(Reading time: 10 - 20 minutes)

அனைவரும் ஓரிடத்தில் ஓய்வெடுத்தனர்.

அது பிசோலா ஏரிக்கரையின் ஒரு பகுதி. ஏரியின் மறுபுறம் உதய்பூர் அரண்மனை இருக்க, ஏரியைச் சுற்றிச் செல்ல பல மணி நேரங்கள் பிடிக்கும்.

எனவே அந்த இடத்தில் இரவுப் பொழுதைக் கழிக்கத் திட்டமிட்டான். காட்டின் உட்புறத்தில் பழங்கள் , வேறு கிடைக்கக் கூடிய உணவு வகைகள் சேகரிக்க இரு வீரர்கள் சென்றனர். மற்றவர்கள் தங்குவதற்கு குடில்களும், உணவு சமைக்கத் தேவையான ஏற்பாடுகளும் செய்தனர்.

வீரர்களோடு இனைந்து ப்ரித்விராஜ்ஜும் குடில்கள் அமைக்க உதவினான். பத்திற்கும் மேற்பட்டப் பெண்கள் இருந்ததால், மூன்று குடில்களாக கட்டி முடித்தார்கள்.

இளவரசனுக்குத் தனியாக ஒரு சாதாரண குடிலும் , மற்ற வீரர்களுக்கு  சேர்ந்து தங்குவது போல் குடிலும் தயார் செய்தனர்.

அர்த்த சந்திர வடிவத்தில் கிட்டத்தட்ட பத்து குடில்கள் கட்டிய பின் சுற்றிலும் காட்டுப் புதர்களால் வேலி அமைத்தனர். நடுவில் பெண்களின் குடில்கள் இருக்க, அதைச் சுற்றி வீரர்களின் குடில்கள் இருந்தன.

ஐந்தடிக்கு ஒரு வீரர் என சுற்றிக் காவல் காத்தனர். அதே போல் குடிலின் பின் புறம் முழுதும் புரவிகளைக் கட்டி வைத்து அதற்கு உணவும், நீரும் கொடுத்தனர்.

வீரர்கள் உணவு சேகரித்து வந்ததும், அனைவரும் உண்டு விட்டு உறங்க ஆயத்தமாகினர்.

இளவரசன் ப்ரித்விராஜ் சுற்றிலும் வந்து பாதுகாப்பைச் சரிப் பார்க்க, ராணியும் அதே போல் ஒரு முறைச் சுற்றி வந்தாள். இருவரும் எதிர் திசையில் சென்றதால் , குடிலின் பின் புறம் வந்ததும் சந்தித்தனர்.

ராணியைக் கண்டதும் சில மணி நேரங்கள் முன்னதாகக்  கண்ட அவளின் மதி முகமே நினைவில் வர, மீண்டும் காண ஆவலாய் அவள் முகம் பார்த்தான். ஆனால் இப்போதும் அவள் முகம் மறைத்து இருக்க, ஏமாற்றத்தோடு தலையைக் குனிந்து கொண்டான்.

இருவரும் சற்று நேரம் மௌனமாக இருக்கப் பின், இளவரசன் ப்ரித்விராஜ் ராணியிடம் ,

“தேவி, என்னுடைய வாழ்நாள் முழுதும் தங்கள் முகத்தைத் தரிசிக்கும் பாக்கியம் கிடைக்குமா?” என்றுக் கேட்க, ராணி திடுக்கிட்டாள்.

“இளவரசே, தாங்கள் கூறுவது ..?”

“ஆம் தேவி. தங்களைக் கொள்ளையர்கள் சூழ்ந்த போது, அவர்களைத் தடுத்து விரட்டிய அன்றில் இருந்து தங்களின் விழிகள் என்னை உறக்கம் கொள்ள விடவில்லை. என் கனவில் தைரியம் நிரம்பிய, அதே சமயம் சிறிது நகைக்கும் தங்களின் விழிகளே

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.