(Reading time: 7 - 14 minutes)

தொடர்கதை - செந்தமிழ் தேன்மொழியாள் - 10 - மது

Senthamizh thenmozhiyaal

சில்சீ வாசகர்கள் அனைவருக்கும் மதுவின் வணக்கம். செந்தமிழ் தேன்மொழியாள் கதையை பாதியிலேயே நிறுத்தி வைத்ததற்கு அனைவரிடமும் மன்னிப்பு கோருகிறேன். மீண்டும் தொடங்க விருப்பம் தெரிவித்தவுடன் அனுமதி அளித்த சில்சீக்கு மிக்க மிக்க நன்றிகள்.

இக்கதையை மிகவும் சிரத்தையாக எழுத வேண்டும் என்பதாலேயே இத்தனை மாதங்கள் கதையை தொடர இயலாமல் போனது. இனி தவறமால் அத்தியாயங்கள் பதிவிட்டு விடுவேன் தோழமைகளே!!!

நீண்ட இடைவெளி ஏற்பட்டுவிட்டதால்  கதையைப் பற்றி ஓரிரு வரிகள்:

தேன்மொழி – கடலின் காதலி. அலைகளின் அரசி. சமுத்திரத்தின் நித்திலம்.

சிறு வயதில் இருந்தே கடல் மீது தீராத காதல் கொண்டவள். குடும்பத்தின் செல்ல இளவரசி. மிகப் பெரிய திரைப்பட நிறுவனவரும் இயக்குனருமான முத்துக்குமரன் மற்றும் புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பாளர் கயல்விழியின் தவப்புதல்வி. இளங்கோ இளமாறனின் பாசமலர். வானதியின் கண்ணின் மணி. தாத்தா இவளது கலங்கரை விளக்கம்.

பதினைந்து வயதில் மிகச் சிறந்த டைவராக தேர்ச்சி பெற்று மரைன் போட்டோகிராபியை தேர்ந்தெடுத்து அதை கற்றுத் தெளிந்தவள்.

கடலின் அருமையை பொக்கிஷத்தை உலகம் அறியச் செய்ய வேண்டும் என்ற லட்சியம் கொண்டவள்.

அவள் நிகழ்காலத்த்தில் இந்து மகாசமுத்திரத்தில் செஷெல்ஸ் நாட்டின் மாஹி தீவிலிருந்து  மொரிஷியஸ் நோக்கி தனது முதல் பயணத்தைத் தொடங்கும் சமுத்திர முத்து என்ற உல்லாசக் கப்பலில் மீட்புக் குழுவில் இடம் பெற்றிருக்கிறாள்.

அக்கப்பல் நிறுவனத்தின் அதிபர் சிபி சாலமன், அக்கப்பல் நிறுவனத்தைப் பற்றி விளம்பரப் படம் எடுக்கும் குழுவினர் மற்றும் சில பயணிகளோடு கேப்டன் செல்வா தலைமையில் கடலைகளில் மிதக்க தொடங்குகிறாள் சமுத்திர முத்து.

விளம்பரத்தில் மாடலாக நடிக்கும் வெரோனிக்கா கடலில் குளிர்பான டின்னை வீசி விட கடலுக்குள் குதித்து அதை எடுத்துக் கொண்டு வரும் தேன்மொழி அங்கு அனைவரையும் ஆச்சரியப் படுத்துகிறாள்.  

தேன்மொழி யார். கடலுக்கும் அவளுக்கும் இருக்கும் ஆழமான பிணைப்பு என்ன. அவளின் இன்றைய நிலையின் காரணம் என்ன என்று சிபி சாலமனின் நண்பன் கவின் எனும் கெவின் விளக்கம் அளிக்கிறான்.

இனி ....

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.