மிர்ணாளினியின் வரவிற்காக காத்திருந்த நேரம் ரங்கனை தேடி அவனது தந்தை வைகுந்தன் வந்தார்.
”ரங்கா” என அழைக்க அவனோ குழப்பத்தில் மிர்ணாளினியை பற்றி யோசித்தபடியால் தந்தை அழைத்தும் என்னவென கேளாமல் ஏதோ யோசனையில் மூழ்கியிருந்தான். அவனின் பலத்த யோசனையைக்கண்ட வைகுந்தனோ அவனது தோளை உலுக்க இயல்பு நிலைக்கு வந்தான் ரங்கன். தன் அருகில் வைகுந்தன் இருப்பதைக்கண்டு திகைத்தவன்
”அப்பா சொல்லுங்கப்பா” என கேட்க அவரோ
”எதைப்பத்தி யோசிச்சிக்கிட்டு இருக்க ரங்கா”
”அது வந்து” என இழுக்க
”புரியுது உன் தாத்தாவோட இறப்பை இன்னுமா நீ மறக்கலை”
”அப்படியில்லைப்பா இது வேற விசயம் சரி நான் வேலைக்கு போறேன்பா இனிமேல நான் எல்லாத்தையும் பார்த்துக்கறேன், இப்ப நான் மில்லுக்கு போறேன்பா வரேன்” என அவசரமாக எழுந்து செல்ல முயன்றவனை தடுத்தார் வைகுந்தான்
”உட்காரு உட்காருடா அப்புறம் போலாம் என்ன அவசரம்”
”இல்லைப்பா ஊர்ல இருந்து வந்தபின்னாடி எல்லா வேலைகளையும் நேர்ல போய் பார்த்துட்டேன் ஆனா, இந்த ரைஸ்மில்க்குத்தான் போகவே இல்லை அங்க என்னாச்சின்னு தெரியலை அதான் ஒரு எட்டு போய் பார்த்துட்டு வரலாம்னு” என ரங்கன் தடுமாற்றத்துடன் சொல்ல அதற்கு அவரோ
”நான்தான் தினமும் ரைஸ்மில்க்கு போறேனேடா அப்புறம் என்ன நான் பார்த்துக்கறேன்”
”இல்லைப்பா கணக்கு வழக்கு பார்க்கனும்”
“தாராளமா பாரு ஆனா இப்ப வேணாம் நான் உன்கிட்ட ஒரு விசயம் பேச வந்தேன்”
”என்னப்பா என்ன விசயம்”
”நீ முன்ன மாதிரியில்லை ரங்கா ரொம்பவே மாறிட்ட”
”சே சே அப்படியில்லைப்பா நான் எப்பவும் போலதான் இருக்கேன்”
”இல்லையே இப்பலாம் நீ எதையோ நினைச்சி பலமா யோசிக்கிட்டே இருக்க, ஏதோ பெரிய பிரச்சனை இருக்கு உனக்கு, எதையோ சொல்லாம மறைக்கற அது என்னன்னு சொல்லு நான் உனக்கு உதவி பண்றேன்”
”பிரச்சனையா அப்படி எதுவும் இல்லைப்பா”
”அந்த வம்சியை நினைச்சி கவலைப்படாத அவனால உன் நிழலை கூட கஷ்டப்படுத்த முடியாது”
Like to read stories? Now you can read full novels at Chillzee KiMo. No wait time, No ads, No restrictions!!!
THank you.