(Reading time: 14 - 27 minutes)

மாட்டேன்!" அவர் வினாவிற்கான விடையளித்தான் ஆதித்யா.

"அவன் உங்களுக்கு அவமானமா தெரியுறான் தானே! ஆனா, அவன் தன்னுடைய சின்ன வயசுல இருந்து எத்தனை பேரால அப்பா பெயர் தெரியாதவன்னு அவமானப்படுத்தப்பட்டு இருக்கிறான் தெரியுமா? அந்தக் கேள்வியை யார் கேட்டாலும் பைத்தியம் பிடித்த மாதிரி நின்னுடுவான்! எத்தனை நாள் என்கிட்ட இந்தக் கேள்வியை கேட்க வந்து கேட்டா அம்மா பெயருக்கு களங்கமாகிவிடுமோன்னு அமைதியா இருந்திருக்கிறான் தெரியுமா? ஏன்னா, அவனுக்கு எந்த உண்மையும் தெரியாது! அம்மா எந்த உண்மையும் அவன்கிட்ட சொல்லலை." கண்கள் குளமாயின இராகவனாருக்கு!!

"அவன் அதிகமா சேட்டை பண்ணுவான். ஒரு இடத்துல உட்கார மாட்டான்! அந்த முகத்திற்கு பின்னாடி இருக்கிற வலியை நான் மட்டும் தான் பார்த்து இருக்கிறேன். அம்மா இங்கே எதுக்கு வந்தாங்கன்னு தெரியலை. நான் வந்தது அவனுடைய உண்மை என்னன்னு அவனுக்குத் தெரியப்படுத்த தான்!"

"நான் கிளம்புறேன்பா! இப்படி ஒரு சந்திப்பு நிகழ்ந்தது அம்மாவுக்குத் தெரியவே வேணாம்!" அழுத்தம் திருத்தமாக கூறிவிட்டு கிளம்பினான் அவன். கதிகலங்கிப் போய் நின்றார் இராகவன். மகனின் அறிவுரைகள் யாவும் உத்தமமானதாகவே தோன்றியது. இளையவனும் என் மகன் அல்லவா! நானில்லாமல், எனது பாசம் இல்லாமல் எவ்வளவு வாடி இருப்பான்? தர்மாவின் மனவுறுதி வியக்கத்தக்க ஒன்றே! எவ்வளவு அவமானங்களைக் கடந்துப் பிள்ளைகள் இருவரை வளர்த்திருப்பாள். அனைத்திற்கும் அவளே விடையளிக்க வேண்டும்!!நிச்சயம் அவள் என்னைச் சந்திக்கத் தான் வேண்டும்.

இல்லத்தில்....

"ச்சே..! இந்த வீட்டுல எல்லா வேலையும் நானே பார்க்க வேண்டியதா இருக்கு! ஒரு ஆண்பிள்ளை, தனியா கஷ்டப்படுறானே வந்து காய்கறி நறுக்கித் தருவோம்னு யாருக்காவது இருக்கா?" சமையலறையிலிருந்து உரக்க குரல் தந்தான் உடையான்.

"மா! பாவம்மா அவர் தனியா செய்யுறாரு! நான் போய் ஹெல்ப் பண்றேனே!" மனமிறங்கினாள் மாயா.

"நீ இரு! அதான் எனக்கும் சமைக்கத் தெரியும்னு விறைப்பா போனார்ல! செய்யட்டும்!" பதிலுக்கு உரக்க கத்தினார் தர்மா. சமையலறையில் நின்றிருந்தவனுக்கு இது நன்றாகவே கேட்டது.

"ச்சே..! நானெல்லாம் கோபப்பட்டா அசிங்கப்படுத்திடுறாங்களே!"

"உங்க அண்ணன் கோபப்பட்டாலும் அவனுக்கும் இதே நிலைமை தான்!" மறுபதில் வந்தது.

"பார்த்துக்கிறேன்மா! பார்த்துக்கிறேன்!" அவன் பதிலுக்கு மாற்று பதில் வரவில்லை. மாயா தான் உள்ளே வந்தாள்.

"கொடுங்க உதய்! அத்தை ரூமுக்குப் போயிட்டாங்க! நான் பண்றேன்!"

"அண்ணி! இது என் தன்மானப் பிரச்சனை! என்னால சமைக்க முடியுமான்னு கேட்டாங்கல்ல, நீங்க போய் ரெஸ்ட் எடுங்க! நான் எப்படி அசத்துறேன்னு மட்டும் பாருங்க!" அவன் கூறிய விதம் அவளுக்கு சிரிப்பையே வரவழைத்தது.

"நீங்க போய் அம்மாக்கூட இருங்க அண்ணி!" கொழுந்தனானவன் பாசத்தோடு கூற புன்னகையோடு நகர்ந்துக் கொண்டாள் மாயா.

"ம் ... என்னை கட்டிக்கப் போறவளுக்கு கவலையே வேணாம்! டேய் பார்த்திபா! கொடுத்து வைத்தவடா உன் பொண்டாட்டி!" மார்தட்டிக் கொண்டான் அவன்.

"ம்...வந்ததே அவளுக்காகத் தான்! ஒருமுறைக் கூட பார்க்கலை! எப்போ லவ் பண்ணி, ப்ரப்போஸ் பண்ணி, அவ திரும்பி லவ் பண்ணி, அம்மாக்கிட்ட சொல்லி, கல்யாணம் பண்றதோ!"  அவன் சிந்தனை நியாயமான ஒன்றே! ஆனால் அதை கெடுக்க ஒலித்தது அழைப்புமணி!!

"கனவுல கூட நிம்மதியா இருக்க விட மாட்றாங்களே! அண்ணன் ஏன் பெல் அடிக்கிறார்?" வெளியே வந்து எட்டிப் பார்த்தவன் புரியாமல் நின்றான்.

"யார் நீங்க? யார் வேணும்?" வாசலிலே அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவரை வினவினான்.

"தர்மா...?" தாயாரின் பெயர் கூறி அழைத்ததும் மேலும் கீழும் பார்த்தான் அவன்.

"வாங்க! உள்ளே வாங்க!" தயக்கத்தோடு அடி எடுத்து வைத்தார் அகிலாண்டேஷ்வரி.

"மீ..!மீ...! உங்களைப் பார்க்க வந்திருக்காங்க!" பதில் இல்லை.

"அண்ணி! அண்ணி!" பதில் இல்லை.

"சின்னவனே! இரண்டுப் பேரும் தோட்டத்துல......" என்று கூறிக் கொண்டே வந்த துர்காம்மா சிலையாகி நின்றார்.

"அப்படியே ஒரு குரல் கொடுக்க கூடாதா பாட்டி! அதுக்கும் நான் தான் போகணுமா?" சலிப்போடு கூறிச் சென்றான் அவன்.

"அகிலாண்டேஷ்வரி அம்மா! நீ...நீங்க இங்கேயா?" வியந்து நின்றார் அவர்.

"எப்படி இருக்க துர்கா?"

"நல்லா இருக்கேன்மா! ரொம்ப நல்லா இருக்கேன்!" தேகம் எல்லாம் நடுங்கியது அவருக்கு!

"டேய்! யாருடா வந்திருக்கிறது?"

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.