(Reading time: 11 - 21 minutes)
Vannamillaa ennangal
Vannamillaa ennangal

சில நிமிடங்களில் மோனிஷா ஒரு புத்தகத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து கொள்ள ஷியாமா ஒவ்வொரு புத்தகத்தையாய் நோட்டமிட ஆரம்பித்தாள்.

இல்லாத புத்தகங்களே இல்லை எனுமளவிற்கு அத்தனைப் பிரிவிலும் குறைந்தது ஒரு புத்தகமாவது இருந்தது.ஒரு அலமாரியைத் தொடர்ந்து அடுத்த பகுதியை பார்த்தவளுக்குச் சற்றே ஆச்சரியம் எழுந்திருந்தது.

ஜோதிடம் ஜாதகம் பற்றிய புத்தகங்களே பாதிக்கு மேல்  ஆக்கிரமித்திருந்தன.

உங்க தாத்தாவுக்கு ஜோசியம் ஜாதகம் மேல எல்லாம் ரொம்ப நம்பிக்கையோ?

ஆமா எங்களுக்கு குடும்ப ஜோசியர்னு ஒரு நம்பூதிரி இருந்தாராம்.அவரு என்ன சொல்றாரோ அதைக் கேட்டு தான் தாத்தா நடப்பாறாம்.யாரும் வீட்டை விட்டு வெளில போணும்னா கூட நல்ல நேரம் சகுணம் பார்த்து தான் அனுப்புவாராம்

எங்க பெரியப்பா இறந்த அப்பறமே இந்த நம்பிக்கையெல்லாம் தாத்தாவுக்கு விட்டுப் போச்சுனு சொல்லுவாங்க..”

ஓ அந்த நம்பூதிரியை நீ பார்த்துருக்கியா?ஏன்னா நான் இதெல்லாம் முதல் தடவை கேள்விப்படுறேன்..”

இல்லை நான் பார்த்தமாதிரி நியாபகம் இல்ல..பொதுவா அவருக்கும் தாத்தாக்குமான மீட்டிங் தான் அதிகம்னு சொல்லுவாங்க பாட்டி கூட தலையிட மாட்டாங்கனு தான் நினைக்குறேன்..

சரி அதை விடுங்க கா இங்க பாருங்க ஜெய்ப்பூரோட கட்டிட கலை பத்தின புக்..நம்ம ஆம்பர் ஃபோர்ட் பத்தியெல்லாம் கூட இருக்கு பாருங்க..அந்த காலத்துலயே எவ்ளோ யோசிச்சு கட்டிருக்காங்க இல்ல ஆச்சரியமா இருக்கு..இந்த சுரங்க பாதைஎதிரிகள்கிட்ட இருந்து தப்பிக்குற ரகசிய அறைனு..டெக்னாலஜியே இல்லாம எவ்ளோ பண்ணிருக்காங்க பாருங்க”,என அவள் போக்கில் பேசிக் கொண்டிருக்க ஷியாமாவிற்கு சட்டென ஒரு விஷயம் தோன்றியது.

ஏன் மோனி..இந்த வீடு முதல்ல இருந்தே இப்படி தான் இருக்கா அதாவது உங்க தாத்தா காலத்துக்கு முன்னாடி?”

இல்லக்கா தாத்தா தான் இதை மொத்தமா மாத்திக் கட்டினார்னு கேள்வி பட்டுருக்கேன்..”

..இந்த வீட்டோட ப்ளான் இல்ல..மாடல் எதாவது கிடைக்குமா?”

ம்ம்..இருக்கும் கா..கிட்டதட்ட இராஜாக்களுக்கு அடுத்தபடியா இருக்குறதுனால அப்போவே இது அரண்மணை மாதிரி தான் இருக்கும்னு சொல்லுவாங்க..இந்த புக்லயே கூட இருக்க வாய்ப்பு இருக்கு..இருங்க பார்க்கலாம்..”,என்றவாறு புத்தகத்தின் பக்கங்களைத் திருப்ப ஆரம்பித்திருந்தாள்.

அதற்குள் ஷியாமா முதன் முதலாய் வர்மாவின் அறைக்குச் சென்று தான் கண்ட

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.