(Reading time: 10 - 20 minutes)

எல்லோரும் அவர்கள் தங்கும் இடம் வந்ததும், சாப்பிட்டுத் தங்கள் அறைக்குச் சென்றனர். கிருத்திகா மட்டும் இன்னும் யோசனையில் இருந்து வெளிவராததைக் கண்ட ப்ரித்வி அவள் அருகில் சென்றான்.

“கிருத்திகா” என்றழைக்க, அது அவள் செவிகளில் எட்டியதாகவேத் தெரியவில்லை. மீண்டும் ஒரு முறை அழைத்தப் போதும் அவள் அப்படியே இருக்கவும், அவள் கையைப் பிடித்து உலுக்கினான். அதில் சுய உணர்வு பெற்றவள், எதிரில் ப்ரித்வியைப் பார்க்கவும்,

“என்ன ஆச்சுப் பிரின்ஸ்” என்றாள்

“அதை நான் கேட்கணும். என்ன ஆச்சு கிருத்திகா? கொஞ்ச நேரமாவே சுற்றி என்ன நடக்குதுன்னுக் கூடத் தெரியாமல் ஏதோ யோசனையில் இருக்க?

“இன்னிக்கு என்ன ஆகப் போகுதுன்னு மனசு கிடந்து தவிக்குது?

“என்ன சொல்ற?

“இன்னிக்குக் கோவிலில் கேட்ட அந்த இசை, கனவிலும் வரும். அப்போ அந்தக் கனவு என்ன சொல்லப் போகுதோன்னு தவிப்பா இருக்கு” எனவும்,

அவள் சொல்வதில் எதுவும் புரியவில்லை என்றாலும், ப்ரித்வி

“ஏதாவது கனவு வருதா தொடர்ச்சியா?” என்றுக் கேட்டான்.

அவன் கேட்டதுமே சுதாரித்தவள்,

“சாரி பாஸ். ஒன்னும் பிரச்சினை இல்லை. ஏதோ யோசனை அவ்வளவுதான். நான் என் அறைக்குப் போகிறேன்” எனவும், அவளைக் கூர்ந்துப் பார்த்துவிட்டு தலை அசைத்தான்.

அவனிடம் விடைப் பெற்று வந்தவளுக்கு கண்ணை மூடவே யோசனையாக இருந்தது. தன்னை அறியாமல் உறங்க ஆரம்பிக்கவும், அந்தக் கனவும் தொடர்ந்தது.

கிரண் தேவி தங்கள் கூட்டத்தோடு சென்று சேரவும், அங்கிருந்த உபதளபதிகள் ராணாவைத் தேடி , கிரண் தேவியிடம் கேட்டனர். அவள் அவர் இருப்பிடம் கூற, உபதலைவர்கள் மட்டும் சென்று ரானாவைப் பார்க்கச் சென்று இருந்தனர். அப்போது மீண்டும் ப்ரித்விராஜ் பஜ்ராங்கிடம் காலையில் என்ன சொல்ல வந்தாய் என்று விசாரித்தான்.

பஜ்ரங் ப்ரித்வியிடம் அவன் மருமகன் இறந்து விட்டதாகக் கூறவும், அதிர்ந்தவன்,

“பஜ்ரங் , என்ன சொல்கிறீர்கள்? ப்ரித்விபா பச்சைக் குழந்தை. எங்கள் பிகானர் வம்சத்தின் அடுத்த தலைமுறையின் மூத்தக் குழந்தை. அவனைப் பற்றித் தாங்கள் கூறுவது என்னைத் திடுக்கிட வைக்கிறது. முழு விவரம் கூறுங்கள்”

முஹலாயப் பேரரசர் அக்பர் பேரா பகுதிகளுக்கு வேட்டைக்காக வந்து இருந்தார். அந்தச் சமயத்தில் ஜீலம் நதிக்கரையில் உள்ள நம் ராஜபுத்திரர்கள் அக்பரைச் சந்திக்க திட்டமிடப் பட்டு இருந்தது. தங்கள் பங்களியான டன்ஹாஜி தாமதமாக வரவே , அக்பர் அவருக்குக் கசையடி கொடுக்கச் சொன்னார். டன்ஹாஜியுடன் தங்கள் மருமகன் ப்ரித்விபாவும் சென்று இருந்தார். அரசரைப் பார்க்கச் செல்லும் முன் தங்கள் மருமகனை விளையாட அனுப்பி வைத்தார். அரசவை விவகாரங்கள் முடியும் வரை தனியாக யானை ஏற்றத்தைப் பார்த்துக் கொண்டு இருந்த சிறுவன், மாமாவின் அலறல் சத்தம் கேட்கவும், அரண்மனை மண்டபத்திற்குள் நுழைந்து விட்டான்.

அங்கே அவன் மாமா அடி வாங்குவதைச் சகிக்க முடியாமல், வருத்ததோடு நின்று இருந்த ப்ரிதிவிபாவைப் பார்த்த அக்பர் அவனின் கையில் மற்றொரு சாட்டையைக் கொடுத்து ப்ரித்விபாவை விட்டு தண்டிக்கச் சொல்லவும், அதிர்ந்த ப்ரித்விபா மாட்டேன் என்று சாதித்தான்.

அக்பர் ஒரு கட்டத்திற்கு மேல் கட்டளையாகச் சொல்லவும், ப்ரித்விபா மறுத்து விட்டு தன்னைத் தானே கத்தியால் குத்திக் கொண்டு , இறந்து விட்டார்.“ என்றுக் கூறினான். கேட்டிருந்த அனைவரும் வருத்ததுடன் அமர்ந்து இருக்க, ப்ரித்வியோ கண்கள் கலங்க,

“அக்பர், உனக்கு என் கையால்தான் மரணம்” என்று மனதிற்குள் முனு முணுத்தான்

தன்னைச் சமாளித்துக் கொண்ட ப்ரித்விராஜ்,

“யாரும் அக்பரிடம் நியாயம் கேட்கவில்லையா?” என்றான்

“பிகானர் தலைவரான தங்கள் தந்தை, அக்பரிடம் சென்றுப் பேசப் போகும் நேரத்தில், ப்ரித்விபாவின் இறப்பிற்குக் காரணம் பட்டத்துயானை மிதித்தே என்றுப் பரவும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அத்தோடு  நம் தர்மத்திற்கு ஒவ்வாத ஒரு சில விஷயங்களைக் கட்டாயப் படுத்தி ஆணையிட்டு இருக்கிறார். அதைக் கேட்ட அத்தனைப் பேரும் செய்வது அறியாமல் தவிக்கின்றனர்.” என்றான் பஜ்ரங்.

“அப்படி என்ன உத்தரவு?” என்று ராணா கேட்கவும், சற்றுத் தயங்கியபடி தலைக் குனிந்து கூறினான். அவனின் செய்தியைக் கேட்ட ரானா மட்டுமில்லாமல், அங்கிருந்த அத்தனை பேரும் பெறும் கோபமும், வெறுப்பும் அடைந்தனர்.

எல்லோரும் ராணாவை நோக்கி “மகாராஜ், உத்தரவிடுங்கள். இப்போதே சென்று ஒன்றுக்கு நூறாக அவர்கள் தலையை வாங்கி விடுகிறோம்” என்றனர்.

அவர்களின் வீரத்தைக் கண்ட ராணா,

“சற்று அமைதியாக இருங்கள். நமக்கான நேரம் இன்னும் கனியவில்லை. விரைவில்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.