மறுநாளின் அதிகாலையிலேயே எழுந்திருந்த இருவருக்குமே இரு வேறு மனநிலை.ஷியாமா கூறிய எச்சரிக்கைகள் மகிழனின் மனதை உறுத்திக் கொண்டிருந்தது என்றால் மகிழனுடனான நட்பு ஷியாமாவிற்கு சற்று குழப்பத்தைக் கொடுத்திருந்தது.
இருந்தும் அதைக் கடந்த அன்றைய கடமை அவர்கள் இருவருக்குமே இருந்ததால் அதைக் கவனிக்கச் சென்றிருந்தனர்.ஷியாமாவிற்காக ஒரு காரை ஏற்பாடு செய்து அவள் கிளம்பும் வரை காத்திருந்து அதன் பின் தன் மீட்டிங்கை கவனிக்கச் சென்றான் மகிழன்.
நீலகிரியை நோக்கிய பயணம்..முதன்முறை வருவதாலோ என்னவோ சற்றே அவளை கவர்ந்திழுத்தது இயற்கையின் அழகு.இப்போது எத்தனையோ வசதிகள் வந்துவிட்ட காரணத்தால் அவன் தாயின் கிராமத்திற்கு அருகில் இருக்கும் ஒரு உயர்தர ரெசாட்டில் அவளுக்கு அறை பதிவு செய்து கொடுத்திருந்தான்.
ரெசார்ட்டை அடைந்தவள் தன் உடைமைகளை அங்கு வைத்துவிட்டு கிராமத்திற்குள் சென்றாள்.சிறிது சிறிதாய் அத்தனை வீடுகள்.மலையரசியின் இருப்பிடத்தில் அவர்களின் வாழ்வு என்பது அத்தனை அழகாய் இருந்தது பார்ப்பதற்கு.
அவளது உடையைக் கொண்டே வெளியூர் ஆள் என்பதை கணித்தவர்கள் தங்களுக்குள் பேசிக் கொள்ள பெண் என்பதால் யாரும் எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை.
ஒரு வீட்டின் வாசலில் அமர்ந்து இரண்டு பாட்டிகள் பேசிக் கொண்டிருக்க அவர்களை நோக்கிச் சென்றவள்,
“பாட்டி ஒரு 15-20 வருஷத்துக்கு முன்னாடி சந்தியானு இங்க அவங்க அம்மா அப்பாவோட இருந்தாங்க உங்களுக்குத் தெரியுமா?”
“எனக்கு போன வாரம் நான் சாப்ட்டதே மறந்துருது..என்னை பார்த்து கேட்குறியே தாயீ..தெரில..வேற யாரையாவது கேளு..சேதி தெரிஞ்சா சொல்லுவாக..”
அங்கங்கு கண்ணில் பட்ட பெண்களிடம் கேட்டுக் கொண்டிருந்தவளுக்கு சலிப்பு ஏற்பட்டிருந்தது.அவளுக்கே தோன்றியது வெறும் பெயரை வைத்து ஒருவரைப் பற்றிய விவரங்களை எப்படி பெற முடியும் என்று.
சற்றே களைப்படைந்தவளாய் கிளம்பத் தயாரான நேரம் அங்கிருந்த டீக்கடையில் இருந்த மூன்று நான்கு முதியவர்களில் ஒருவர் அவளை நோக்கி குரல் கொடுத்தார்.
“ஏம்மா..ரொம்ப நேரமா சுத்துறியே..யாரு நீ என்ன தகவல் வேணும்?”
“அது..சந்தியானு இந்த ஊர்ல ஒரு 20 வருஷம் முன்னாடி இருந்தவங்க அவங்களைப் பத்தி விவரம் தெரிஞ்சுக்கணும்..”
“வெறும் பேரை வச்சு என்னத்த மா கண்டுபிடிக்க முடியும்..வேற எதாவது விவரம் இல்ல அவங்க
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.
Thank you.