(Reading time: 12 - 23 minutes)
Vannamillaa ennangal
Vannamillaa ennangal

அவங்க நம்பர் டூ..எனக்கு பெருசா தனிப்பட்ட முறைல அவனைத் தெரியாது ஆனா மாமா இரண்டு பேருக்கும் அவனை அவ்வளவா பிடிக்காது.

கான்ட்ராக்ட் விஷயத்தில் எல்லாம் அடிக்கடி முட்டிக்கும் இரண்டு பேருக்கும்.ஆமா ஏன் கேட்குற?இவனைத் தெரியுமா??”

இல்லை..ஆனா எதோ ஒரு நியாபகம் சட்டுனு மைண்ட்ல வர மாட்டேங்குது..இந்த பார்வை எங்கேயோ பாத்துருக்கேன்.ம்ம்ம்..”,என்றவள் யோசனையாய் நெற்றியைத் தேய்த்துக் கொண்டிருக்க மகிழன் அவளை விசித்திரமாய் பார்த்திருந்தான்.

மே பி டீவி இன்டர்வீயூஸ் இல்லை வேற எங்கேயாவது கூட பார்த்துருப்ப..”

நோ அப்படி எதுவும் இல்லை..பட் வேற எங்கேயோ ..அது..ஹான்உங்க வீட்ல இரண்டு நாள் முன்னாடி மார்னிங் பார்த்தனே!!”

வாட்???”

எஸ் மகிழன் ஐ அம் ஷுவர்..இந்த ஐஸ் பாடிலேங்குவேஜ் எல்லாமே..எனக்கு நியாபகம் இருக்கு..”

நோ வே..அவனுக்கு எங்க வீட்டுக்கு வர வேண்டிய அவசியம் என்ன?அது மட்டுமில்லாம தொழில் பகைனு பார்த்தா கூட அவனே நேரா வந்து செய்யுற அளவு முட்டாள் இல்ல..”

கரெக்ட் தான்..பட் இத்தனை சந்தேகம் வரும் போது அதை தெளிவு படுத்திக்கிறது நல்லதுனு தோணுது.டூ டேஸ் டைம் கொடுங்க..விசாரிச்சுரலாம்.”

பட் ஷியாமா இதுல ரொம்பவே ரிஸ்க்..எதாவது தப்பாச்சுனா தொழில் அளவுல பெரிய பிரச்சனை வந்துரும்..பீ கேர்புல் பிஃபோர் யூ டூ எனிதிங்.”

கண்டிப்பா அது என் கடமையும் கூட..ஒரு லீடும் கிடைக்காம இருந்ததுக்கு இது பரவால்ல இல்லையா அதை விடுறதுக்கு நான் தயாரா இல்லை..ஓகே வில் அப்டேட் யூ சூன் மகிழன்.”,என்றவள் சூரஜின் விவரங்களை அவனிடம் கேட்டு வாங்கிக் கொண்டு அங்கிருந்து கிளம்பினாள்.

தன் டிபார்ட்மென்டின் உதவியுடன் அவனைப் பற்றிய விவரங்கள் அனைத்தையும் அடுத்த ஒரு மணி நேரத்தில் பெற்றிருந்தவளுக்கு எதோ ஒரு விதத்தில் ஒரு சிறு சந்தேகம் எழுந்திருந்தது.

அதை உறுதி செய்து கொள்ள எண்ணியவளாய் தனதறை விட்டு வெளியே வந்தவள் மோனிஷாவைத் தேடி அவளறைக்குச் சென்றாள்.

ஹாய் மோனி..”

ஹாய் கா வாங்க..பைக் எல்லாம் செமயா ஓட்டுறீங்களே!”

ஹா..இந்த வீட்ல யாரு எப்போ எங்கிருந்து நோட் பண்ணுவீங்கனே புரிய மாட்டேங்குது..”

ஹா ஹா இங்க என் ரூம் விண்டோல இருந்து பார்த்தா பின்னாடி ஷெட் தெரியும்..அப்படிதான் தற்செயலா பார்த்தேன்…”

ம்ம் எல்லாரும் ரூம்குள்ள இருந்தே ஸ்பை வேலை பார்க்கலாம்னு சொல்ற அப்போ..”

ம்ம் அப்படியும் சொல்லிக்கலாம் ஆனா நான் எல்லாம் எப்போவாவது தான் இப்படி எதையாவது நோட் பண்ணுவேன்..இந்த தியா தீப்தி தான் முழுநேர  வேலையா இதை பண்ணுவாங்க..அதுவும் பால்கனில உக்காந்து அரட்டையை ஆரம்பிச்சா நேரம் காலம் தெரியாம பேசுவாங்க..பத்தாததுக்கு போன் ஒண்ணு வேற..கேட்கவே வேணாம்..”

..அப்போ இந்த ப்ளோர் பால்கனியோட எண்ட்ல இருக்குறது யார் ரூம் தீப்தி ஆர் தியா?”

அது தியாவோடது தான்நீங்க பார்த்ததில்லயா பாதி நேரம் போனும் கையுமா அங்கேயே தான் சுத்திட்டு இருப்பா..”

ம்ம் உன்னை விடபெரியவ தான அவ..படிச்சு முடிச்சு எப்படி வீட்லயே இருக்க ஒதுக்கிட்டா..நீயாவது தமிழ் படிக்குற அது இதுனு எதாவது பண்ற..”

எங்க குடும்ப படிப்பு எம்பிஏ..அதிலிருந்து தப்பிச்சது நான் மட்டும் தான்..நீங்க நினைக்குறது மாதிரி நானும் நினைச்சுருக்கேன்..எம்பிஏ முடிச்சுட்டு எப்படி இவ இப்படி வீட்டுகுள்ளேயே இருக்கானு தோணும்.

ஒரு தடவை கேட்கவே கேட்டேன்..அவ சொன்ன பதில் நினைச்சு இப்பவும் சிரிப்பு தான் வருது.

எனக்குப் பிடிச்சா, இந்த படிப்பை படிக்க வச்சாங்க அவங்களுக்குத் தேவை டிகிரி அதை வாங்கிட்டேன்.அதுக்கு மேல யாரும் எதுவும் என்னை சொல்லக் கூடாது.எனக்கு இப்படி இருக்கத் தான் பிடிச்சுருக்கு..மே பி ப்யூச்ர்ல என் புருஷனுக்கு தொழில்ல ஹெல்ப் பண்றதுனா பண்ணுவேன்.இங்க இருக்குற வரை ராணி மாதிரி வாழ்க்கையை என்ஜாய் பண்ணுவேன்னு சொன்னா.”

பரவால்ல பக்கா ப்ளான்ல தான் இருக்கா..ஆமா எம்பிஏ அவ எந்த காலேஜ்?”

டெல்லில இருக்குறதுலயே காஸ்ட்லியஸ்ட் காலேஜ் அங்க தான் படிச்சா..ஆமா நீங்க ஏன் அவளைப் பத்தி இவ்ளோ கேட்குறீங்க?”

ஹே எங்கேயோ ஆரம்பிச்சு பேச்சு எங்கேயோ போய்டுச்சு மத்தபடி இன்டென்ஷனோட எல்லாம் எதுவும் கேட்கல..”,எனும்போதே அவளது அலைப்பேசி அலற ஆரம்பித்திருக்க மோனிஷாவிடம் விடைபெற்று வெளியே வந்தவளுக்குத் தேவையான தகவலை அலைப்பேசி கொடுத்திருந்தது.

அடுத்தநாள் காலை சூரஜை பார்ப்பதற்கான ஏற்பாடுகளை செய்துவிட்டு அங்கேயே நின்று தோட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தாள்.கீழே கல்யாணியின் தம்பி மட்டும் அவளுக்கு முதுகுகாட்டி நின்றிருந்தபடி செடிகளை சீரமைத்துக் கொண்டிருந்தான்.

சட்டென எங்கிருந்தோ வந்த கல் ஒன்று அவனின் பின் தலையை சரியாய் பதம்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.