(Reading time: 12 - 24 minutes)

வேணாம் ரேஷ் அவசரப்பட்டு வாயை விடாதீங்க பின் விளைவுகள் எப்படி வேணா இருக்கலாம்..”,என்றவாறு கண்ணடிக்க ஆத்விக் அதை கண்டுகொண்டு ஆச்சரியமாய் ஜீவிகாவிடம்,

ஜி!!!!!!உண்மையாவா???”

கற்பூரம் டா ஆத்வி நீஅப்படிதான் நினைக்குறேன்..ஆனாலும் இன்னும் கன்ஃபார்ம் ஆகல.”

என்ன நடக்குது இங்க??ஒண்ணும் புரில நீங்க பேசிக்குறது..”

போக போகப் புரியும்..இந்தப் பூவின் வாசம் தெரியும்..”

ஜி!!!!”

கத்திரிக்காய் முத்தினா கடைவீதிக்கு வந்து தானே ஆகணும் ரினி டியர்வெய்ட் அண்ட் வாட்ச்..சரி எனக்கு ரொம்ப பசிக்குது..டேய் அவ எக்ஸாம் எழுதின வரை போதும் டா வரச் சொல்லு..”

அவ கஷ்டப்பட்டு படிச்சு ஐஏஸ்க்கு எழுதுறா உன்னால ஒரு பத்து நிமிஷம் பொறுக்க முடியாதா?”

ஓ அவ்ளோ ஆய்டுச்சா பிகரை பார்த்தவுடனே ப்ரெண்டை கழட்டி விடுற இல்ல..ஆத்விக்!!!இந்த நாள்இதை உன் டைரில குறிச்சு வச்சுக்கோ..”

டைரியெல்லாம் இல்ல நீ கிளம்பு நாங்க மச்சானுக்கு நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணி வச்சுக்குறோம்..”

ம்ம் கிழிச்ச உன் ஆளை கரெக்ட் பண்ண ஐடியா கொடுத்ததே நான் இதுல என் புருஷனுக்கு நீ பொண்ணு பார்க்க போறியா?நீ பார்த்தாலும் அவரு ஒண்ணும் பின்னாடியே போய்ட மாட்றார் தெரிஞ்சுக்கோ..இல்லங்க?”

ஜீவி அதிர்ஷடம் ஒரு தடவை தான் கதவை தட்டுமாம் அப்போவே அதை அனுபவிக்குறவன் தானம்மா புத்திசாலி..”

ம்ம் அப்படியா இப்போ எது வந்து தட்டுதுனு பாருங்க..”,என்றவள் தன் முன்னிருந்ததட்டை எடுத்து முதுகிலேயே ஓங்கித் தட்டினாள்.அதற்குள் ஷான்யா அங்கு வந்துவிட அனைவரையும் பார்த்து தயங்கியவாறே அருகில் வந்தாள்.

ஹே ஷான் வாங்க வாங்க..எக்ஸாம் எப்படி பண்ணிருக்கீங்க?”

ஹாய்..ம்ம் நல்லா பண்ணிருக்கேன்..”

என்னடா ஆத்வி நம்ம ரேஷை விட உன் ஆளு ரொம்ப பம்முறாளே!ப்யூச்சர்ல செமயா கவனிப்பாளோ?”

அவளே டென்ஷன்ல இருக்கா எதையாவது சொல்லி என் வாழ்க்கையை பங்கம் பண்ணிறாத..அப்பறம் வாழ்க்கைல எனக்கு கல்யாணமே நடக்காது ஜி!”

என்னடா இப்படி ஓபனா ஒத்துக்குற..சரி விடு பொழச்சு போகட்டும் நீ இன்ட்ரோவை ஸ்டார்ட் பண்ணு..”

ஒவ்வொருவராய் ஆத்விக் அவளுக்கு அறிமுகப்படுத்தி வைக்க சிநேகப் புன்னகையோடு அனைவரையும் பார்த்து தலையசைத்தாள்.

ஆனாலும் ஷான் நீங்க எங்க ஆத்விக்கை ரொம்ப சுத்தல்ல விட்ட காரணத்தினால் அதுக்கு பனிஷ்மென்டா இப்போ எங்க முன்னாடியே ப்ரோப்போஸ் பண்ணணும் நீங்க”,என்று ரேஷ்வா கூற அனைவரும் ஆமோதிப்பாய் உற்சாகப்படுத்தினர்.

ஆனாலும் ரேஷ் ஒரு ஆணோட மனசு இன்னொரு ஆணுக்குத் தான் புரியும்னு நிருபிச்சுட்டீங்க.நாளுக்கு நாள் நல்ல இம்ப்ரூவ்மெண்ட் போங்க..”

பின்ன உன் ப்ரெண்டா இருந்துட்டு இந்த அறிவு கூட இல்லைனா எப்படி ஜி..மச்சான் மனசுல என்ன நினைக்குறாருனு கூட சொல்லிடுவேன் ஆனாலும் அப்பறம் அவர் வாங்கபோற அடியை பார்க்கும் மனதைரியம் எனக்கு இல்லாத காரணத்தினால தான் அமைதியா இருக்கேன்...”

யோவ் ரேஷ் நா உங்களுக்கு என்ன யா பாவம் பண்ணேன்..காலையிலே இருந்து என்னையே எல்லாரும் தாக்குறீங்க?”

மாமா ஆனாலும் இன்னைக்கு இருக்கு உங்களுக்கு..வீட்டுக்கு வாங்க..”

ஐயோ என் பொண்டாட்டி பாசமா பேசுறாளே அப்போ இன்னைக்கு தீபாவளி கன்பார்ம்..”

அவர்கள் அடிக்கும் லூட்டியைப் பார்த்து ரினிஷா கட்டுப்படுத்த முடியாமல் சிரித்துக் கொண்டிருக்க லேசாய் சாய்ந்தவள் ரேஷ்வாவின் கரம் பற்றிக் கொண்டு சிரிக்கத் தொடங்கியிருந்தாள்.

ரேஷ்வா ஒரு நொடி தன்னை மறந்து அவள் கைகளையே பார்த்திருந்தான்.பின் நொடியில் தன்னை சீர்படுத்தியவனாய் அவளிடம்,

ஹே ரினி ஆர் யூ ஓ.கே?”

“”ஹா ஹா ரேஷ் சத்தியமா என்னால முடில இப்படி ஜாலியா பேசி எத்தனை வருஷம் ஆச்சு..யூ கைஸ் ஆர் மேட் மை டே..ஜி இனி ஆத்வியை விட நான் தான் உங்க பெஸ்ட் ப்ரெண்ட் ஓ.கே தானா?அதான் அவர் கமிட் ஆய்டாரு இல்ல.”

இது கூட நல்லா இருக்கே..இந்த மொகரகட்டையை பார்த்து பார்த்து எனக்கும் போர் அடிச்சு போச்சு..வாடிச் செல்லம் நாம ப்ரெண்ட் ஆகிக்கலாம்..”,என்றவள் இரு கைகளையும் விரித்தவாறு அவள்புறம் திரும்ப இருக்கையில் இருந்தவாறே இருவரும் கட்டிக் கொண்டனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.