(Reading time: 21 - 42 minutes)

தொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 08 - கண்ணம்மா

Un manathil iruppathu naanum en kathalum mattume

சூடான தேநீர் கோப்பையுடன் நீ .. அமர..

அதை விட .. சூடான என் மூச்சுக் காற்று உன் காதில் உரச ..

என் இருக் கை இடையில் நீ...

 உன்னை என் மடியில் அமர்த்தி...

உன் கோப்பையிலேயே நானும் அருந்தவேண்டும்...

என் முழுக் காதலுக்கும் சொந்தமானவள்

நீ மட்டுமே என்பதை நொடிக்கொரு முறை நான் நிரூபிக்க வேண்டும் ....

என் ஆழமான முத்தத்திலும்,

உன் எலும்புகள் நொறுங்கும்

 என் இறுகிய அணைப்பாலும் !!!

என் வாழ்க்கையை இப்படித் தான்னடி நான் வாழ வேண்டும் உன்னுடன்  என்று ஆசை மனதில் இருப்பதை வெலியே சொன்னால் அதை நீ ஏற்பாயா அல்லது என் எண்ணப் போக்கைக் கண்டு அஞ்சி என்னைத்தவிர்பாயா. என்னை என்னால் கூட புரிந்து கொல்ல முடியவில்லையடி பெண்ணே. கண்ட முதல் நிமிடமே நான் உன்னோடு பல ஆண்டுகள் வாழ்ந்தார்போல் ஒரு எண்ணம். என் கனவில் நான் தினசரி இந்த மூன்று ஆண்டுகளாக காணும் உன்னை என் விட்டில் என் தாயோடு. அதுவும் அவரை நீ குழந்தையாக கவனித்துக் கொல்கிறாய். என் மனைவியாகவே உன்னை நினைக்கத் தோன்றுகிறது. உன்னைப் பார்த்து முழுதாய் ஒரு நாள் ஆகவில்லையா டி பெண்ணே? என் மனதில் முழுவதுமாய் நீ நீ நீ மட்டுமே.

     தன் தாத்தா பாட்டி இருவருக்குப் பூஜையை முடித்தவுடன் மனதில் கொஞ்சம் வலி பரவ அதை மறைக்கவே மொட்டை மாடி ஊஞ்சலை நாடினாள் பாசமான பேத்தி. அவள் கவலைகளைப் போக்கவே வந்ததைப் போல் பெய்தது மழை. அவ்வளவு தான் பௌவ்வியின் மனம் உற்சாகம் கொண்டது. மழையில் சிறு பிள்ளையாய் வேடிக்கை பார்த்து மழைத்தண்ணீரை கையில் ஏந்தி விளையாடிய பௌவியை கனிமா அதட்டி அமர வைத்து தேணிர் கோப்பையை அவள் கையில் கொடுக்க அதை வங்கியாவாள் மழையை ரசித்தவண்ணம் தேணிரை அருத்தினாள்..  

     அவளால் அப்படி அமைதியாக இருக்க முடியுமா என்று ரஞ்சித அவளைக் கிண்டல் செய்ய மென்மாய் தலையாட்டி சின்னப் புன்னகையை இதழ்ழோரமாக சிந்தினாள். லக்ஸ் ஈஷ்வரைத்தான் கவனித்துக் கொண்டு இருந்தாள். அவன் எங்கோ தன்னை மறந்து பார்ப்பதை கவனித்து அவன் பார்வையை தொடர்ந்தால் அது வந்து அடைந்த இடம் தான் பௌவ். அங்கு அவள் சிரித்தால் இங்கு இவன் சிரித்தான். அவள் விளையாடுவதை ரசித்தான்.

பரத கலையில் நன்கு பயிற்சி பெற்ற தன்னால் கூட இவன் அளவிற்கு பாவங்களை காட்ட முடியாதோ என்று இவளுக்கு தென்றியது. அவனை களாய்களாம் என்று நினைக்க அவள் செல் அடித்தது. அடுத்த நொடி லக்ஸ் சிட்டாகப் பறந்து விட்டாள், பாய் பௌவ் நான் 7 க்கு அங்க வந்துடுவேன் நீ ஆண்டி கூட வந்து சேர் என்று ஓட்டத்திலே சொன்னபடி ஓடினாள். செல்லும்போது மறக்காமல் டேய் ரஞ்சூ உன் ஆளு வெய்ட்டிங் போடா என்று அவனையும் கிளப்பி விட்டே சென்றாள்.

நண்பர்கள் சென்றவுடன் கனிமாவையும் அவள் கிளம்ப சொல்ல அவள் கையில் ஒரு கவரைத் திணித்து உன் மாமா உனக்காக வாங்கி வந்தது போய் இந்த டெரஸ்சை நீ போட்டுட்டு வரனும் சரியா என்று அவள் மறுக்க முடியாத அளவில் கனி அவர் வேலையைச் சரியாக செய்தார். அவள் அவர் செல்லும் வழியையே பார்த்து சிரித்தபடி அமர்ந்து இருந்தாள். இவள் எல்லா அசைவுகளையும் சற்று தல்லி இருந்த தடுப்பு சுவருக்கு அப்பால் அமர்ந்து கவனித்தவனுக்கோ, தனந்தனியாக இருக்கிறாள் இப்வாது போய் பேசலாம் என்றால் பேட்ச்சி வரவில்லை. இவன்னைப் பார்த்துத் தான் அனைவரும் பேச அஞ்சுவார்களா இதோ புவி தலைகீழாக சுழலுதே...

அவன் எப்பவும்மே மனதை அப்படியே காட்டுபவன் அல்ல. அதனால் தானோ என்னமோ தொழிலில் அவனின் அடுத்த அடி என்ன என்று பலர் அஞ்சுவர். இங்கு அவன் செய்வது பிஸ்னஸ் டீல் அல்ல காதல், இதை வெளிப்படுத்தினாள் மட்டுமே இங்கு அவனுக்கு வெற்றி என்பதைப் புரிந்து கொல்ல அவனுக்கு எத்தனைக் காலம் பிடிக்குமோ? அவன் புரிந்து கொல்லும் முன் அவன் வாழ்கையில் எத்தனை சூறாவளி வீசப் போகிறதோ ? இறைவனுக்கே வெளிச்சம்.

அவள் கிளம்பியதும் அவனும் தன் அறைக்கு வந்து என்ன உடை அணியலாம் என்று அவன் யோசித்தான். அவன் இவ்வாறு யோசித்தது எல்லாம் கிடையாது அது இவனுக்கே ஆச்சரியமான விசையமே.. அவன் கப்போர்டில் இவன் அணிய சில புது ஆடைகளும் இருந்தனர். எல்லாம் அவன் இரு தம்பிகள் நிக்ஷ் மற்றும் சஞ்சூவின் வேலை. அவர்கள் அணிய புது உடை எப்போதெல்லாம் வாங்குகின்றனரோ அப்போது இவனுக்கும் வாங்கி விடுவர். யார் ஊர்ரில் இல்லை என்றாலும் இந்த வழக்கம் துடரும். அவர்கள் அறைக்கு அதைக் கனி சேற்த்துவிடுவார்.

 

இவனும் இந்த ஒரு வருடம் அயல் நாட்டில் தங்கியதில் அவர்களுக்கு ஒரு சூட்கேஸ்

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.