(Reading time: 12 - 24 minutes)

ஷப்பா முடில..போதும் போதும்..ரேஷ் இவ சும்மாவே ஆடுவா..இப்போ என்னனா மெஜாரிட்டி லைக்ஸ் வாங்கிக்குறாளே என்ன பண்ணலாம்?”

என்ன ஆனாலும் மச்சான் நம்ம பக்கத்துல இருக்குறார் அதனால கவலைப்படாத டா ஆத்வி..”

யாரு இவரு..ம்ம்ம்..ஜீவிகா ஆர்மியோட கொபசெ இவரு தான்..ஏன் ரேஷ்..”

கொபச வா அப்படினா?”

அதான்ம்மா கொள்கை பரப்புச் செயலாளர்..என்ன ரினிஷாம்மா ஜென்ரல் நாலெட்ஜ்ல ரொம்ப வீக்கா இருக்கியே

ஜி லவ் யூ ஜி..நானும் உங்க ஆர்மியில் ஒரு தொண்டன்..”

ஜீவிகாவோடு சேர்ந்து ரினிஷா செய்யும் அத்தனை சேட்டைகளையும் சத்தமில்லாமல் ரசிப்பதே ரேஷ்வாவின் முழு நேர வேலையாய் இருந்தது.சற்று நேரத்தில் ஷான்யாவே ஓரளவு சாதாரணமாக பழக ஆரம்பித்திருந்தாள்.

ஒருவழியாய் அனைவரும் உணவில் கவனமாய் இருக்க கை கழுவச் சென்ற ஆத்விக் ஷான்யா வருவதைக் கண்டுகொண்டு செடிகளுப்பின் சென்று மறைந்து நின்றான்.ஷான்யா வந்து கை கழுவி வெளியே வரும் வரை காத்திருந்தவன் சட்டென அவளைத் தன்புறம் இழுத்திருந்தான்.

ஆத்வி என்ன பண்றீங்க?”

ம்ம் என் ஆளு என்னை கண்டுக்காம இருக்குற மாதிரி என்னாலையும் இருக்க முடியுமா..லவ் சொல்லி வீட்ல பெர்மிஷன் வாங்கின அப்பறம் கூட சுதந்திரமா சைட் கூட அடிக்க முடில இந்த கொடுமையெல்லாம் எனக்கு தான் நடக்கும்.”

யாராவது வந்துற போறாங்க வாங்க போலாம்..”

அதெல்லாம் ஏற்கனவே ஜி பார்த்துட்டு போய்ட்டா..”

ஐயோ!!”

ஷ்ஷ்ஷ்..ஏன் டீ கத்துற..வேற யாராவது வந்தா என்னை தான் தப்பா நினைச்சுருவாங்க..ஒரு இரண்டு நிமிஷம் அமைதியா இரு நானாவே போய்டுவேன்.”

சம்மதமாய் அமைதி காத்தவள் தலைகுனிந்து நிற்க அவள் கரங்களை எடுத்து தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டவனாய்,

எக்ஸாம் எப்படி பண்ணிருக்க?”

நல்லா பண்ணிருக்கேன்..கண்டிப்பா பாஸ் பண்ணிடுவேன்..”

அப்போ அடுத்த முகூர்த்தத்துலேயே கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொல்ற..”

ஆத்வி..”

சொல்லு..”

லவ் யூ சோ மச்..”

ஷான்!!!”

நிஜமா ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.நடக்குற எல்லாத்துக்கும் சத்தியமா நீங்க மட்டும் தான் காரணம்.நீங்க கிடைக்காம போய்ருந்தா லைஃப்ல நிறைய விஷயத்தை மிஸ் பண்ணிருப்பேன்.

உங்களை மாதிரி ஒரு ஹஸ்பண்ட்,அங்கிள்,ஆன்ட்டி இப்படி அழகான ப்ரெண்ட்ஸ் எல்லாத்தையுமே மிஸ் பண்ணிருப்பேன்.தங்க்ஸ் பார் எவ்ரிதிங் ஆத்வி..லவ் யூ ஆல்வேஸ்..”ஆதரவாய் அவன் தோள் சாய்ந்து கொண்டாள்.

ஷான் வாழ்க்கைல எப்பவுமே நாம நினைச்சு பார்க்காத விஷயங்கள் தான் அதிகமா நடக்கும்.நம்ம விஷயமும் அப்படிதான்.உண்மையை சொல்லணும்னா எனக்கு பெரிய ஹோப்னு எதுவுமே இல்ல.அதுவும் நீ பொண்ணு பார்க்க வராங்கனு சொன்னப்போ ஐ வாஸ் டோட்டலி டவுண்.இதுக்கு மேல எதாவது மேஜிக் நடந்தா தான் உண்டுனு தான் நினைச்சேன்.

பட் இட் ஹப்பண்ட்..லவ் யூ ஷான்யா...உனக்கு இப்போ இந்த செகண்ட் ப்ராமிஸ் பண்றேன் லைஃப்ல இதுவரை நீ அனுபவிக்காத அத்தனை சந்தோஷமும் மட்டும் தான் உன் வாழ்க்கை மொத்தமும் கிடைக்கும்.அதுக்கான முழு பொறுப்பும் நானா இருப்பேன்.ஹாப்பியா இரு..”

அத்தனை அத்தனை உணர்வுகள் அவளின் விழிகளில் காணக் கிடைக்காத அரிய பொருளை ஆசை தீரப் பார்த்து கண்களுக்குள் நிப்பிக் கொள்ளுவது போன்று கிடைத்த நொடிகளில் அவனைத் தன்னுள் படம்பிடித்து வைத்துக் கொண்டாள்.ஆதரவாய் அத்தனை நேரம் அவளைத் தாங்கியிருந்தவனும் இன்னுமாய் இதமாய் தன்னோடு சேர்த்து உச்சந்தலையில் அழுந்த இதழ் பதித்து விடுவித்தான்.

அதன்பின் இருவருமாய் மற்றவர்களைத் தேடிச் சென்று அவர்களோடு சேர்ந்து கொள்ள ஜீவிகா வேண்டுமென்றே பலமாய் இருமி தொண்டையை செருமினாள்.

என்ன கொழுப்பா?”

ஆமா நீ தான் சோறு போட்டு வளர்க்குற பாரு..ஆனாலும் டா ஆத்வி உனக்குள்ளேயும் ஒரு காதல் மன்னன் இருந்துருக்கான்னு நினைச்சா கண்ணு கலங்குதுடா..”

ம்ம் மச்சானை பார்த்த உடனே நீ எப்படி அந்தர் பல்டி அடிச்சியோ அதே மாதிரி தான் இதுவும் ஜீ..உங்க ரொமான்ஸ் எல்லாம் உலகப் பிரசித்தம் குழந்தாய்..”

மூஞ்சிக்கு முன்னாடி புகழாத டா ஐ ஃபீல் ஷை யூ நோ..”

என்ன கருமத்தை வேணா பண்ணு ஆனா வெட்கத்தை மட்டும் படாத ஜி சகிக்க முடில..உனக்கு

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.