(Reading time: 8 - 15 minutes)

“எப்படி பாப்பா இப்படி படம் பிடிக்கிற” தேன்மொழியைப் பெருமையாக அள்ளிக் கொஞ்சினாள்.

“எப்படி அக்கா இவ்வளவு அழகா லேஸ் வச்சு தைத்திருக்கீங்க” தனது அன்னை வடிவமைத்த ஆடையில் அழகிய லேஸ் வேலைப்பாடு செய்த அண்ணியை பாராட்டினாள் தேன்மொழி.

பாரீசில் நடக்கும் சர்வதேச ஆடை வடிவமைப்பு போட்டியில் கலந்து கொள்ள வடிவமைத்த ஆடைகளை எல்லாம் தேன்மொழிக்கு அணிவித்து மகிழ்ந்தார் கயல்விழி.

“அம்மா எவ்வளவு அழகா இருக்கு. கண்டிப்பா நீங்களும் அக்காவும் தான் வின் பண்ணுவீங்க” என்று அன்னையைக் கட்டிக் கொண்டு தேன்மொழி வாழ்த்தினாள்.

சர்வதேச மரைன் போட்டோகிராபி போட்டிக்கு தானும் படங்களை அனுப்ப உத்தேசித்து இருப்பதாக குடும்பத்தினரிடம் தெரிவித்தாள்.

“அல்டாப்ரா தீவுக்குப் போகணும். அங்கே தான் பவழப் பாறைகள் மற்றும் அரிய வகை கடல்வாழ் உயிரனங்கள் இருக்கு. இன்னும் மனிதர்கள் தொடாத தீவுக் கூட்டம் எல்லாம் அங்கே இருக்கு” என்று தேன்மொழி சொல்ல அது எங்கே இருக்கிறது என்று இளங்கோ இளமாறன் இருவரும் கேட்டறிந்தார்கள்.

“சில இடங்களுக்கு மட்டும் தான் டூரிஸ்ட் அனுமதி உண்டு. அங்கே ரிசர்ச் ஸ்டேஷன் உண்டு. மரைன் சயின்டிஸ்ட் எல்லாம் அங்கே தங்கி ஆராய்ச்சி செய்றாங்க. நானும் அங்கே போய் தங்கி அங்கிருக்கும் கடலை எக்ஸ்ப்ளோர் செய்ய போறேன்” என்று மிகுந்த உற்சாகத்தோடு கூறினாள்.

“சயின்டிஸ்ட் ஆராய்ச்சி செய்யும் இடத்தில உனக்கு அனுமதி கிடைக்குமா” வானதி சந்தேகம் கேட்டாள்.

“என்னோட மரைன் போட்டோகிரபி கைட் லண்டன்ல இருக்கார்ல. அவர் பிரண்ட் இங்கே ஆராய்ச்சி செய்துட்டு இருக்காங்க. அந்த மேடம் கிட்ட பேசினேன். அவங்க எப்போ வேணும்னாலும் வான்னு சொன்னாங்க” அவள் சொல்ல அனைவரும் தாத்தாவைப் பார்க்க அவருக்குமே இது புது தகவலாக இருந்தது.

“தாத்தா ஊருக்கு போகணும்னு சொன்னாரே. அந்த சமயத்தில் இங்கே தனியா இருக்கவும் எனக்கு போர் அடிக்கும்.  நானும் ஆதியும் அந்த ஒரு வாரம் அல்டாப்ரா போறோம்” தேன்மொழி கூற இப்போது தாத்தா திகைத்துப் போனார்.

“என்னுடன் நீ வருவாய்ன்னு நான் நினைத்துக் கொண்டிருக்கேன்” என்று அவர் சொல்லவும் தேன்மொழி செல்லம் கொஞ்சினாள்.

“அந்த மேடம் இன்னும் கொஞ்ச நாள் தான் இங்கே இருப்பாங்க தாத்தா. அவங்க வான்னு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.