மறுநாள் காலை கண் விழித்த பனிமலர் எழ முயல, அவள் நகர முடியாமல் தன்னை சுற்றி இறுக்கி அணைத்திருந்த கைகளை கண்டாள்...திடுக்கிட்டு திரும்பி முகம் பார்க்க அருகில் தன் கணவனின் முகம் காண, அப்பொழுது தான் நேற்று இரவு சம்பவங்கள் நினைவு வந்தன..
அவனின் இறுகிய அணைப்பும் முரட்டுத்தனமான முத்தமும் காட்டாறு போன்ற வேகமும் நினைவு வர, மீண்டும் உள்ளுக்குள் சிலிர்த்தது...
வெளியில் பார்க்க மென்மையாக இருந்தாலும் அவனுள் இருந்த முரட்டுத் தனமான இன்னொருவனை கண்டாள்...அந்த முரட்டு அணைப்பில்தான் இன்னும் கரைந்து போனாள்..
அமைதியாக உறங்கும் தன் கணவனையே சிறிது நேரம் ரசித்து இருந்தவள்
“என் க்யூட் மெக்கானிக்.... “ என்று மெல்ல அவன் கன்னத்தை பிடித்து கிள்ளியவள் அவன் புரளும் அரவம் கேட்க உடனே வெட்கபட்டு அவன் கையை விலக்கிவிட்டு வேகமாக எழுந்து குளியல் அறைக்குள் புகுந்து கொண்டாள்...
குளித்து முடித்து ஒரு புடவையை கட்டிக் கொண்டு கீழ வர, வழக்கம் போல சமையல் அறையில் நின்றிருந்தார் மீனாட்சி...நேராக அவரிடம் சென்றவள்
“குட் மார்னிங் அத்தை.. “ என்றாள்...
ஏனோ அவளால் அவர் முகம் பார்க்க முடியவில்லை.. காலையிலயே குளித்து முடித்து முகத்தில் லேசான பூரிப்பும் மற்றும் வெட்கத்துடன் மெல்ல நெழிந்தவாறு நின்றவளை கண்டதும் அவருக்கு புரிந்து விட, உள்ளுக்குள் அந்த ஈசனுக்கு நன்றி சொல்லியவாறே
“குட் மார்னிங் மருமகளே.... இந்த நாள் உனக்கு இனிய நாளாக அமையட்டும்... அப்படியே பூஜை அறைக்கு சென்று அந்த ஈஸ்வரனுக்கு உன் கையால் விளக்கை ஏற்றி பூஜை செய்திடறியா?.. நான் எல்லாம் தயாராக வைத்திருக்கிறேன்.. “ என்றார் சிரித்தவாறு..
அவருக்கு விசயம் புரிந்து தான் இதை செய்ய சொல்கிறார் என உறைக்க மலரும் அதற்கு மேல் அங்கு நிற்க வெட்க பட்டு சரி அத்தை என்று ஓடி விட்டாள்...
விளக்கேற்றி வைத்து பூஜை முடிக்க கை கூப்பி அந்த ஈசன் முன் நின்றவள்
“ஹாய் ஈஸ்..ஐம் சோ ஹேப்பி...நான் முன்பு வேண்டியது தான் இப்பவும்.. எனக்கு ஒரு நல்ல கணவன் நல்ல குடும்பத்தை கொடுத்திருக்கிறாய்..ரொம்ப நன்றி உனக்கு..
ஆனால் எதையும் நீ எளிதில் யாருக்கும் கொடுத்து விட மாட்டாய் என தெரியும். பல சோதனைகளுக்கு பிறகு தான் நீ அருள்வாய்..உன் பொண்டாட்டியை யே பரிட்சை வைத்து சோதித்தவன் அல்லவா..
எனக்கு நீ இந்த வாழ்க்கையை கொடுத்தது முன்பு நான் கடந்து வந்த சோதனைக்காகவா? இல்லை முதலில் எனக்கு இந்த மகிழ்ச்சியை கொடுத்து அப்புறம் என்னை சோதிக்க
Like Padmini Selvaraj's stories? Now you can read Padmini Selvaraj's full novels at Chillzee KiMo. No wait time, No ads, No restrictions!!!
Mithra too much