(Reading time: 7 - 14 minutes)

கடல் மீது தேன்மொழி கொண்டிருந்த ஆழமான பிணைப்பை உணர்ந்தவர்கள் தங்களில் ஒருத்தியாகவே அவளை பாவித்தனர்.

இளங்கோ தங்கைக்காக தருவித்த டைவிங் சூட், பாதுகாப்பு உபகரணங்கள் அனைத்தும் வந்து சேர்ந்திருக்க வாடகைக்குப் படகை எடுத்துக் கொள்ள ஆலோசித்தாள் தேன்மொழி.

அது குறித்து அவர்கள் தங்கியிருந்த சில்வர் லைனிங் ரிசார்ட் மேனேஜரை அணுக முற்பட்ட போது தான் ஆதியை சந்தித்தாள்.

‘அடீபேயோ ஒமேஹியா ரகடோமலாலா’ என்று மேனேஜர் அறிமுகம் செய்து வைத்த அந்த பன்னிரண்டு வயது சிறுவனை பார்த்தவுடனே பிடித்துப் போனது தேன்மொழிக்கு.

“பார்க்க எனக்கு அண்ணன் மாதிரி இருக்கான். என்னை விட சின்னப் பையனா இவன்” ஆச்சரியம் கொண்டாள்.

வாலிபனைப் போல தோற்றம் கொண்டிருந்த போதும் மனதளவில் அவன் சிறுவன் தான்.

அதிலும் ஒரே சொந்தமான பாட்டியை மடகாஸ்காரில் விட்டு விட்டு தனியே மாஹிக்கு வந்து வேலை செய்யும் வறுமை நிலை.

“இவனை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. இவன் எப்போதும் என் கூடவே இருக்கட்டும்” தேன்மொழி சொல்லிவிட ரிசார்ட் மேனேஜர் மறுக்கவும் கூடுமோ.

“எப்படியும் நாம அடிக்கடி அங்கே போக வர வேண்டியிருக்கும். ரிசார்ட் நல்ல ப்ரைம் லொகேஷன் வேற. விலை பேசிடலாம்ப்பா” இளங்கோ சொல்ல முத்துக்குமரன் சில்வர் லைனிங் ரிசார்ட்டை மகளின் பெயரில் வாங்க ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தது மேனேஜருக்கும் தெரியும் என்பதால் தேன்மொழி கூறியதற்கு உடனே சம்மதம் சொல்லிவிட்டிருந்தார்.

மீனவர்களோடு அவர்களின் படகில் தேன்மொழியும் ஆதியும் பயணம் செய்யலானார்கள்.

“ஏன் பாப்பா. டைவர்ஸ் கூட போனாலும் கடலுக்குள் டைவ் செய்ய முடியும். மீனவர்களோடு போனா படகிலேயே இருந்துட்டு தானே வரணும்” போனில் பேசும் போது வானதி சந்தேகம் கேட்டாள்.

“அக்கா நீங்க ட்ரஸ் டிசைனர். எனக்கு ஒரு ட்ரஸ் தைக்கணும் என்றால் எடுத்த எடுப்பிலேயே ஏதோ ஒரு துணியை எடுத்து கட் பண்ணி தைக்க ஆரம்பித்து விடுவீங்களா” தேன்மொழி கேட்கவும் வானதி விளக்கம் அளித்தாள்.

“அதெப்படி பாப்பா. முதலில் உனக்கு பொருத்தமான ஃபேப்ரிக் கலர் எல்லாம் செலெக்ட் செய்யணும். அதிலே என்ன டிசைன் அழகா வரும்னு தீர்மானிக்கணும். உன்னோட அளவு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.