாமோ என்ற ஏக்கம் வந்திருக்கும்!!

விடிந்து பல மணிகள் கடந்துவிட்டன. நான் எழுந்தேனா என்று காண கூட ஒருவரும் இல்லை. இளையவன் ஊரில் இல்லாத காரணத்தால் அவன் இல்லம் திரும்பும் வரையிலுமே சிறை வாசம் தான்!!அவள் இருந்தால் நொடிக்கு ஒருமுறை வந்து எழுப்பி இருப்பாள்!!

"என்னங்க நீங்க?இவ்வளவு நேரமாவா தூங்குனீங்க? நான் 2 மணிநேரமா உங்களுக்காக காத்திருக்கிறேன்!"

"ஆஆஆஆஆ.....இன்னும் கூட தூக்கம் கலையவில்லை. நான் உன்னைப் பார்க்கணுமேன்னு வந்தேன்." நினைவுகள் புன்னகையை தருவித்தன. அந்தத் தனிமையினை சீர் குலைக்கவே அந்த அறைக்கதவு திறவப்பட்டது. உள்ளே நுழைபவர் யாராக இருக்கும் என்ற ஊகம் அவரிடம் இருந்ததால் முகம் சுழித்தார் சூர்ய நாராயணன். ஆனால் அதை தவறு என்று மெய்ப்பிக்கவே உள்ளே நுழைந்தான் அசோக். காணும் காட்சிகள் யாவும் மறைந்துப் போக காண்பது கனவா என்ற சந்தேகம் அவருக்குள்!!அவன் எதையும் பேசவில்லை, இறுகிய முகத்துடன் வாயிலில் நின்றான். தந்தையின் கண்கள் பனித்துப் போக, இதயம் புதல்வனை அள்ளி அணைக்கவே துடித்தது. ஆனால், இயற்கை அவரை செயலிழக்க அல்லவா செய்துள்ளது.

"பாருங்க டாக்டர்!" எவருக்கோ அவன் பரிந்துரைக்க, உள்ளே ஒரு நடுத்தர வயது மருத்துவர் நுழைந்தார்.

"ஹலோ மிஸ்டர். சூர்ய நாராயணன்! ஐ ஆம் டாக்டர். பிரசாத்! நியூரோ! அசோக் உங்க உடலை பரிசோதிக்க கூட்டிட்டு வந்தான்!" அவனோ எதையுமே மதிப்பதாக தெரியவில்லை, தனது கைப்பேசியில் கவனம் பதித்திருந்தான். வந்திருந்த மருத்துவர் அவர் தலையில் ஏதேதோ கருவிகளைப் பொருத்தி சோதனை செய்தார்.இரண்டு மணிநேரம் நிகழ்ந்தது அச்சோதனை! அதுவரையிலுமே பொறுமையாக கைப்பேசியில் விளையாடிக் கொண்டிருந்தான் அசோக்.

"கலெக்டர் சார்! கொஞ்சம் தனியா வாங்களேன்!" மருத்துவர் அவரை தனியாக அழைத்துச் சென்றார்.

"எலும்புல எந்தப் பிரச்சனையும் இல்லை. மூளையில சில நரம்புகளை செயலிழக்க வைத்திருக்காங்க! அதுக்கான மருந்தை இவரை தொடர்ந்து சாப்பிட வைத்திருக்காங்க! அதனால இவருடைய மூளை உடம்போட ஒரு பாகத்துக்கு மட்டும் எந்த கரண்ட்டையும் பாஸ் பண்ணலை. என் கெஸ் கொஞ்ச நாளா அந்த மருந்து சாப்பிடுறதை இவர் விட்டு இருக்கணும்! அதனால ரொம்ப மினிமல் அமௌன்ட் கரண்ட்டை அது பாஸ் பண்ண ஆரம்பித்திருக்கு! மற்றப்படி எலும்பிலோ, தசையிலோ பிரச்சனை இல்லை." நற்செய்தி கூறினார் அவர்.

"இந்த வாரம் அப்பாயிண்ட்மண்ட் தரேன்! ஒரே ஒரு சர்ஜரி பண்ணி, இரண்டு வாரம் கம்ப்ளீட் ரெஸ்ட் இருந்தார்னா அவர் பழைய நிலைமைக்கு வந்துடுவார்!"

"தேங்க்யூ டாக்டர்! சீக்கிரம் அதற்கான ஏற்பாடுகளைப் பண்ண முடியுமா?"

"தாராளமா பண்ணலாம்! ஆனா, மறுபடியும் அவருக்கு இதே மருந்தை பழக்கப்படுத்த ஆரம்பித்தால், ஆப்ரேஷன் பயன் தராது! பெட்டர்...நான் சொல்ல வருவதுப் புரிந்திருக்கும்னு நினைக்கிறேன். அப்போ நான் கிளம்புறேன்!"

"தேங்க்யூ டாக்டர்!" அவரை சென்று வழியனுப்பி வைத்துவிட்டு வந்தான் அசோக்.தனக்காக தன் மகன் இறங்கி வருகிறான் என்னும் செய்தியே அவருக்குப் புத்துணர்வு அளித்தது. அவரின் பாதத்தின் அருகே சென்று மண்டியிட்டவன் நீண்ட நேரமாக அவர் பாதத்தையே நோக்கினான்.

"வணங்க வேண்டிய பாதம், இன்னிக்கு செயலிழந்துப் போயிருக்கு! என்னுடைய அம்மா சாவை தேடுனதுக்கு நீங்க தான் காரணம்! ஆனா, இன்னிக்கு உங்களை நான் காப்பாற்ற நினைக்கிறேன். காரணம், அவங்க உங்க மேலே வைத்திருந்த காதல்!! அவங்க என்னுடைய மடியில தான் உயிர்விட்டாங்க! சாகும் போது என்கிட்ட சொன்னது எல்லாம், விதி நீ யாருன்னு உனக்குத் தெரியப்படுத்தும் கண்ணா! அந்த விதியை நீ மனப்பூர்வமா ஏற்றுப்பன்னு சத்தியம் பண்ணுன்னு கேட்டாங்க!நானும் பண்ணேன்!ஆனா உண்மை இவ்வளவு மோசமா இருக்கும்னு தெரியாம இருந்தேன். அன்னிக்கு எங்க அம்மாவை பார்க்க நீங்க போயிருந்தால், இந்நேரம் அவங்க கூட சந்தோஷமா வாழ்ந்திருக்கலாம்! நீங்க எத்தனை வருடமா இங்கே இருக்கீங்கன்னு எனக்குத்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.