(Reading time: 12 - 24 minutes)

தொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணித்துளிகள் - 16 - ஸ்ரீ

Unnodu naanirukkum mani thuligal

ஒரு பெண்ணின் நினைவென்ன செய்யும்

எனை கத்தி இல்லாமல் கொய்யும்

இதில் மீள வழி உள்ளதே

இருப்பினும், உள்ளம் விரும்பாது.. ஓ... யே....

 

விழிகளின் அருகினில் வானம்

வெகு தொலைவினில் தொலைவினில் தூக்கம்

இது ஐந்து புலன்களின் ஏக்கம்

என் முதல் முதல் அனுபவம் ஓ யே

 

ஒலியின்றி உதடுகள் பேசும்

பெறும் புயலென வெளிவரும் சுவாசம்

ஒரு சுவடின்றி நடந்திடும் பாதம்

இது அதிசய அனுபவம் ஓ யே

 

பெண்ணை சந்தித்தேன்

அவள் நட்பை யாசித்தேன்

அவள் பண்பை நேசித்தேன்

வேறென்ன நான் சொல்ல ஓ யே

தினைந்து தினங்கள் கடந்திருந்த நிலையில் அன்று ஷான்யாவிற்கு ஐஏஎஸ் தேர்வு இருந்தது.ஆத்விக் அவள் வீட்டிற்கே சென்று அவனே அழைத்தும் சென்றான்.

அதே நேரம் ரேஷ் தனது சென்னை வீட்டிலிருந்து கிளம்பி படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றிற்க்காக சென்று கொண்டிருந்தான்.அன்று அதிகாலை தான் டெல்லியில் இருந்து வந்தவன் ஒரு வித உற்சாகத்தோடே கிளம்பிச் சென்றான்.

அதற்கு முதல் காரணம் கடந்த வாரத்தில் வெளியிடப்பட்ட படத்தின் பாடல்கள் அனைத்தும் பெரிய அளவில் வரவேற்பை பெற்றிருந்தன.அதை விட முக்கியமான காரணம் ரினிஷாவை சந்திக்கப் போகிறான் என்பதே.முந்தைய நாளே குறுஞ்செய்தி அனுப்பி தனது மகிழ்ச்சியை தெரிவித்திருந்தாள் ரினிஷா

அதுமட்டுமன்றி நிகழ்ச்சி முடிந்ததும் ஆத்வி ஜீவி ஜெயந்தோடு மதிய உணவுக்கு ஏற்பாடு செய்திருந்தான்.அதற்கு ரினிஷாவையும் அழைத்திருந்தான்.அத்தனையும் சேர்ந்து ஒருவித உற்சாகத்தை கொடுத்திருந்தது அவனிடத்தில்.

அந்த தொலைகாட்சி அலுவலகத்தின் வாசலை அடைந்தவன் உள்ளே செல்ல அங்கு சற்று நேரத்தில் ரினிஷாவும் வந்தாள்.இவனைப் பார்த்தவள் வேகமாய் கையசைக்க வந்து சுற்றம் உணர்ந்து விழி சிமிட்டி சாதாரணமாய் கைக் குலுக்கிக் கொண்டாள்.

ப்போஸ்ட் ப்ரொடக்ஷன் தான் ஆரம்பிக்குறாங்கனு கேள்விப் பட்டேன்.இனி சென்னை தானா?”

ஆமா ரினிஷா ஆல்மோஸ்ட் எல்லா வொர்க்கும் ஓவர் தான் சாங்க்ஸ் நல்ல ரெஸ்பான்ஸ் வாங்கிருக்குறதுனால படமும் எவ்ளோ சீக்கிரம் முடியுமோ ரிலீஸ் பண்ணலாம்னு இருக்காங்க..”

.கே ஓ.கே..”,அவர்கள் இருவரும் சாதாரணமாய் உரையாடுவதையே அத்தனை கோணங்களில் படம் பிடித்துக் கொண்டிருந்தனர்.இன்னும் சிறிது நேரத்தில் சோஷியல் மீடியாவில் புகைப்படம் பரவ ஆரம்பித்து விடும்.

இருவரும் இதையே மனதினுள் நினைத்தவாறு ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர்.அதன் பின்னான பேட்டி முடிந்து இருவரும் ஒன்றும் அறியாதவர்களாய் அவரவர் கார்களில் சென்று விட ரேஷ் முதலில் அந்த ரெஸார்ட்டை அடைந்திருந்தான்.

அங்கு ஏற்கனவே ஆத்வி ஜீவிகா ஜெயந்த் அவனுக்காக காத்திருந்தனர்.இவனைப் பார்த்ததும் மூவரும் நலம் விசாரித்து அவரவர் இருக்கையில் அமர ரினிஷாவும் அதற்குள் வந்திருந்தாள்.

ஹாய் கைஸ்..”

ஹலோ ரினிஷா வாங்க எப்படியிருக்கீங்க?”

ஜி நான் சூப்பரா இருக்கேன்..நீங்க எப்படி இருக்கீங்க..ப்ரோ நீங்க எப்படியிருக்கிங்க?”

எல்லோரும் நலம்..நலம்..ஆன் ஸ்க்ரீனை விட நேர்ல இன்னும் க்யூட்டா இருக்கீங்க..இல்ல ரேஷ்?”,என்றவள் ரேஷ்வாவை பார்த்து கண்ணடிக்க அவனோ ஒரு நொடி தடுமாறி பின் வாய்க்கு வந்ததை பேசி வைத்தான்.

என்ன ஆத்விக் ஷான்யாவை காணும்?”

அவளுக்கு இன்னைக்கு எக்ஸாம் முடிச்சுட்டு வந்துட்டே இருக்கா..”

கலிகாலம் கல்யாணம் பண்ணி புள்ள குட்டியை படிக்க வைக்க சொன்னா இவன் ஆளை படிக்க வச்சு எக்ஸாம்க்கு கொண்டு போய் விட்டுட்டு வரான்..இதெல்லாம் என்னனு சொல்றது!!”,என்று ஜீவிகா சீரியஸாய் கூற அனைவரும் சிரித்துவிட ஆத்விக் அவளை முறைத்தான்.

விடு விடு ஆத்வி பையா..நமக்குள்ள இதெல்லாம் ஜகஜம்..என்ன வேணா சொல்லு நீ நிஜமாவே க்ரேட் டா..இந்த மனசு எல்லாருக்கும் எல்லாம் வராது..”

ஜி சொல்றது ரொம்ப கரெக்ட் ஆத்வி..அவளோட எய்ம் அச்சீவ் பண்ண வைக்கணும்னு நினைக்குற பாரு..தட்ஸ் சோ லவ்லி..”

என்ன ரேஷ் ரொம்ப பீல் பண்ணி பேசுறீங்க..உங்களுக்கும் லவ் எதுவும் ஓகே ஆய்டுச்சா..தைரியமா சொல்லுங்க அடுத்த காதலுக்கு மரியாதை பண்ணிடுவோம்.”

என்ன ஏன் ஜி மாட்டிவிடுறநான் நல்லாயிருக்குறது பிடிக்லையா உனக்கு?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.