(Reading time: 12 - 24 minutes)

சம்மந்தம் இல்லாத ஏரியா அது..”

அங்க என்ன இரண்டு பேரும் காதை கடிச்சுட்டு இருக்கீங்க?”

சும்மா பேசிகிட்டு இருந்தோம் மாமா..”

ஜி நீங்க இருக்கீங்களே..எப்படி தான் ப்ரோ உங்களை சமாளிக்குறாரோ தெரிலயே..”

நான் எங்க ரினிஷா சமாளிக்குறேன்..அப்படியே அது போற போக்குல போக வேண்டியது தான்..குரங்குக்கு வாக்கப்பட்டா மரத்துக்கு மரம் தாவித் தானே ஆகணும்..”

இன்னைக்கு என் ஆளு கொஞ்சம் ரொம்ப பொங்குற மாதிரி தெரியுதே உங்களை இதுக்கு மேல சும்மா விடுறதா இல்ல “,என்றவள் கையிலிருந்த தண்ணீரை அவன் மீது ஊற்றி விட அவன் அவளைப் பிடிப்பதற்குள் அங்கிருந்து ஓட ஆரம்பித்திருந்தாள் ஜிவிகா.

அத்தனை ஆர்பாட்டங்களும் முடிந்து ஒரு வழியாய் அனைவரும் கிளம்பத் தயாராகினர்.ரேஷ்வாவும் ரினிஷாவுமாய் மற்றவர்களுக்கு விடை கொடுத்து வழியனுப்பிவிட்டு கிளம்பத் தயாரான நேரம் ரினிஷாவின் மொபைலிற்கு வாட்ஸ் அப் நோட்டிபிகேஷன் வர அதை பார்த்தவள் ஒரு நொடி லேசான புன்னகையை உதிர்த்தாள்.அந்த நேரம் ரேஷ்வா ரினிஷாவின் அருகிலே வந்தவனாய்,

என்ன ஆச்சு ரினி?”

இங்க பாருங்களேன் காலையிலே கொடுத்த இன்டர்வியூ அதுக்குள்ள காசிப் பேச ஆரம்பிச்சுடாங்க”,என்றவள் யூடியூப் வீடியோ ஒன்றை அவனிடத்தில் காட்டினாள்.காலையில் இருவரும் கைக் குலுக்கி இரண்டொரு வார்த்தை பேசியிருந்த க்ளிப்பிங்கை போட்டு அற்கு கண் காது மூக்கு என அனைத்தும் வைத்திருந்தனர்.

அந்த வீடியோவின் கமெண்ட்களில் அவர்கள் பொருத்தத்தை பற்றி அத்தனை கமெண்ட்கள்.அதைப் பார்த்தவனும் சிரித்தவாறே அவளிடம் மொபைலைக் கொடுத்துவிட்டு ஒரு நொடி இடைவெளிக்குப் பின்,

ரினி ஜீ அண்ட் ஜெயந்தை பாக்குற அப்போ எல்லாம் எனக்கு ஒண்ணு தோணிச்சு சொல்லவா?”

என்ன ரேஷ் சொல்லுங்க ஏன் இவ்ளோ ஃபார்மலா பேசுறீங்க?”

இல்ல அவங்களோட அண்டர்ஸ்டாண்டிங் மாதிரியே இப்படி ஒரு ப்ரெண்ட்ஷிப்போட என்னோட மீதி வாழ்க்கையை உன்கூட ஷேர் பண்ணிக்கணும்னு தோணுது ரினி.ஐ திங்க் ஐ அம் இன் லவ் வித் யூ..”

ஒரு நொடி ஆச்சரியம் அதிர்ச்சியோடு அவனை நோக்கியவள் சூழ்நிலை உணர்ந்தவளாய் தன்னைச் சீர்படுத்திக் கொண்டு,”தெரில ரேஷ் இதுக்கு எப்படி ரியாக்ட் பண்ணணும்னு..ஆனாலும் நீங்க சொன்ன விஷயத்தை வேண்டாம்னு சொல்றதுக்கும் என்கிட்ட பெரிய காரணம் எதுவும் இல்ல.வில் திங்க் அபௌட் இட்.”

ரினி!!”

இல்லை தப்பா எதுவும் எடுத்துக்கல நிஜமாவே எனக்கும் சில நேரத்துல இப்படி தோணிருக்கு..ஆனா அது லவ்வா இல்லையானு பட்டிமன்றம் நடத்தி அப்படியே விட்டுருக்கேன்.இப்போ நீங்களே கேக்குற அப்போ அது லவ் தானோனு தோணுது இருந்தாலும் இன்னைக்கு ஒருநாள் டைம் கொடுங்க யோசிச்சு சொல்றேன்.”

தேங்க்ஸ் பார் தி அண்டர்ஸ்டாண்டிங்..டேக் யுவர் ஓன் டைம் ரினி..டேக் கேர்”,என்றவன் கார் கதவைத் திறந்து விட உள்ளே அமர்ந்தவளாய் அவனுக்கு கையசைத்துச் சென்றாள்.

தொடரும்...

Episode # 15

Episode # 17

Go to Unnodu naanirukkum manithuligal story main page

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.