Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Chillzee KiMo TEN (Tamil - English - Novel) Contest 2019


1 1 1 1 1 Rating 5.00 (3 Votes)
தொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 03 - Chillzee Story - 5.0 out of 5 based on 3 votes
Naan enbathe nee thaanadi
Pin It

தொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 03 - Chillzee Story

காதில் ஹெட்செட் மாட்டிக் கொண்டு பாட்டு கேட்டுக் கொண்டிருந்தான் இனியவன். அவன் எதிரில் இருந்த மேஜை மேலே “ணங்” என்று டம்ப்ளரை வைத்து விட்டு,

“இந்தாங்க டீ!” என்றாள் சுந்தரி.

இனியவன் ஹெட்செட்டை கழற்றியப் படி,

“கல்யாணப் பொண்ணு தான நீ, கொஞ்சமா அடக்கமா இருந்தா என்ன? “ என்றான்

“நீங்க சின்ன வயசு தான? எப்பவும் இப்படி தலையில இதை மாட்டிட்டு சுத்துறதுக்கு எழுந்து அந்தப் பக்கம் இந்தப் பக்கம் நடந்தா என்ன? இப்படி கூட ஒரு சோம்பேறி இருக்க முடியுமா?”

“ஹெலோ நான் சோம்பேறியா? ஏதோ லீவுன்னு பாட்டுக் கேட்குறேன் மத்தபடி 24 மணி நேரமும் வேலை வேலைன்னு லேப்டாப்ல தலையை விட்டுட்டு மண்டைக் காயும். உனக்கு அதைப் பத்தி எல்லாம் என்னத் தெரியும்?”

“ஹ்க்கும்”

“உன்னைக் கல்யாணம் பண்ணிக்கப் போறவன் பாவம். இப்படி நச்சு நச்சுன்னு அவன்ட்ட எதுவும் சொல்லாத, வாழ்க்கை வெறுத்துறப் போறான்.”

சுந்தரி அவன் சொன்னதற்கு பதில் சொல்லாமல்,

“டீ குடிச்சுட்டு, டம்ப்ளரை இங்கேயே வைங்க, நான் அப்புறமா வந்து எடுத்துக்குறேன்” என்றாள்.

“அதெல்லாம் நீ செய்யனுமா? கதிர் கிட்ட சொல்றேன்”

“வேண்டாம் மாமிக்கு அதெல்லாம் பிடிக்காது. நானே வந்து எடுத்துட்டுப் போறேன்” சொல்லிவிட்டு அங்கிருந்து மறைந்தாள் சுந்தரி.

அவள் மாமி என்றது அவனின் பெரியம்மாவை என்பது இனியவனுக்குப் புரிந்தது. கூடவே, அம்மா சுந்தரி நிலைமையைப் பற்றி சொன்னதும் ஞாபகத்திற்கு வந்தது.

டீயைக் கையில் எடுத்துக் கொண்டு எழுந்து நின்று வேடிக்கைப் பார்த்தான்.

ஆங்காங்கே கோழியும், சேவலும் செல்ல சண்டை போட்டுக் கொண்டிருந்தன. பக்கத்து வீட்டினர் வளர்க்கும் பசு மாடு கீழே உட்கார்ந்து ரெஸ்ட் எடுத்துக் கொண்டிருந்தது.

ஏலக்காய் நறுமணத்துடன் உள்ளே சென்ற டீ’யும், கண்ணில் பட்ட காட்சிகளும் அவனுக்கு புத்துணர்வைக் கொடுத்தது.

டம்ப்ளரை அங்கேயே வைத்து சுந்தரிக்கு இன்னுமொரு வேலைக் கொடுக்க மனம் வரவில்லை. காலி டம்ப்ளரை எடுத்துக் கொண்டு கிச்சனுக்கு சென்றான்.

அங்கே பெண்கள் வேலை செய்வதும் கதை பேசுவதும் என்று 2-in-1 வேலை செய்துக் கொண்டிருந்தார்கள்.

இனியவன் காலி டம்ப்ளரை ஜெயஸ்ரீயிடன் நீட்டினான். பக்கத்தில் இருந்த பெரியம்மா,

 

  •  Start 
  •  Prev 
  •  1  2  3 
  •  Next 
  •  End 

About the Author

Chillzee Story

On-going Stories

Like to read stories? Now you can read full novels at Chillzee KiMo. No wait time,  No ads, No restrictions!!!

Add comment

Comments  
# RE: தொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 03 - Chillzee StoryAdharvJo 2019-11-08 15:51
semma lively and interesting updates ma'am :clap: :clap: Iniyavan oda characterization simply cute :dance: :D epi 2 la situation songs rendume super :lol: Permanent resident velaikariyo :eek: :Q: ivanga rendu peroda kutti fights was entertaining :yes: Indha pei bangala pathi therindhu kola waiting. thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 03 - Chillzee Storymadhumathi9 2019-11-08 10:45
:Q: thrilling epi.nice epi.ean kadhavu moodikkondathu :Q: antha marmam enna endru therinthu kolla miga aavalaaga aduththa epiyai padikka kaaththu kondu irukkirom. :thnkx: 4 this epi. :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 03 - Chillzee StoryJeba 2019-11-08 09:06
Interesting... Thrilling ah poguthu... Waiting for next epi.. :clap: :thnkx: for this story
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top