Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 13 - சுபஸ்ரீ - 5.0 out of 5 based on 2 votes
Ringa ringa roses
Pin It

தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 13 - சுபஸ்ரீ

ண்கள் கட்டபட்ட நீதி தேவதை சட்டத்தின் தவப் புதல்வி. தன் முன் வரும் பலவகையான மனிதர்களின் குற்றங்களை உணர்கிறாள். மனிதர்கள் தங்கள் தவறுகளுக்காக வருந்த வேண்டும். இனி வாழ்க்கையில் தவறிழைக்காமல் முன்னேற வேண்டும் என்பதற்காகதான் தண்டனை வழங்குகிறாள். இதை மனிதர்கள் உணர வேண்டும். மக்கள் குற்றங்கள் செய்யாது என்று அவளுக்கு ஒய்வு அளிக்கப் போகிறார்களோ தெரியவில்லை.

நீதிமன்றத்தின் மேல் மக்கள் அசாத்ய நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். வழிப்பாட்டு தளத்தை போல புனிதமாக மக்கள் கருதும் இடம்.

மதி காலையில் நீதிமன்ற வளாகத்துக்குள் அழைத்துச் செல்லப்பட்டாள். அவள் வழக்கிற்கு முன் நான்கு வழக்குகள் விசாரணைக்கு இருந்தன.

கணேஷ் மற்றும் பரத் இருவரும் நீதிமன்றத்திற்கு காலையில் வந்துவிட்டனர். கணேஷ் பரத்துடன் ஒட்டாமல் இருந்தான். பரத் அவன் செயலைக் கண்டு வியந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. ஆனால் கணேஷ் உணர்ச்சி வேகத்தில் தவறு இழைக்க கூடாது என்று கவலைப்பட்டான்.

மதியழகியும் இதை கவனிக்காமல் இல்லை. மதிய உணவு இடை வேளைக்குப் பிறகு வழக்கு தொடங்கியது. மதி அச்சமின்றி தெளிந்த மனதுடன் காணப்பட்டாள்.

இன்று அவளுக்கு மிகவும் முக்கியமானதொரு தருணம். இந்த அறிய நிமிடங்களுக்காக பல வருடங்கள் காத்திருந்தாள். அதை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

நீதிஅரசர் ரகுராமன் வந்து அமர்ந்தார். அந்த வழக்காளுமன்றம் எத்தனை குற்றவாளிகளை கண்டுள்ளது. சாட்சி மற்றும் சூழ்நிலை காரணமாக சில நிரபராதி குற்றவாளி ஆவதும் . .  குற்றவாளி நிரபராதி ஆவதும் என பல விசித்திர நாடகங்களும் அரங்கேறி உள்ளது.

இத்தனையும் கண்ட அவ்விடம் இன்னும் ஒரு புதிய நாடகம் நடக்கப் போவதை அறியாமல் மௌனியாக இருந்தது.

பப்ளிக் பிராசிகியூட்டர் அடுக்கடுக்காய் குற்றங்களை மதியழகி மேல் சுமத்தினார். அத்தனைக்கும் சாட்சியங்களை காண்பித்து நிரூபித்தார்.

மதியின் வழக்கறிஞரும் பல கோணங்களில் வாதம் புரிந்தார். இரண்டு தரப்பும் கடுமையான வாதங்களை முன் வைத்தது. மதி இவற்றால் எந்த பாதிப்பும் அடைவில்லை. தனக்கு தண்டனை கிடைத்தாலும் அதைப் பற்றி கவலை இல்லை என்பதைப் போல் காணப்பட்டாள்.

ஒரு கட்டத்தில் நீதிபதி மதியிடம் “உங்கள் மேல் மூன்று கொலைக்கான குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள்?” என கேட்க

“நான் எந்த குற்றமும் செய்யவில்லை” என பணிவாக கூறினாள்.

 

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4 
  •  Next 
  •  End 

About the Author

Subhasree

Subhashree's popular stories in Chillzee KiMo

  • Kallaraiyil oru karuvaraiKallaraiyil oru karuvarai
  • Suzhalum marmamSuzhalum marmam

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
+1 # RE: தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 13 - சுபஸ்ரீJeya _25 2019-10-16 18:10
Ethirpara thirupangaludan
Kathai pramatha poguthu mam
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 13 - சுபஸ்ரீJanaki 2019-10-16 12:12
Very interesting (y)
sema twist suba
aduthu enna aagum :Q:
good going
Reply | Reply with quote | Quote
+1 # RRRMinuManickam 2019-10-16 09:19
OMG :Q:
Enna nadakka pogudhu :Q:
Waiting for the next update (y)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 13 - சுபஸ்ரீDurgalakshmi 2019-10-16 08:27
OMG :clap:
moonu perum sagala :-)
Madhi safe :dance:
Ganesh thappana mudivu eduparo?
Bharath plan enna?
eagerly waiting for next epi.
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 13 - சுபஸ்ரீmadhumathi9 2019-10-16 05:40
wow suspense aaga irukku.nice epi. :thnkx: 4 this epi.eagarly waiting 4 next epi. :GL:
Reply | Reply with quote | Quote
Share your novel

Come join the FUN!

Write @ Chillzee
Go to top