(Reading time: 12 - 23 minutes)
Vannamillaa ennangal
Vannamillaa ennangal

பார்த்திருந்தது.அதைப் பார்த்தவள் பதறிப் போய் கீழே ஓடிச் சென்று அவனை கையில் ஏந்தி ரத்தம் வெளியேறாத வண்ணம் பின்னந்தலையைத் தன் கைகுட்டையைக் கொண்டு அழுத்திப் பிடித்தவறே முத்துவிற்கும் மற்றர்களுக்கும் குரல் கொடுத்தாள்.

அவரை அழைத்தவாறே தலையைத் திருப்பியவள் மாடியைப் பார்க்க ஐம்பதுகளை எட்டிய பெண் ஒருவர் கையைத் தட்டியவாறே அவனை காண்பித்து சிரித்துக் கொண்டிருந்தார்.

மகிழனின் தாயாக இருக்க வேண்டும் என்று தோன்றியது சட்டென மூளை அதுவாய் அந்த பார்வையை ஆராய முனைந்தது.அதற்குள் அவரை உள்ளிருந்து யாரோ இழுத்துச் செல்வது தெரிந்தது.

அதற்குள் இங்கு வேலையாட்கள் சூழ்ந்துவிட அவனை ஓரமாய் அமர வைத்து முதலுதவி செய்யத் தொடங்கினர்.இரத்தம் நிற்காமல் இருப்பதைக் கண்டு உடனடியாய் கல்யாணியோடு மற்றொருவரும் சேர்ந்து அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

முத்துவின் அருகில் வந்தவள்,”மாடியில் ஒரு லேடி..அவங்க தான் இதைப் பண்ணிணாங்கனு நினைக்குறேன்..”

தியாம்மா தான் அது..என்ன ஆச்சுனே தெரில அப்பப்போ இந்த மாதிரி நடந்துக்குறாங்க இப்போ எல்லாம்.பெரியய்யா இறந்த அப்பறம் ரொம்பவே அதிகமாகுது இது.சில நேரங்கள்ல ராத்திரி எல்லாம் தோட்டத்துல சுத்துறாங்களாம்.சில நேரம் கண்மன் தெரியாம வீட்டுக்குள்ளேயே ஓடுறாங்களாம்..இன்னைக்கு என்னனா இப்படி ஆய்டுச்சு..அந்த கடவுள் என்ன நினைச்சுட்டு இருக்காரோ ஒண்ணும் புரில.நான் போய் மகிழன் தம்பிக்கு விஷயத்தை சொல்றேன்.”

என்றவர் உள்ளே செல்ல ஷியாமா மீண்டுமாய் மாடியையே பார்த்திருந்தாள்.சில நொடிகளில் உணர்வு பெற்றவளாய் அங்கிருந்து உள்ளே செல்ல அங்கு சாந்தி தேவியும் ரமா தேவியும் வழக்கம் போல் பிரச்சனையை ஆரம்பித்திருந்தனர்.

இதெல்லாம் வீடா எப்போ என்ன நடக்கும்னு தெரியாம உயிரை கையில பிடிச்சுட்டு இருக்க வேண்டியதா இருக்கு..இந்த பைத்தியம் எப்போ என்ன பண்ணும்னு வேற தெரில..எல்லாம் தலையெழுத்து..”

என்று வாய்க்கு வந்தபடி கத்திக் கொண்டிருக்க மோனிஷாவும் ஆஷிக்கும் அவளுக்கு செய்கை செய்தபடியே மெதுவாய் உள்ளே இருந்த அறைக்குச் சென்றுவிட அவர்களைத் தொடர்ந்தவாறு ஷியாமாவும் சென்றாள்.

நீங்க பெரியம்மாவை பார்த்தீங்களா?”

ம்ம்..”

எப்படி இருக்காங்க இப்போ..எங்களுக்கு அவஙங்க முகமே மறந்துடும் போல இருக்கு..பழைய போட்டோல தான் பார்த்துக்குறோம்..”

நீங்க அவங்களோட அறைக்குப் போனதே இல்லையா?”

ஐய்யோ தாத்தா எங்களை விடவே மாட்டார்.அதுக்கப்பறம் அண்ணாகிட்ட கேட்க கூட மாட்டோம்.சின்ன வயசுல சில நேரம் திருட்டுத் தனமா பார்க்க ட்ரைப் பண்ணிருக்கோம்..”

பழைய போட்டோ எதாவது உங்ககிட்ட இருக்கா?நான் பார்க்கலாமா?”

ஓ நீங்க அந்த ரூம்க்கு போய்ருக்க மாட்டீங்கல..வாங்க கூட்டிட்டு போறோம்..”,என்றபடி ஆஷிக் பெண்கள் இருவரையும் அழைத்துச் சென்றான்.

பூஜையறைக்கு அருகிலேயே இருந்த பெரிய கதவை திறந்தவன் அங்கிருந்த விளக்குகளை ஒளிர விட அறை மொத்தமும் புகைப்படங்கள் மட்டுமே இருந்தன.சுவர்கள் முழுவதும் வர்மா பரம்பரையின் நிழற்படங்கள் பெரிது பெரிதாய் ப்ரேம் செய்யப்பட்டு மாட்டிப்பட்டிருந்தன.

வாங்க இந்த ரூம் தான் தாத்தாவோட பொக்கிஷம்.அவரோட புக்ஸ் எல்லாம் அதோ அந்த அலமாரி மொத்தமும் இருக்கு.அவரைத் தவிர படிக்குற பழக்கம் வீட்ல யாருக்கும் கிடையாது சோ யாரும் தேவையில்லாம இங்க வர மாட்டோம்.”,என்று ஆஷிக் கூறிய அலமாரியை ஏறிட்டவள் அடுத்ததாய் புகைப்படங்களை ஏறிட்டாள்.

சந்திர வர்மாவின் தாத்தா கால புகைப்படங்கள் தொடங்கி தற்போதைய வாரிசுகளோடு அவர் எடுத்திருந்த புகைப்படம் வரை அத்தனையும் இருந்தது.மோனிஷா மகிழனின் தாய் தந்தை புகைப்படத்தை அவளிடம் காட்டினாள்.

இவங்க தான் பெரியம்மா பெரியப்பா..எவ்ளோ அழகா இருக்காங்க இல்ல..”

உண்மையாகவே இருவருமே அத்தனை பொருத்தமான ஜோடியாக இருந்தனர்.அதிலும் மகிழனின் தாயார் அத்தனை லட்சணமான முகம்.அதே நேரம் ஆடம்பரமற்றவராய் இருந்தார்.

இந்த படத்துல இருக்குறவங்களை தான் நான் பார்த்தேனாங்கிற அளவு மாறிட்டாங்கரொம்ப அழகா இருக்காங்க இதுல ஆனா ரொம்பவே எளிமையா இருக்குற மாதிரி இருக்கே..”

ஆமா அவங்க எப்பவுமே அப்படிதானாம் அம்மா சொல்லிருக்காங்க..அம்மா சித்தி எல்லாரும் பிறந்த இடத்துலயே கொஞ்சம் வசதி படைச்சவங்க தான்.ஆனா பெரியம்மா ரொம்பவே கஷ்டப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவங்காளாம்.பாட்டியும் தாத்தாவும் இவங்க தான் மூத்த மருமகளா வரணும்னு தமிழ்நாட்டுக்குப் போய் அங்கேயே கல்யாணமும் பண்ணி கூட்டிட்டு வந்தாங்களாம்.”

என்ன??”

ஆமா எங்க பெரியப்பா கல்யாணத்துக்கு யாருமே போகலையாம்.தாத்தாவும் பாட்டியும் மட்டும் தான்.”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.