(Reading time: 13 - 26 minutes)

தெரியாது, ஆனா, நான் பிறந்ததே இங்கே தான்! என்னை வளர்க்க அவங்க எவ்வளவோ கஷ்டப்பட்டாங்க! நினைத்துப் பார்க்கும் போதெல்லாம்...." குரல் அடைத்தது அவனுக்கு!!

"ஒரே ஒரு வார்த்தை கூட உங்களைத் தப்பா பேசினது இல்லை. இன்னிக்கு ஒரு நிலைமையில நான் இருக்கேன். அவங்களை மகாராணி மாதிரி வாழ வைக்க ஆசைப்பட்டேன். ஆனா, அவங்க உயிரோட இல்லை! எனக்கு இருக்குற கோபத்துக்கு அவங்களை யாரெல்லாம் வேதனைப்படுத்திப் பார்த்தாங்களோ அவங்க எல்லாரையும் உயிரோட எரித்து அலங்கப்படுற வேதனையை பார்க்கணும் போல இருக்கு! ஆனா, உங்க இரத்தமாகவே இருந்தாலும், அதைவிட அவங்க வளர்ப்பு பெரிசு!" கண்ணீர் திரண்டது அவன் விழிகளில்!!

"சாகும் போது கூட, உன்னை கல்யாணம் பண்ணிக்கப் போற பொண்ணுக்கு வேற தாலி எடுத்துப் போடு, என்னுடைய தாலியை பாதுகாத்து என்கிட்டையே கொடுத்துடு அசோக்ன்னு கேட்டாங்க! அவங்க உடல் எரிந்து முடிக்குற வரைக்குமே அந்தத் தாலியை நான் எடுக்கல! இப்போ அது என்னுடைய அம்மா படுத்துல தான் மாட்டப்பட்டிருக்கு!" நொடிந்துப் போனார் சூர்ய நாராயணன்.

"அவங்க இருந்திருந்தா இன்னிக்கு என் சிவன்யாவை தன்னுடைய மகளா சீராட்டி இருப்பாங்க!" அவன் கூறுவதை கேட்க கேட்க நெஞ்சம் உறுத்தியது!!

"போகட்டும்! என் கூட வாங்க! என்னுடைய அம்மா தன்னுடைய இறுதி காலத்தை கழித்த வீட்டுக்குப் போகலாம்! உங்க சந்தோஷம் அவங்களுக்கு என்னிக்கும் முக்கியம்! நான் இன்னும் இரண்டு மணிநேரத்துல வந்து உங்களைக் கூட்டிட்டுப் போறேன்!" இறுகிய மனதுடன் அவன் திரும்ப, கதவில் சாய்ந்தப்படி நின்றிருந்தார் மதுமதி.

"வாடா! நல்லவனே! என்னடா உண்மை எல்லாம் தெரிந்தும் உரிமை கொண்டாட வரலையேன்னு பார்த்தேன்! என்ன சொத்தெல்லாம் எடுத்துட்டு போகலாம்னு எண்ணமா? என்னை மீறி அவனை காப்பாத்திடுவியா?" என்றதும் இரத்தம் கொதித்தது அவனுக்கு! கோபத்தோடு அவரை நெருங்கியவன்,

"எனக்கு அவர் மேலே கோபம் இருக்கலாம்! ஆனா, என் முன்னாடியே அவரை மரியாதை இல்லாம பேசுனா நான் மனுஷனாகவே இருக்க மாட்டேன்!பொண்ணுங்கக்கிட்ட கோபமா நடந்துக்க கூடாதுன்னு எங்க அம்மா சொல்லி வளர்த்திருக்காங்க! அதனால அமைதியா போறேன்! இல்லைன்னா... உன் பிள்ளைக்கு நடந்தது ஞாபகமிருக்கட்டும்!" எச்சரித்துவிட்டு வெளியேறினான் அவன். தந்தையாரின் முகத்தில் எல்லையில்லா கர்வம் தாண்டவமாடியது.

"சிரிக்கிறீயா நீ? உன்னை அவன் காப்பாத்திடுவானா? இன்னிக்கே உன் கதையை முடிக்கிறேன். அப்பறம் இந்த எல்லா சொத்துக்கும் நான் தான் மகாராணி! உன் சொந்த இரத்தத்தை என் சுண்டுவிரல் அசைவுக்கு ஆட்டி வைக்கிறேன் பார்!" சூளுரைத்துவிட்டு வெளியேறினார் மதுமதி. அவர் பழிவாங்க துடிக்கிறார் என்றால் அவரை எதிர்க்க நிச்சயம் அசோக்கால் இயலாது. அவன் நற்குணம் கொண்டவன், இவளின் கபடங்களில் நிச்சயம் ஏமாற்றப்படுவான். நாற்காலியில் இருந்து எழ துடித்தார் சூர்ய நாராயணன்.இயலாமை அனைத்தையுமே கட்டுப்படுத்தியது.

சில மணிகள் கழித்து....

தன்னருகே எவரோ நின்றுக் கொண்டிருக்கும் உணர்வு ஏற்பட திக்கென்று கண்விழித்தார் சூர்ய நாராயணன். நின்றிருந்தது மதுமதி தான், அதுவும் கையில் ஓர் ஊசி வைத்துக் கொண்டு அதில் மருந்து ஏற்றிக் கொண்டிருந்தார்.

"என்னப் பார்க்கிற? சும்மா சொன்னேன்னு நினைக்கிறீயா?இல்லை..எப்படி இருந்தவன் நீ, உன்னை இப்படி பார்க்க எனக்கே கஷ்டமா இருக்கு! உன் தர்மா இருந்தா இப்படி ஆகி இருக்காதுல? பரவாயில்லை விடு...!அவ போன இடத்துக்கே உன்னையும் அனுப்பி வைக்கிறேன். கொஞ்ச நாளில் உன் பிள்ளையும் வந்துடுவான். சந்தோஷமா ஒரே குடும்பமா இருங்க! அப்பறம் என் மகன் இருக்கானே, அந்த த்ரிலோக திரிப்புர சுந்தரின்னு நினைத்துக் கொண்டிருக்கிறாளே அதான் அந்த சிவன்யா, அவ மேலே ஆசைப்பட்டுட்டான்! ஆனா பாரேன், இன்னிக்கு அவளால தான் அவன் ஜெயிலுக்கும் போயிருக்கிறான். அதனால அவளை வீட்டோட வைத்துக் கொள்ள சொல்றேன் வேலைக்காரியா!" மனமெல்லாம் படபடத்தது சூர்ய நாராயணனுக்கு!! தன்னிலை மறந்து திமிரினார்.

"அசையாதே!" என்று ஓங்கி அவர் கையில் ஊசியை நுழைக்க செல்லுகையில் தடுத்தது ஒரு கரம்!!! சூர்ய நாராயணனின் விழிகள் அதிர்ச்சியில் விரிந்தன. மதுமதியின் கையை வேகமாக இழுத்து, அவர் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள் சிவன்யா. அவள் அறைந்த வேகத்தில் கதவில் சென்று மோதினார் மதுமதி, கையிலிருந்த ஊசி எங்கோ சென்று விழுந்தது.

"என்னப் பிறவி நீ எல்லாம்? உன்னை மாதிரி ஒருத்தியை நான் பார்த்ததே இல்லை. உன் சுயநலத்துக்காக ஒரு உயிரை எடுக்க பார்க்கிற? அசிங்கமா இல்லை?"

"ஏஏஏ...!"

"ஏ...ச்சீ! வாயை மூடு! பண்றதெல்லாம் கேடுகெட்ட வேலை இதில் என்கிட்டயே குரல் கொடுக்கிறீயா? இதுவே அவர் இடத்துல நான் இருந்திருந்தா, உன்னை பிள்ளையை இந்நேரம் கொன்றிருப்பேன். உன்னை வாழ்நாள் முழுக்க சித்ரவதை பண்ணிருப்பேன். பல வருஷத்துக்கு முன்னாடி ஒரு பத்தினி அக்னிக்குண்டத்துல இறங்குனதுக்கு உன்னுடைய அகங்காரம் தானே காரணம்!!" தன் மருமகளின் துணிச்சலை பிரமித்துப் போய் பார்த்தார் சூர்ய நாராயணன்.

"பத்தினியா? யாரு தர்மாவா?ஊரறிய இவங்க கல்யாணம் நடக்கலையே! ஒரே ஒரு இரவு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.