Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

Chillzee KiMo

Chillzee KiMo Tamil - English Novel ContestChillzee KiMo Only Books

1 1 1 1 1 Rating 5.00 (3 Votes)
தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 14 - சசிரேகா - 5.0 out of 5 based on 3 votes
Pin It

தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 14 - சசிரேகா

Unnaiye thodarven naane

ட்டி

பட்டிமன்றம் முடிந்த கையோடு அனைவரும் மேடையை விட்டு இறங்க மாதவியிடம் வந்தான் சரவணன்

மாதவி ஒரு நிமிஷம் நில்லுஎன அவன் சொல்ல மாதவி அவனை இளக்காரமாகப் பார்த்துவிட்டு சுந்தரியுடன் இறங்கிச் சென்றாள்.

அந்த ஒரு பார்வைக்கே மனம் உடைந்தவன் மெல்ல மேடையை விட்டு இறங்கி மாசியிடம் வந்தான்

பார்றா அவள் எப்படி பார்க்கறாள்ன்னுஎன சோகமாக சொல்ல அதற்கு மாசியோ

அண்ணா இதுல உன் தப்பும் இருக்கு, முதல்ல உண்மையை சொல்லிட்டு அப்புறம் எல்லாம் செஞ்சிருக்கனும் நீ பாட்டுக்கு அண்ணிக்குப் பிடிக்காததையே செஞ்சா அவங்களும் என்ன பண்ணுவாங்க அண்ணா

நான் அவள்ட்ட மன்னிப்பு கேட்கனும்

போய் கேளு

நிக்க மாட்டேங்கறாளே

அண்ணா லேட் பண்ணா அண்ணி கிடைக்க மாட்டாங்க, சட்டுன்னு மன்னிப்பு கேளுங்க நாளைக்கு அவங்க ஊருக்கு போறாங்களாம்

என்னடா சொல்றஎன அதிர்ச்சியில் அலற மாசியோ

இப்பதான் சொப்னாவோட அப்பா என்கிட்ட சொல்லிட்டு இருந்தாருஎன இயல்பாகச் சொல்ல சரவணன் கலவரமானான்.

கண்களால் மாதவியை தேட அவளோ தன்னுடன் வந்தவர்களுக்கு மத்தியில் இருந்தாள். அவர்கள் பாராட்டுவதைக் கேட்டுப் புன்னகை புரிந்துக் கொண்டிருந்தாள். இந்த கூட்டத்தில் அவளை எப்படி தனியாக அழைப்பது என யோசித்தவனிடம் சொப்னா வந்தாள்

சரவணன் வாங்க சாப்பிட போலாம், லன்ச் முடிஞ்சதும் யார் வெற்றியாளர்கள்னு சொல்லப் போறாங்க வாங்கஎன அழைக்க சரவணன் சொப்னாவிடம்

சொப்னா எனக்கு ஒரு உதவி பண்ணு

என்ன சரவணன்

மாதவிகிட்ட கொஞ்சம் பேசனும் அவளை எப்படியாவது தனியா கூட்டிட்டு பஸ்க்குள்ள வந்துடு நான் பஸ்ல காத்திருக்கேன்என சொல்ல சொப்னாவும் முதலில் தயங்கி பின்பு சரியென சொல்லிவிட்டு மாதவியை நோக்கி நடக்க சரவணன் மாசியைப் பார்த்தான்

மாசி மாதவி கூட நான் பேச போறேன் அதுவரைக்கும் யாரையும் பஸ்ல ஏத்தாதடாஎன சொல்ல

அண்ணா நீ போ, நான் பார்த்துக்கறேன், என்னைத் தாண்டி டிரைவர் கூட ஏறமாட்டான். பார்த்து பக்குவமா பேசுண்ணா, இந்த முறை சொதப்பின அண்ணி கிடைக்கமாட்டாங்கஎன சொல்ல சரவணனும் சரியென தலையாட்டிவிட்டு அவசரமாக பஸ் நோக்கி சென்று அதில் ஏறி கடைசி சீட்டுக்கு வந்து அமர்ந்தவன் சட்டென மறைந்துக் கொண்டான்.

சிறிது நேரத்தில் சொப்னா மாதவியுடன் பஸ்ஸூக்குள் வந்தாள்.

சார்ஜர் இல்லாம ஃபோன் கூட பண்ண முடியலை, சீக்கிரமா சார்ஜர் கொடுஎன சொப்னா கத்த

இரு கத்தாத பையிலதான் இருக்கு இப்பவே கொடுக்கறேன் எதுக்கு இப்படி கத்தறஎன மாதவி பதிலுக்குக் கத்த

சரி நான் வெளிய இருக்கேன் சார்ஜரோட வந்து சேருஎன சொல்லிவிட்டு டக்கென பஸ்ஸை விட்டு வெளியேறி சாப்பிடச் சென்றேவிட்டாள் சொப்னா.

சொப்னா சென்றதும் பஸ் கதவை மூடிவிட்டு வெளியே நின்றுக் கொண்டான் மாசி.

மாதவியோ சார்ஜர் தேடி கடைசி இருக்கைக்குச் செல்ல அங்கு சரவணன் இருக்கவும் அதிர்ந்தவள் பின்னாடி செல்ல முனைய அவளை இழுத்துப் பிடித்தான்

விடுங்க விடுங்கஎன அலற

ப்ளீஸ் நான் சொல்றதை கேளு, அப்புறம் நீ போ

முடியாது என்னை விடுங்க

சொல்றதை கேளு ஒரு நிமிஷம் இப்படி வாஎன அவளை இழுத்து சீட்டில் அமர வைத்தவன்

அவளிடம் கை கூப்பி நின்றான்

என்னை மன்னிச்சிடு மாதவி ப்ளீஸ்என அவன் உருக்கமாக மன்னிப்பு கேட்கவும் அவளது பயம் விலகி சந்தேகம் வந்தது

என்ன செய்றீங்க

நீ பேசினதை கேட்டேன், தப்பு என் மேலதான், உன் மேல ஆசைப்பட்டேன், உன்னை கல்யாணம் பண்ணிக்க கூட நினைக்கிறேன், இதப்பாரு ப்ளீஸ் தேவையில்லாம என் மேல நீ வெறுப்பை வளர்த்துக்காத, என்னை நம்பு, நான் உன்னை நல்லா பார்த்துக்குவேன், என் குடும்பமும் உன்னை ஏத்துக்கும், அதுக்கு நான் காரண்டி தரேன், யாரும் உன்னை எதுவும் சொல்ல மாட்டாங்க என்னை நம்புஎன அவன் கெஞ்ச அவளுக்கு குழப்பமே வந்தது

நான் அப்பாட்ட போகனும்என அவள் ஈனஸ்வரத்தில் சொல்ல சரவணன் நொந்தே போனான். சட்டென அவளுக்கு வழியை விட்டான்

About the Author

Sasirekha

Sasirekha

Latest Books published in Chillzee KiMo

  • Katrin kanalKatrin kanal
  • Kallaraiyil oru karuvaraiKallaraiyil oru karuvarai
  • Maayakkottai - MinnalMaayakkottai - Minnal
  • Theeradha KadhalTheeradha Kadhal
  • ThazhamPoove Vaasam VeesuThazhamPoove Vaasam Veesu
  • Kids Fun StoriesKids Fun Stories
  • Unnai ondru ketpenUnnai ondru ketpen
  • Yaar arivaarYaar arivaar

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 14 - சசிரேகாராணி 2019-06-25 10:18
ஓ எப்படியோ தாலி கட்டியாச்சி இனி என்ன மாதவிக்கு உண்மைதான் தெரியப்படுத்தனும் உண்மை தெரிஞ்சிட்டா போதும் மாதவி சரவணனை ஏத்துக்குவாங்க சூப்பரா போகுது கதை
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 14 - சசிரேகாAdharv 2019-06-24 19:09
steam side role ellam hero kazhutha nerikuraru ena panittu irukinga madam ji ;-)

Ouch idhu thevai thaan ivanga rendu perukkum :grin: summa poravara invitation vachi invite seithu self aappu vachikitanga madhavi :D Mr Sarvana perumal ninga kadaisila antihero vaga thaan nippinganu thonudhu :lol: mouth la ena kozhakottai-ya vachi kittu irukinga matter disclose panama thali katuren pattu poduren thoonga vaikuren pondatti bonda tea nu facepalm anyway don't worry ungala police pudichittu pora varai unga pondatti vidamatanga….pidichittu ponala sasi ma'am vidamatanga ;-) Interesting update ma'am :clap: :clap: hope madhavi realize her interest towards Saravanan!! :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 14 - சசிரேகாதீபக் 2019-06-24 06:27
Sis today's episode is awesome :clap: . Really a interesting one do no it ended quickly (y) . Hike of the story increasing more from you :yes: . Eagerly waiting for the next part :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 14 - சசிரேகாmadhumathi9 2019-06-24 06:02
wow nice epi.11 pages mudinthathey theriyavillai.avvalavu vegama mudinthuvittathu :clap: (y) :Q: .sariyaathaan padiththoma?allathu engeyyaavathu vittuttu padiththuvittoma ena oru murai check panni paarththen.kathai avvalavu seekkiram mudiyavum kuzhappamaagivittathu.interesting epi.eagarly waiting 4 next epi. :thnkx: 4 this epi. :GL: sasi. (y) :clap:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top