சொல்லும் போதே அந்த வாய்ப்பை நான் பயன்படுத்திக்க வேண்டாமா. அல்டாப்ரா தாத்தா. கோரல் ரீப். பெரிய பெரிய ஆமைகளின் வீடு”
எப்போதும் தாத்தா தான் தேன்மொழிக்கு ஆதரவு தெரிவிப்பார். இன்று வரை அவளது ஒவ்வொரு விருப்பத்திற்கும் துணையாக இருந்து வீட்டினரின் சம்மதத்தைப் பெற்றுத் தருவார்.
ஆனால் இப்போது குடும்பத்தினர் அனைவரும் தேன்மொழிக்கு ஆதரவு தெரிவித்து தாத்தாவின் சம்மதத்தை வேண்டினர்.
ஏனோ தாத்தாவின் மனம் சஞ்சலமாகவே இருந்தது.
“பதினைந்து வயதில் டைவராக லைசன்ஸ் பெற முடியும் என்றாலும் மற்ற லீகல் விவகாரங்களுக்கு பதினெட்டு வயது ஆகியிருக்க வேண்டும். ஆதியும் சின்ன பையன். நம்மில் ஒருவர் இங்கே இருப்பது அவசியம்” தாத்தா தீர்மானமாக சொன்னார்.
தனது இந்தியா பயணத்தை தள்ளி வைக்க ஏற்பாடு செய்தவர் தேன்மொழியோடு அல்டாப்ராவிற்கு பயணம் மேற்கொள்ள தயாரானார்.
ஆராய்ச்சி நிலையம் மற்றும் விஞ்ஞானிகள் தவிர அல்டாப்ராவில் மக்கள் யாரும் வசிக்கவில்லை.
எண்ணற்ற ஆமைகளின் வீடான அல்டாப்ராவில் முன்பு மனிதர்கள் ஆமை வேட்டையில் ஈடுபட ஆமைகள் அழிந்து கொண்டு வந்தன.
பின் அந்த வேட்டைகள் தடை செய்யப்பட்டது ஒரு புறம் என்றால் அங்கே செல்ல வேட்டையாளர்கள் ஏதோ காரணத்திற்காக பயம் கொண்டனர் என்றும் சொல்லப்படுகிறது.
வேட்டைகள் பெருமளவு குறைந்து இப்போது ஆமைகளின் எண்ணிக்கை அதிக அளவில் காணப்படுகிறது.
“வேட்டையாடும் மனிதர்களை மட்டும் குறி வைத்து தாக்கும் காவல் தெய்வம் போல ஏதேனும் இருக்குமா” அல்டாப்ரா பற்றி சொன்ன போது வானதி கேட்டது தேன்மொழியின் நினைவில் ஆடியது.
மாஹேவில் இருந்து உணவுப் பொருட்கள் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களை கொண்டு சென்ற சிறு கப்பல் ஒன்றில் தேன்மொழி, ஆதி மற்றும் தாத்தா பயணம் செய்து கொண்டிருந்தனர்.
கூடவே அவர்களின் கடல் புறாவும் பயணித்தது.
RIGID INFLATABLE வகையைச் சேர்ந்த படகு கடல் புறா என்பதால் அதை சுருட்டி எடுத்துக் கொண்டு போய் அசம்பில் செய்து கொள்ளலாம்.
அல்டாப்ரா சென்று சேர்ந்த தேன்மொழியை அங்கிருந்த பெண்மணி வரவேற்றார். தனது