Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Chillzee KiMo TEN (Tamil - English - Novel) Contest 2019


1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - ஐ லவ் யூ - 34 - Chillzee Story - 5.0 out of 5 based on 2 votes
I love you

“காத்து நல்லா இருக்குல செல்வி”

“அருமையா இருக்கு”

“நீ சொன்ன சாப்ட்வேர் ஐடியா பத்தி பேசிட்டேன் செல்வி. உடனேயே வேலையை ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்”

“எப்படி செய்யப் போறீங்க?”

"எப்படி செய்யப் போறீங்கன்னு கேட்கக் கூடாது செல்வி. எப்படி செய்யப் போறேன்னு கேளு"

"என்னது? செய்யப் போறேனா? யாரு நானா?"  

கண்களை பிளையிங் சாசர் போல விரித்து அவள் கேட்டது அவனை சிரிக்க வைத்தது.

"எப்போ பாரு சொந்தக் கால்ல நிக்கனும் பந்தாவா சொன்னா போதுமா?  வேலை தேட வேண்டாமா? இந்த எக்ஸ்பீரியன்ஸ் உனக்கு உதவும். காலேஜ் முடிச்சிட்டு நேரா ஆபிஸ்க்கு வா. வேலை முடிச்சுட்டு நாம கார்ல வீட்டுக்கு வரலாம்.

தமிழ்ச்செல்வியின் கண்கள் இன்னும் பெரிதாக விரிந்தன.

வெற்றியின் விழிகள் பரிகாசத்துடன் அவளை ரசித்தன.

“உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியலை. இந்த உதவியை நான் மறக்கவே மாட்டேன்”

தமிழ்ச்செல்வி வார்த்தைகள் பிசிறு தட்ட உணர்ச்சி பொங்க சொன்ன நன்றியை தன்னுடைய பாணியில் தோளை சிலுப்பி ஏற்றுக் கொண்டான் வெற்றி.

சட்டென்று யோசிக்காமல் அவனைப் போலவே அவளும் தோளை சிலுப்பினாள் தமிழ்ச்செல்வி.

வெற்றியின் விழிகள் மீண்டும் பரிகசித்து சிரித்தன. அதன் தொடர்ச்சியாக அவன் உதட்டிலும் சிரிப்பு மலர்ந்தது.

அவனுடைய சிரிப்பு மின்னும் அந்த முகம் தமிழ்ச்செல்வியின் நினைவினுள் ஆழ பதிந்தது!

ன்று இரவு, சேலை ஸ்க்ரீன் போட்டு நடுவே வைத்து விட்டு தூங்க சென்றான் வெற்றி.

தமிழ்ச்செல்வியும் தூங்கப் படுத்தாள். கண்களை மூடினால் தூக்கம் வரவில்லை.

வெற்றியின் ஸ்பரிசம் பட்ட இடம் இப்போதும் குறுகுறுப்பு மூட்டிக் கொண்டிருந்தது.

கண்ணை திறந்துப் பார்த்தாள். அறை இருட்டாக இருந்தது. சில வினாடிகள் கண்களை இருளுக்கு பழக்க படுத்தினாள். மெல்ல, மெல்ல அறையினுள் இருப்பவை வரி வடிவங்களாக அவளின் கண்ணுக்கு புலப்பட்டன.

ஒருக்களித்து படுத்து வெற்றி படுத்திருக்கும் பக்கம் பார்த்தாள். ஒன்றும் தெரியவில்லை.

About the Author

Chillzee Story

On-going Stories

Like to read stories? Now you can read full novels at Chillzee KiMo. No wait time,  No ads, No restrictions!!!

Add comment

Comments  
# RE: தொடர்கதை - ஐ லவ் யூ - 34 - Chillzee Storysaaru 2019-09-17 22:42
Lovelu
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஐ லவ் யூ - 34 - Chillzee StoryJaya Lakshmy 2019-09-16 11:40
Nice love story.. very interesting but try to give a long epi and pls post update in every week..
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஐ லவ் யூ - 34 - Chillzee StoryAdharv 2019-09-14 13:56
😍😍 cute update ma'am 👌👏👏👏 selvi Oda vettriku vettri ladder aga iruparu pole irukke ;-) :cool: yasho.ippadi.pesi pesi devasena manasa mathiduvanga 😍😍😍👍 thank.you for this feel good update. keep.rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஐ லவ் யூ - 34 - Chillzee StorySrivi 2019-09-14 12:15
Hmm.. Love building up a ..theriyamaleye.. Nice.. Interesting update... Excited to read further
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஐ லவ் யூ - 34 - Chillzee Storymadhumathi9 2019-09-14 11:28
:clap: nice epi. :Q: irandu perum ondru servaargala? Poruththirunthu paarppom.eagarly waiting 4 next epi. :thnkx: & :GL:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top