(Reading time: 10 - 20 minutes)

இவை அனைத்திற்கும் முடிவு கட்டுவோம்” என்று உத்தரவிடவும், அமைதியாகக் கலைந்து சென்றனர்.

அவர்கள் செல்லவும்,

‘ப்ரித்விராஜ், பயணத்தைத் தொடங்கலாமா அல்லது தாங்கள் பிகானர் வரை சென்று வருகிறீர்களா? என்று ப்ரித்வியாயைக் கேட்கவும்,

“நான் சென்று என்ன செய்ய மகாராஜ்? அதற்குப் பதில் அந்தக் குழந்தையைப் பலியிட்ட அக்பர் படைகளை நிர்மூலக்குவதற்கு ஆயதங்கள் செய்யலாம்.” என்றான்

“எனில் படைகளை நகர்த்துங்கள்” என்று கூற, அதற்கு உரிய கொம்புகள் முழங்கப் பட்டன.

இப்போதும் கிரண் தேவி ப்ரித்வியின் அணிவகுப்பிலேயே வர, ப்ரித்வியின் எண்ணங்கள் எல்லாம் எங்கோ இருந்தது.

“என்ன ஆயிற்று ?” என்ற எண்ணத்தில் கிருத்திகா, ப்ரித்வியின் அருகில் வரும்போது , சட்டென்று சுதாரித்துக் கொண்ட ப்ரித்விராஜ்”

சொல்லுங்கள் இளவரசி? என்றான்.

“தற்போதுதான் உபதளபதிகள் மூலம் தங்கள் நிலைமை அறிந்தேன். வருத்தப் படாதீர்கள் “ என்றாள்.

“மிகவும் சிறு வயது இளவரசி. எங்கள் குடும்பத்தின் முதல் வாரிசு. என்னிடம் அத்தனைப் பிரியமாய் இருப்பான். தற்போது வாள் பயிற்சியும், குதிரை ஏற்றமும் கற்றுக் கொண்டு இருந்தான். அவன் இல்லை என்பது மனிதனின் அநித்தியமான வாழ்விற்கு எடுத்துக் காட்டு. ஆனால் அவனின் இறப்பிற்குக் காரணமான அத்தனைப் பேரையும் பழி வாங்குவேன். ” என்று ஏதோதோ பேசியபடி வந்தான்.

இப்போது அற்புதாரான்ய மலையின் உச்சிக்கு வந்தபோது, அங்கிருந்த மக்கள் வாத்தியங்கள் முழங்க ராணா பிரதாப்பிற்கு வரவேற்பு அளித்தனர்.

எல்லோருக்கும் தங்கும் இடம் தயார் செய்யப்பட, ப்ரித்வி மட்டும் மன உளைச்சல் காரணமாக எதிலும் பங்கேற்றுக் கொள்ளவில்ல. பிறகு சற்று ஓய்வெடுத்துக் கொண்டு விட்டு, அங்கிருந்தே அந்த மலை முகட்டயே பார்த்து இருந்தான் ப்ரித்விராஜ்.

அப்போது கோவில் மணி அடிக்கவும், அருகில் சென்றுப் பார்க்க, சின்னக் கோவில் ஒன்று இருந்தது

ரானாவிற்கென செய்த சிறப்புப் பூஜைகள் முடியவும், வாத்தியங்கள் இசைக்க ஆரம்பித்தன. கடைசியாக ப்ரித்விராஜ் அங்கிருந்த நாகாபாணியை இசைத்தான்.

வருத்தமும், வீரமும் கலந்து இருந்த அந்த இசையில் கோபமும், ஆத்திரமும் கூடுதலாகவே இருந்தது. வெகு நேரம் இசைத்து முடித்தப் பின்பே சற்று ஆறுதல் அடைந்த ப்ரித்விராஜ், அங்கிருந்த மகாதேவரை வணங்கினான்.

அவனின் உணர்ச்சிகளை ராணா பிரதாப் மட்டுமில்லை , கிரண் தேவியும் நன்றாகப் புரிந்துக் கொண்டாள்.

ராணா ப்ரித்வியின் அருகில் வந்து “உன் மருமகனைப் பற்றிப் பெருமைப்படு. நம்மைப் போன்ற பெரியவர்கள் சிறியவர்களுக்கு முன் மாதிரியாக வாழ வேண்டும். அதை விடுத்து தங்கள் மேம்போக்கான வாழ்க்கை முறையால், பாதிக்கப் படும் இளங்குருத்துகளின் மரணம் இத்தோடு நிற்கட்டும். விரைவில் இதற்கொரு பதில் கொடுப்போம்” என்று அவனை அமைதிப் படுத்தி விட்டேத் தன் கூடாரத்தை நோக்கிக் கிளம்பினார்.

இதை எல்லாம் அறிந்த கிரண் தேவி, சுற்றியுள்ளவர்களை எண்ணி அமைதியாக அவனுக்கு கண்களால் ஆறுதல் அளித்தாள். அதை உணர்ந்த ப்ரித்விராஜ் அவளின் அருகாமை தனக்கு என்றும் வேண்டும் என்ற உணர்வுக்குள் ஆட்பட்டான்.

அதே சமயம் கிரண் தேவியும் தன் மனதைப் பற்றிய சிந்தனையில் அமர்ந்தாள்.

தொடரும்!

Episode # 22

Episode # 24

Go to Kaanaai kanne story main page

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.