(Reading time: 8 - 15 minutes)

நண்பரும் தேன்மொழியின் குருவும் ஆனவர் தேன்மொழி பற்றி மிகவும் உயர்வாக கூறியதை தாத்தாவிடம் கூறி சிலாகித்தார்.

“இந்த சின்ன வயதில் இவ்வளவு ஆர்வம் கொண்ட பெண்ணைப் பார்க்க ஆசையாக இருக்கு” என்றவர் அவர்கள் தங்குவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தார்.

சொர்கத்தை ஏன் எல்லோரும் விண்ணில் தேடுகிறார்கள். கடலுக்குள் என்றாவது தேட முயற்சித்தார்களா.

இதை விட சொர்க்கம் என்று ஒன்று இருக்க முடியுமா.

தினம் விடியலிலே கடல் புறாவில் செல்லும் தேன்மொழியும் ஆதியும் அந்தி சாயும் முன் தங்கள் கூடாரம் அமைந்திருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்துவிடுவார்கள்.

“பாருங்க தாத்தா எவ்வளவு பெரிய ஆமை” தேன்மொழி எடுத்த புகைப்படங்களை அனைவரிடமும் காண்பிக்க அங்கிருந்த ஆராய்ச்சியாளர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

அல்டாப்ராவை சுற்றி தேன்மொழியும் ஆதியும் ஆனந்தமாக வலம் வந்தனர்.

“ஆதி நாளைக்கு தெற்கே போவோம்” என்று மேப்பில் தேன்மொழி புள்ளி வைத்துக் காட்டினாள்.

“அவ்வளவு தூரமா இருக்கே. சாயிந்திரம் எப்படி திரும்ப முடியும்” ஆதி தேன்மொழியிடம் கேட்டான்.

“நாளைக்கு பௌர்ணமி. கடலில் அலைகள் எழும்பும். கடலின் ஜீவராசிகள் எப்படி ரியாக்ட் செய்யுதுன்னு பார்க்கலாம்” என்று ஆதியிடம் கூறினாள்.

வழக்கம் போல தாத்தாவிடம் சொல்லிக் கொண்டு கிளம்பினாள்.

பகல் எல்லாம் டைவ் செய்வதும் படங்கள் பிடிப்பதும் பின் படகில் வந்து சிறிது ஓய்வு எடுப்பதுமாக கழித்தவள் அந்தி சாயும் வேளையில் மீண்டும் கடலுக்குள் பாய்ந்தாள்.

அன்று நிலவோடு கடலுக்கு பிணக்கு போலும்.

சட்டென வானிலை மாற கடலில் திடீர் கொந்தளிப்பு.

எப்போதும் பௌர்ணமி போது ஏற்படும் அலைகளின் சீற்றமாக இல்லமால் வித்தியாசமாக இருக்கவும் கடல் புறா அலைகளில் நிலைகொள்ளாமல் தத்தளித்தது.

தேன்மொழி இன்னும் திரும்பியிருக்காத நிலையில் படகை சமாளிக்க வகையறியாது ஆதி தவித்துக் கொண்டிருந்தான்.

அபாய சங்கேதத்தை அறிவித்தவன் அப்போது தான் படகு அலைகளில் அடித்துக் கொண்டு வேறு திசையில் சென்று கொண்டிருப்பதை உணர்ந்தான்.

அலையும் காற்றும் அவனது படகை ஆராய்ச்சி குழு இருந்த தீவை நோக்கியே செலுத்தியிருக்க தாத்தாவும் மற்ற ஆராய்ச்சியாளர்களும் படகை கண்டு நிம்மதி கொண்டனர்.

ஆனால் படகில் ஆதி மட்டுமே பாதி மயங்கிய நிலையில் இருக்க

தேன்மொழி எங்கே!!! என்ற கேள்வி மிகப் பெரிய சுனாமியாக ஆச்சுறுத்தியது.

தொடரும்

Episode # 10

Episode # 12

Go to Senthamizh thenmozhiyaal story main page

{kunena_discuss:1218}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.