(Reading time: 4 - 8 minutes)

பார்த்ததும் சந்தேகம்.

அதை தம்பி கொண்டு வந்து என்கிட்ட காட்டினான். நானும் பாத்தேன் கிமு. சரவணன் பேரு நல்லாவே படிக்க முடிஞ்சுது. அதே கைஎழுத்துதான். சரவணன் கைஎழுத்து மேட்ச் ஆகுது.

சரவணன் ஊருக்கு போயிருக்கான். நெக்ஸ்ட் வீக் வருவானாம். வந்ததும் இருக்கு அவனுக்கு கச்சேரி. என் பேக்ல இருக்கிற மளிகை சாமானால அவனுக்கு ஸ்பெஷல் அபிஷேகம் பிளஸ் லட்சார்ச்சணை பண்ணப் போறேன்.

என்ன தைரியம் இருந்தா எனக்கு மிரட்டலா லெட்டர் எழுதுவான். ஸ்கைப்ல அம்மாகிட்ட பேசினேன். அவங்க கோப்படாதனு அட்வைஸ். “ஓ மை கடவுளேனுகத்தணும் போல இருக்கு.

அம்மா கோபம் வராம இருக்க யோகாசனம் சொல்லிக் கொடுத்தாங்க. நானும் செய்றேன். வேற வழி? இல்லனா தம்பி போட்டுக் கொடுத்துடுவானே

இப்ப கோபம் வந்தா அதை ஈசியா கண்ட்ரோல் பண்ண முடியுது. எப்படி தெரியுமா? அது ஒரு சிம்பிள் யோகாசன முறைதான். உடனே பயப்படாத கிமு தலைகீழா நிக்கனுமானு?. (கிண்டல் ஸ்மைலி).

காளி போட்டோ பாத்திருக்கியா? நாக்கு வெளில தொங்கிட்டு இருக்குமே. அதுவும் ஒரு வகையான யோகாசனமாம்.

நம்ம கட்டுப்பாட்டை மீறி கோபம் வர சமயத்துல நாக்கை வெளியே தள்ளி உள்ளிழுக்கனும். இப்படி பலமுறை செய்தால் கோபம் நம்ம கட்டுப்பாட்டிற்கு வருமாம்.

அதுமட்டுமில்லாம கோபத்தால வரும் இரத்த அழுத்தம் வயிற்றில் ஏற்படும் அமில மாற்றங்கள் இதயம் நுரையீரல் தசைகள் மற்றும் நரம்புகளில் ஏற்படும் பாதிப்புகளும் குறையுமாம்.

இத படிச்சதும் லெட்டர் வந்த சோகத்துல மென்டல் ஆகிட்டாளானு நினைக்காத. இதை திரு.சுகிசிவம் சார்தான் சொல்லியிருக்கார். யூடியூப்ல வீடியோ கூட இருக்கு. நீ போன் வாங்கினதும் பாரு. நான் பார்த்தேன்.

டிரைகூட பண்ணினேன். அண்ட் இட் வெர்க்ஸ் தெரியுமா? முதல் தடவை பண்ண தயக்கமா இருந்தது. (பிளஷ் ஸ்மைலி). தனியா ரூம்ல பண்னேன்.

அடுத்த வாரம் சரவணன் வரட்டும் அவனுக்கு நான் காளியா மாறி பூஜைய வைக்கல என் பேரு கிபி இல்ல.

சரவணன் வந்ததும் என்ன சொல்றானு பதில் போடறேன்.

டேக் கேர் பைடா.

                                                            With lots of love & affection

                                                                         கிபி

                                                                       10/08/2018

கடிதங்கள்  இணைக்கும் . . .

Episode # 06

Episode # 08

Go to Kipi to Kimu story main page

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.