தனது உடைகளை எல்லாம் எடுத்து அவர்களின் அறையில் அடுக்கியபடி இருக்க ... "பொன்னி” என்று அழைத்தபடி உள்ளே வந்தாள் மல்லிகா.
"வாங்க அத்தை”என்றவள் “என் டிரஸ் எல்லாம் அடுக்கி வெச்சிட்டிருக்கேன் ....ஆமா வினோ எங்க ஆளையே காணோமே? " என்று கேட்க ...
"அவ ஸ்கூல் போயிட்டாமா... " என்றாள் மல்லிகா.
"ஓ என்றவள் “எந்த ஸ்கூல்ல படிக்கிறா அத்தை?” என்று கேட்டபடி தனது வேலையை தொடர ... மல்லிகா சொன்ன பள்ளியின் பெயரை கேட்டு அதிர்ந்து நின்றாள் அவள்.
“என்ன அந்த ஸ்கூல்ல படிக்கிறாளா ....? அங்க அட்மிஷன் கிடைக்கிறதே ரொம்ப கஷ்டம் ....பீஸ் லாம் ரொம்ப அதிகம்னு கேள்விப்பட்டிருக்கேன்” என்று சொன்னவள் .... “உங்களால எப்படி சமாளிக்க முடியும் .....?” என்று பட படவென்று கேள்விகளை அடுக்கியபடி மல்லிகாவை பார்க்க ..
அவள் இப்போது “ங்கே” பார்வை பார்த்துக்கொண்டிருந்தாள். “தான் கேட்டது தவறோ?” என்று அப்போது தான் யோசித்தாள் பொன்னி.
"இல்ல ....அத்தை அந்த ஸ்கூல் பத்தி நிறையா... நான் தப்பா நினச்சு கேட்கலை.." என்று அவள் அவஸ்தையாய் பார்க்க
"மதியம் என்ன சமைக்கட்டும் பொன்னிமா ....உனக்கு என்ன பிடிக்கும்?" என்று இயல்பாக கேட்டாள் மல்லிகா.
"எதுன்னாலும் பரவாயில்லை..” என்று பொன்னி சொல்ல
"அதுக்கு எதுக்கு நான் உன்னை கேட்க வந்தேன் ...சொல்லுமா உனக்கு என்ன பிடிக்கும்னு சொல்லேன் .." என்று கேட்ட குரலில் அத்தனை ஆசை இருந்ததாக தான் தோன்றியது.
அவர்களே இத்தனை ஆசையாக கேட்கும் போது ...நாமும் சொல்வது தான் சரி என்று யோசித்தவள் .... “ம் இன்னிக்கு உருளை கிழங்கு வறுவல் .... பீன்ஸ் பொரியல் ..... சாம்பார் ...ரசம் ..பண்ணிடலாமா அத்தை?” என்று கேட்க மல்லிகா அவளை பார்த்த பார்வையில்.
"இவங்க தான சொல்ல சொன்னாங்க ....ஒருவேளை வறுவல் ...பொரியல்னு சொன்னதும் யோசிக்கிறாங்களா ..? இதுக்கு தான் சொல்லவேண்டாம்னு யோசிச்சேன்..." என்று இவள் எண்ணங்கள் இருக்க..
“வினோ ஸ்கூல்ல இருந்து வரட்டும் ...துள்ளி குதிக்க போறா அவளுக்கும் உருளை வறுவல்ன்னா அவ்வளவு பிடிக்கும் ... அதுவும் நல்லா வறுத்து கொடுங்க மான்னு திட்டுவா .....நான் தான் தினம் வறுவல் சாப்பிட கூடாதுன்னு சொல்லுவேன் .....என்று வாய் நிறையா
Like Prama Subbiah's stories? Now you can read Prama Subbiah's full novels at Chillzee KiMo. No wait time, No ads, No restrictions!!!