(Reading time: 12 - 23 minutes)
Vannamillaa ennangal
Vannamillaa ennangal

தொடர்கதை - வண்ணமில்லா எண்ணங்கள் - 08 - ஸ்ரீ

முத்து கூறியதனைத்தையும் கேட்டவளுக்கு ஒரு இறப்பைப் பற்றி கண்டறிய வந்தால் இங்கு வேறு என்னவெல்லாமோ கண்டுபிடிக்கப் பட வேண்டிய உண்மைகள் இருக்கின்றதே என்றே தோன்றியது.

சில நிமிடங்கள் அப்படியே அமர்ந்திருந்தவளுக்கு கோபமாய் கிளம்பிச் சென்ற மகிழனின் நினைவு வர அவனிடம் அப்படி பேசியிருக்கக் கூடாது என்ற எண்ணம் எழுந்தது.இருக்கும் கஷ்டத்தில் அவனை மேலும் கடுப்பேற்றியிருக்க வேண்டாம் என்ற எண்ணம் வரவே யோசிக்காமல் அவனது எண்ணிற்கு அழைத்தாள்.

முழு அழைப்பும் அழைத்து ஓய்ந்ததே அன்றி அவனிடமிருந்து பதில் இல்லாமல் போனது.சரி நேரில் பார்த்து விஷயத்தை புரிய வைத்து வரலாம் என்று எண்ணியவளாய் முத்துவிடம் வெளியே சென்று வருவதாய் கூறிவிட்டு அவர் எத்தனை கூறியும் கேட்காமல் ஆஷிக்கின் இரு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு மகிழனின் அலுவலகத்தை நோக்கி கிளம்பியிருந்தாள் ஷியாமா.

அவள் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு உள்ளே சென்று வரவேற்பாளினியிடம் தன் பெயரைக் கூறி மகிழனை சந்திக்க வேண்டும் என்று கூறிவிட்டு காத்திருக்க அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் அவளை உள்ளே செல்லுமாறு பவ்யமாய் கூறி அனுப்பினாள்.

மே ஐ கம் இன்?”

வா..”,என்றவனின் குரலும் முகமும் இன்னுமே கடுப்போடு தான் இருந்தது ஷியாமாவிற்கு நன்றாகவே தெரிந்தது.

சாரி மிஸ்டர் மகிழன்.ஐ டின்ட் மீன் இட்..”

“…”

சாதாரணமா இந்த மாதிரியான விளக்கம் எல்லாம் யாருக்கும் நான் தரதில்ல ஆனா நேத்து நீங்க பேசின அப்பறம் உங்களுக்கு ஒரு ப்ரெண்டா ஹர்ட் பண்ணிருக்க வேணாமோனு தோணிச்சு..அதனால தான் வந்தேன்..மத்தபடி எனக்கு இந்த கன்வின்ஸ் பண்றதெல்லாம் ஒழுங்கா வராத விஷயம்  முடிஞ்சா நீங்களே நார்மல் ஆகுங்க..”,என்று அவள் கூறிய விதத்தில் சட்டென உதட்டோரத்தில் மென்னகை வந்திருந்தது மகிழனிடம்.

அதைப் பார்த்தவளோ பெருமூச்சுடன்,”தேங்க் காட்..ரொம்ப பேசணுமோனு நினைச்சேன் பரவால்ல..

மத்த விஷயங்கள்னா நானும் பெருசா எடுத்துக்க மாட்டேன் பட் உங்க அப்பாவைப் பத்தி பேசிருக்க கூடாதுனு தோணிச்சு என்ன தான் அடாவடியா இருந்தாலும் ஒரு சாதாரண குடும்பத்து பொண்ணா சில சென்ட்டிமென்ட்ஸ் இருக்க தான் இருக்கு..ஓகே வந்த வேலை முடிஞ்சுது..நான் கிளம்புறேன்..”

தேங்க்ஸ்

ஃபார் வாட்?”

ப்ரெண்ட்னு சொன்னதுக்கு..”

கமான்..”

இல்ல ஐ அம் நாட் ஓவர் ரியாக்டிங்..நேத்தே சொன்ன மாதிரி நடக்குற பல விஷயங்கள் என்னை கொஞ்சம் வீக் ஆக்குது..அப்படிபட்ட நிலைமைல இது ரொம்பவே தேவையான ஒரு விஷயமா இருக்கு..அதனால தான் சொன்னேன்..”

எனிவே இனியாவது நான் எதாவது சாதரணமா சொன்னா கூட தப்பா எடுத்துக்காம டென்ஷன் ஆகாம இருப்பீங்கனு நம்புறேன்..”

வில் ட்ரை மை பெஸ்ட்..”,என்றவன் தோள் குலுக்கி புன்னகைக்க இடவலமாய் தலையசைத்தவள் குடிப்பதற்காக தண்ணீர் கேட்டு காத்திருந்தாள்.பணியாள் அதை எடுத்து வரும் நேரத்திற்குள் அறையை ஒரு முறை பார்வையால் அளவெடுத்தவள்,

ரொம்ப ப்ளசான்டா இருக்கு உங்க ஆபீஸ்..இன்ட்டீரியர்ஸ் கூட..”,என்றவாறே அங்கிருந்த புகைப்படங்களைப் பார்வையிட்டாள்.வர்மா குரூப் ஆப் கம்பனிகள் வாங்கிய விருதுகளும் சான்றிதழ்களும் அது சார்ந்த புகைப்படங்களும் இருந்தன.

மகிழனின் தாத்தா சந்திர வர்மாவைத் தொடர்ந்து இன்னொரு புகைப்படத்தில் மற்றொருவர் பரிசு வாங்குவதைப் போல் இருந்த புகைப்படத்தை கைநீட்டி மகிழனை அவள் ஏறிட,

என் அப்பா அமித் வர்மா..”

…”,என்றவாறே தொடர்ந்தவளுக்கு அடுத்து இருந்த புகைப்டத்தில் பார்வை பதிந்தது.ஏதோ விருது விழாவாக இருக்க வேண்டும் சற்றே வயது முதிர்ந்த ஒருவரின் வலது புறம் மகிழன் நின்றிருக்க மறுபுறம் இன்னொரு இளைஞன் நின்றிருந்தான்.அதைப் பார்த்தவளுக்கு ஏதோ ஒருயோசனை ஓட ஆரம்பித்திருந்தது.

இது..”,என்று அவள் கேட்கத் தொடங்கிய நேரம் பணியாள் அவளுக்கான தண்ணீரையும் பழரசத்தையும் வைத்துவிட்டுச் செல்ல அந்த புகைப்படத்தை நோக்கி வந்து நின்றான் மகிழன்.

என்னாச்சு?”

இல்ல இது..இவரையாரு இது?”

எங்க மார்பிள் பிஸினஸோட டஃப் காம்படீடர்..சூரஜ் மார்பிள்ஸோட எம் டீ சூரஜ்.என்னைவிட இரண்டு வயசு சின்னவன் தான் ஆனா தொழில்ல பயங்கர சின்சியர்.

இது இந்த இயர்க்கான பிஸினஸ் அவார்ட்ஸ்ல எடுத்த போட்டோ.நாங்க நம்பர் ஒன்னு சொன்னா

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.