Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Chillzee KiMo TEN (Tamil - English - Novel) Contest 2019


1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 04 - Chillzee Story - 5.0 out of 5 based on 2 votes
Naan enbathe nee thaanadi
Pin It

தொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 04 - Chillzee Story

லோ சுந்தரி! எதுக்கு இப்படிப் பயந்து நடுங்குற?” – இனியவன்.

சுந்தரி அவனுடைய பிடியில் இருந்த கையை இழுத்து எடுத்துக் கொண்டாள்.

“உள்ளே போகாதீங்கன்னு சொன்னேன். கேட்டீங்களா? இப்போ கதவு வேற மூடிடுச்சு!”

“அதனால என்ன? கதவை திறந்தா போச்சு”

“அது அத்தனை சுலபமில்லை. இந்த கதவை வெளியே இருந்து திறக்குறதே கஷ்டம், உள்ளே இருந்து திறக்கவே முடியாது. நீங்க தெரியாம உள்ளே வந்திர போறீங்கன்னு தான் உங்களை தடுக்க வந்தேன்”

“எனக்கு அது புரியலை சுந்தரி. சாரி.”

“பரவாயில்லை, உங்க செல் எடுத்து அம்மாவை கூப்பிடுங்க. அவங்க யாராவது வந்தா தான் கதவை திறக்க முடியும்”

“நான் மொபைலை எடுத்துட்டு வரலையே”

“என்னது?”

சுந்தரியின் குரலில் இருந்த அதிர்ச்சி இனியவனுக்கு ஆச்சர்யத்தைக் கொடுத்தது.

“எதுக்கு இப்படி ஷாக் ஆகுற? இந்த கதவை நானே திறக்குறேன்”

“இந்த இருட்டுல கதவு எங்கே இருக்குன்னு தெரியுறதே கஷ்டம். அப்புறம் எப்படி திறப்பீங்க? அதும் இந்த கதவை திறக்குறது சுலபமில்லை”

“அதெல்லாம் நான் பார்த்துக்குறேன்”

வீராப்பாக சொல்லி விட்டு உள்ளே வந்த இடத்தை தோராயமாக கணக்கு செய்து கைகளால் துளாவினான் இனியவன். கையில் மென்மையாக எதுவோ தட்டுப் பட்டது.

என்ன என்று தொட்டுப் பார்த்தான். அதற்குள்,

“என்னப் பண்றீங்க? அது என் சேலை” – சொல்லிவிட்டு அவனின் கையை தள்ளி விட்டாள் சுந்தரி.

ஒன்றும் தெரியாத அந்த இருட்டில் அசடு வழிந்த இனியவன், மெல்ல கையை வேறு திசையில் திருப்பினான்.

கொஞ்சம் நேரத்தில் சுவர் கையில் பட்டது. அப்படியே தடவி எப்படியோ மரக் கதவை கண்டுப்பிடித்தான். உள்ளங்கைகளை தேய்த்துக் கொண்டு முழு பலத்தையும் செலுத்தி அந்த கதவின் மேலே இடித்தான். கதவு இம்மியளவும் அசையவில்லை.

கதவில் இடித்த அவனுடைய தோள்பட்டை பயங்கரமாக வலித்தது. தாங்க முடியாமல் ‘ஆ’ என அலறினான்.

“நான் தான் சொன்னேன்ல இது பழையக் காலத்து கதவு. ஐனி மரத்துல செஞ்சது. தாழ்பபாள்

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5 
  •  Next 
  •  End 

About the Author

Chillzee Story

On-going Stories

Like to read stories? Now you can read full novels at Chillzee KiMo. No wait time,  No ads, No restrictions!!!

Add comment

Comments  
# RE: தொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 04 - Chillzee Storymadhumathi9 2019-11-09 11:31
facepalm udane man,kaathu,mookku ellam vaiththu pesuvaargale? :Q: yaaraavathu irandu peraiyum purinthu kolvaargala? Nice epi.eagarly waiting for next epi. :thnkx: 4 this quick update. :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 04 - Chillzee StoryAdharv 2019-11-09 10:50
😱 ouch indha nose eyes mouth vachi pesura kuttathukitta matikitangaley facepalm any possibility of iniyan replacing Dubai mappilai :Q: cool and interesting update ma'am 👏 👏👏 👏 but Oru full length Pattu padi sorry alari engala emathitingale ji 😑 sad to know Abt sundaris struggle..... waiting to see what.happens next....btw indha bangalavla Ena marmam irukku?
Thank you and keep.rocking.
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top