(Reading time: 11 - 21 minutes)
Vannamillaa ennangal
Vannamillaa ennangal

தொடர்கதை - வண்ணமில்லா எண்ணங்கள் - 13 - ஸ்ரீ

ஷியாமா கூறிய ஒவ்வொன்றையும் யோசிக்க யோசிக்க தலை வலி எடுத்தது மகிழனிற்கு.

இன்னும் ஏன் தாமதிக்கணும் வா இப்போவே போய் அவங்களை விசாரிக்கலாம்..”

இதுக்காக தான் உங்ககிட்ட எல்லாத்தையும் சொல்றதுக்கு நான் யோசிச்சேன்கொஞ்சம் பொறுமையா இருங்க அல்மோஸ்ட் கண்டுபிடிச்சுட்டேன்..ஆனாலும்..”

கண்டுபிடிச்சுட்டியா??”

ம்ம் எனக்கு என்னவோ உங்க பெரியம்மாதான் குற்றவாளினு தோணுது..”

“!!!”

இது இப்போ இல்ல..நான் வந்த கொஞ்ச நாள்லயே தோணிண விஷயம் தான்..ஆனா அதை உறுதிப்படுத்த என்கிட்ட எந்த ஆதாரமும் இல்லை..இன்னும் கொஞ்சம் நேரம் கொடுங்க..”

ஆனா அவங்க தனியா??”

ம்ம் தனியா இல்ல யாரோ துணையோட தான் பண்றாங்க..அதுவும் உங்க வீட்டுக்குள்ள இருக்குறவங்க தான்..எனக்கு மொத்தமா சந்தேகங்களுக்கு விடைதெரியுற வரை நேரம் கொடுங்க மகிழன் ப்ளீஸ்.”

சரி ஷியாமா..ஆனா அடுத்து யாருக்கும் எந்த பிரச்சனையும் நடக்குறதுக்கு முன்னாடி…”

புரியுது கண்டிப்பா அதுகுள்ள எல்லாத்தையும் முடிவுக்கு கொண்டு வந்துரலாம்..”,என்றவள் மேலும் பேசிவிட்டு வீட்டுக்கு கிளம்புவதாய் கூறிக் கிளம்பினாள்.

அவள் உள்ளே நுழைந்த நேரம் பக்கவாட்டுப் பகுதியில் ஏதோ அரவம் கேட்க,”யாரது??”,என்று சத்தமாய் குரல் கொடுத்தாள்.

மேடம் நான் தான்..”,என்றவாறு மெதுவாய் எட்டிப் பார்த்தான் கல்யாணியின் தம்பி..

நீங்க இந்த நேரத்துல இங்க என்ன பண்றீங்க?”

மேடம் ப்ளீஸ் இந்தப்பக்கம் தள்ளி வந்து பேசுங்களேன்..இந்த இடம் மட்டும் தான் வீட்ல எங்கிருந்து பார்த்தாலும் வெளியே தெரியாது..என்னை நம்புங்க..ஒரு இரண்டு நிமிஷம்..”

அக்கம்பக்கம் பார்த்தவாறு அவனருகில் வந்தவள் என்னவென்பதாய் அவனைப் பார்த்து நிற்க குரலைத் தாழ்த்தியவனாய்,

நீங்க ஐயாவோட ப்ரெண்ட் இல்லனு எனக்குத் தெரியும்..”

வாட்??”

ஆமா..நீங்க இல்ல சின்னையாக்கு ப்ரெண்ட்னு யாருமே கிடையாது..அது மட்டுமில்லாம நீங்க அவரு காலேஜ் கூட கிடையாது..”

இதெல்லாம்??”

நான் சின்னையாக்கு காவலா அவருக்குத் தெரியாம அவங்களையே தான் பாதுகாத்துட்டு

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.