Vannamilla ennangal is a Family / Friendship genre story penned by Sri.
This is her tenth serial story at Chillzee.
வணக்கம் மக்களே,
வண்ணமில்லா எண்ணங்கள் என்னுடைய அடுத்த கதை, ஸ்ரீயின் தனித்துவம்னு சொல்ற அளவுக்கு என் கதைகள் அத்தனையும் கொண்டிருந்த ஒரு விஷயம் நேர்மறை உணர்வுகள் அதிலிருந்து கொஞ்சம் வித்தியாசமா பயணிக்கப் போறோம்.
நடைமுறை வாழ்க்கை தான் பல உணர்வுகள் கலந்ததா இருக்கு நம்ம கதையாவது எல்லாருக்கும் எப்பவும் பாசிட்டிவிட்டியை கொடுக்கட்டும்னு நினைச்சு தான் என் அத்தனை கதையும் எழுதிருக்கேன்
ஆனால் இரண்டு மூன்று முறை என் கதைக்கான கருத்தை பகிர்ந்துகிட்ட நட்புகள் சொல்லிருக்காங்க எப்பவுமே இத்தனை அழகா காதலையும் வாழ்க்கையும் காட்டாதீங்க..நிஜத்தில் வாழ்க்கை கோபம் வன்மம் வெறுப்பு பேராசைனு எத்தனையோ விஷயத்தை வச்சு பமுறுத்துது அதை உங்க கதையில் கொண்டு வந்தா எப்படி இருக்குனு பார்க்கனும்.
இந்த கதை அதன் அடிப்படையில் எழுத ஆரம்பிக்குறது தான்.நம் வாழ்க்கையில் நாம பார்த்த எத்தனையோ குணங்கள் கொண்ட மனிதர்கள் தான் இந்த கதை மாந்தர்கள்.வழக்கம் போல் இதுவும் எனக்கான புது முயற்சி உங்க அத்தனை பேரோட ஆதரவோடு கண்டிப்பா நல்ல படியா முடிப்பேன்னு நம்பிக்கை இருக்கு.
விரைவில் முதல் அத்தியாயத்தோடு சந்திக்க வருகிறேன்😊😊
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.