Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
1 1 1 1 1 Rating 5.00 (3 Votes)
தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 15 - RR [பிந்து வினோத்] - 5.0 out of 5 based on 3 votes
Pin It

தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 15 - RR [பிந்து வினோத்]

குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா 💘!

Pottu vaitha oru vatta nila

ஹாய் ஃபிரென்ட்ஸ், கிட்டத்தட்ட பத்து வருடங்களாக என்னை உங்களுக்கு chillzee வழியாக தெரியும். இந்நேரம் உங்களுக்கே நான் பொதுவாக அதிகம் பயன்படுத்தும் இரண்டு வார்த்தைகள் என்னன்னு தெரிந்திருக்கும் – சாரி & தேங்க்ஸ்!

முதல்ல பெரிய சாரி! கதைக்கு நடுவே இவ்வளவு பெரிய இடைவெளி கொடுக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் ஒரு அம்மாவாக, ஒரு மனைவியாக செய்ய வேண்டியவற்றை செய்யாமல் மனதிற்கு பிடித்ததை மட்டும் செய்ய முடியுமா என்ன? நான் சொல்வது உங்கள் அனைவருக்கும் புரியும் என்பது தெரியும் - ஒரு நம்பிக்கை தான்!

chillzee & chillzee வழியாக என்னை சந்திக்கும் நீங்கள் அனைவரும் புரிந்துக்கொள்ளும் தன்மை உள்ளவர்கள் என்பது தெரியும்.

அதற்காக இப்போதே உங்களுக்கு என் ‘தேங்க்ஸ்’உம் சொல்லிவிடுகிறேன்.

எனக்கு இப்படி துணையாக இருக்கும் உங்களுக்கு கதையை நினைவுப் படுத்த ஒரு ஷார்ட் சம்மரி கொடுக்கா விட்டால் எப்படி :-) Here we go!!!

கதை இதுவரை:

இந்த கதையின் கதாநாயகன் – நாயகி மனோஜ் & மஞ்சு (M & M).

திருமணமாகி பதினைந்தாம் வருட விழாவை சந்தோஷமாக கொண்டாடும் மஞ்சு தன் கணவன் மனோஜை சந்தித்தது முதல் நடந்ததை பற்றி நினைத்துப் பார்க்கிறாள்.

மஞ்சு புதிதாக வேலைக்கு சேரும் இடத்தில மேனேஜராக இருக்கும் மனோஜிற்கு அவளை பார்த்த உடனே பிடித்து விடுகிறது. அவளிடம் காதல் சொல்வதை பற்றி அவன் யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், மஞ்சுவின் வீட்டில் அவளுக்கு திருமணத்திற்கு வரன் தேடுவது தெரிய வரவும், கோல்மால் செய்து மஞ்சுவின் வீட்டிற்கு குடும்பத்துடன் பெண் பார்க்க செல்கிறான்.

இதனால் அம்மா நிர்மலாவின் கோபத்திற்கும் ஆளாகிறான். ஆனாலும் சின்ன சின்ன பிரச்சனைகளை சமாளித்து மஞ்சுவை திருமணமும் செய்துக் கொள்கிறான். மனோஜின் மீதிருக்கும் கோபத்தால் மஞ்சுவிடமும் கோபத்தை காட்டுகிறார்கள் நிர்மலாவும், ஜோதியும். அவர்களின் கோபத்தை மஞ்சு எப்படி சரி செய்தால் என்பதை தொடர்ந்து கதையை படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்! (டோன்-டடாயிங்-டன்)

ஞ்சுவிற்கு விழிப்பு வந்த போது, மனோஜ் யாருடனோ பேசுவது காதில் விழுந்தது.

“இட்ஸ் ஓகே, நான் என்னன்னு கேட்கிறேன். நான் பார்த்துக்குறேன்...”

காதில் கேட்ட கணவனின் குரல் ஏதேதோ நினைவுகளை கொண்டு வர, அவளின் கன்னங்கள் சூடானது, மனம் கனிந்தது... அவளுள் ஒருவிதமான இனிய இதம் பரவியது...

கண்களை திறக்காமலே கைகளால் அவனை அருகில் தேடினாள்...

அங்கே அவன் இல்லை...

கஷ்டப்பட்டு கண்ணை திறந்துப் பார்த்தாள்.

மனோஜ் சற்று தொலைவில் போனில் பேசிக் கொண்டிருப்பதுக் கேட்டது... ஒரு சில வினாடிகள் அமைதியாக அவன் பேசுவதை கவனித்தவளுக்கு அவன் ஆபிஸ் ப்ராஜக்ட் சம்மந்தமாக பேசுவது புரிந்தது.

அவன் பேசி முடித்து வரட்டும் என்று ஐந்து நிமிடங்கள் காத்திருந்தாள்... ஆனால் அவனின் தொலைப்பேசி உரையாடல் தொடர்ந்துக் கொண்டே செல்லவும், ஏமாற்றத்துடன் படுக்கையில் இருந்து எழுந்தாள்.

முடிந்த அளவு சத்தம் இல்லாமல் எழுந்தப் போதும், மனோஜ் அரவம் உணர்ந்து அவள் பக்கம் பார்த்தான்.

போனை சுட்டிக் காட்டி, சத்தம் வராமல் உதட்டை அசைத்து, ‘டி.எம்’ (டெலிவரி மேனேஜர்) என்றவன். கூடவே அதே பாணியில் ‘சாரி’ என்றான்!

சற்ற முன் தோன்றிய ஏமாற்றம் இருந்த இடம் தெரியாமல் ஓடிப் போக, முகம் மலர, ‘பரவாயில்லை, பேசுங்கள்’ என அவன் போலவே சைகையில் சொல்லி விட்டு சென்றாள் அவள்.

நேரம் செலவிட்டு, பொறுமையாக தலைக்கு குளித்து முடித்து அவள் வந்தப் போது, மனோஜின் குரல் உரக்க கேட்டது!

“..நீ ஒரு டெக்னிகல் பர்சன் தானே? இப்படி பதில் சொல்ற? பொறுப்பா வேலை செய் இல்லைனா நான் வேற அல்டர்னேட்டிவ்ஸ் பார்க்க வேண்டி இருக்கும்...”

அவளுக்கு பழக்கமான குரல் தானே! யாருக்கோ பூஜை போலும்! என நினைத்தப் படி அறையை விட்டு வெளியே வந்தாள்...

மையலறையில் இருந்த பத்மாவதிக்கும், சாதனாவிற்கும் உரக்க ஒலித்துக் கொண்டிருந்த மனோஜின் குரல் பலக் கேள்விகளைக் கொடுத்தது...

அவனின் குரல் தெளிவில்லாத ஓசையாக ஒலித்ததால் என்ன ஏது என்றும் புரிந்துக் கொள்ள முடியவில்லை... ஆனால் எதற்காக இப்படி திட்டுவது போல கத்துகிறான் என்ற கேள்வி இருவரையும் குடைந்தது....

அப்போது ஈரமாக இருந்த கூந்தலை கைகளால் கோதியப்படி வந்த மஞ்சுவை அம்மா, தங்கை இருவருமே வித்தியாசமாக பார்த்தார்கள். அவர்களின் பார்வையை உணர்ந்து அவர்கள் பக்கமாக பார்த்தாள் மஞ்சு.

சாதனாவின் கண்களில் வெறும் கேள்வி தான் இருந்தது... ஆனால் அம்மாவின் பார்வையோ அவளை துளைத்து எடுப்பது போல இருந்தது... என்ன எது என்று புரியாவிட்டாலும், அவளின் கன்னங்கள் தானாக சிவந்தன!

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5 
  •  Next 
  •  End 

Add comment

Comments  
+1 # RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 15 - RR [பிந்து வினோத்]SAJU 2019-06-24 20:32
superrrrrr ud sis
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 15 - RR [பிந்து வினோத்]Bindu Vinod 2019-06-25 19:28
Thanks Saju.
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 15 - RR [பிந்து வினோத்]Adharv 2019-06-24 19:17
No problem Bindu ma'am!! Priorities to be prioritized :-)
wow Late ah vandhalum you have come back with a lovely update :clap: :clap: M&M oda combo simply superb :dance: Nirmal aunty panuradhu kuda okay but indha small sis alparai too much pa steam but Manju, manoj kaga adhai rombha casual aga eduthu kittadhu simply cute...waiting to see what happens next. thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 15 - RR [பிந்து வினோத்]Bindu Vinod 2019-06-25 19:28
Thanks Adharv.
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 15 - RR [பிந்து வினோத்]Srivi 2019-06-24 16:48
Cute and lovely update..sema sweet Manoj..
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 15 - RR [பிந்து வினோத்]Bindu Vinod 2019-06-25 19:27
Thanks Srivi.
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 15 - RR [பிந்து வினோத்]madhumathi9 2019-06-24 13:11
:clap: nice epi.eagarly waoting 4 next epi. :thnkx: 4 this epi. :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 15 - RR [பிந்து வினோத்]Bindu Vinod 2019-06-25 19:27
Thanks Madhumathi.
Reply | Reply with quote | Quote

Coming Soon...

Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

Come join the FUN!

Write @ Chillzee
Go to top