ஓங்கி ஒலித்திருந்த தியாதேவியின் குரலில் அந்த வீடே ஆடிப் போயிருந்தது.அந்த சாந்தமான அழகான முகத்தின் உக்கிரம் அத்தனை பேரையுமே உறையச் செய்தது.
அதற்கும் மேலாக ஒரு பெண் பத்து பதினைந்து வருடங்களாய் ஒரு அறையில் அடைந்து கிடந்து தன் வாழ்வையே தொலைத்து அதையும் விட கொடுமையாய் திட்டமிட்டு தன் குடும்ப நபர்களையே கொல்லத் துணிந்திருக்கிறாள் என்றால்.எத்தனை வெறி இருந்திருக்கும் என்பதை நினைத்தும் பார்க்க முடியவில்லை.
கால் மேல் கால் போட்டு அவர் அமர்ந்திருந்த தோரணையில் அத்தனை கம்பீரம்.எதற்கும் துணிந்துவிட்டவள் நான் எனும் அகந்தை இருந்தது.முத்துவின் கண்களோ கண்ணீரில் நிறைந்திருக்க,
“தியா ம்மா..நீங்க ஏன்..”
“விடுங்க முத்து..என்னைக்கு இருந்தாலும் இதெல்லாம் தெரிஞ்சு தான் ஆகணும்.என்ன என் புள்ளைகிட்ட மட்டும் சொல்லணும்னு நினைச்சதை இப்போ எல்லாருக்குமே சொல்றேன்..அவ்வளவு தான்..சொல்லு உனக்கு என்ன தெரியணும்?”
“என்ன னா??எல்லாமே தான்..உங்க கல்யாணம்தொடங்கி..உங்க அக்கா இங்க வந்தது தொடங்கி..மிஸ்டர் வர்மாவோடகொலை வரை எல்லாமே..”
“தெரிஞ்சு என்ன பண்ண போற…நான் இழந்த இத்தனை வருஷத்தை எனக்குத் திருப்பி கொடுத்துருவியா?சொல்லு!”
“உங்க நிலைமை எனக்குப் புரியுது ஆனா எக்காரணம் கொண்டும் நீங்க பண்ணின எதுவும் நியாயம் ஆகிடாது இல்லையா..”
“ம்ம் நியாயம்..அப்படி ஒண்ணு இந்த வீட்ல இருக்கா..அந்த வார்த்தையை சொல்ற தகுதி கூட யாருக்கும் கிடையாது.எல்லாத்துக்கும் காரணம் அந்த வர்மா..அவர் மட்டும் தான்…
எப்படி இருந்த என் வாழ்க்கை..அழகான என் குடும்பம் நான் அம்மா அப்பா அக்கானு நிம்மதியா இருந்த நாட்கள் எல்லாத்தையுமே அழிச்சு சுடுகாடா மாத்தினது அந்த வர்மா..
பல வருடங்களுக்கு முன்..
நீலகிரியின் அந்த அழகிய கிரமாத்தின் அழகான சிறு பறவையின் கூடு போன்ற அந்த வீட்டில் மகிழ்ச்சிக்குக் குறைவின்றி இருந்தது.
சந்தியாவின் தந்தை அன்றாட ஊதியம் பெரும் கூலி வேலைப் பார்த்து வந்தவராக இருப்பினும் இரு மகள்களையும் மனைவியையும் அத்தனை மகிழ்வாய் வைத்திருந்தார்.பிள்ளைகளும் பெற்றவருக்கு பாரம் கொடுக்காமல் அரசுப் பள்ளியில் படித்து சத்துணவு உண்டு காலத்தை ஓட்டிக் கொண்டிருந்தனர்.அப்போது அறிமுகமானவர் தான் பக்கத்து வீட்டிற்கு வந்த அமுதா
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.
Konjam more pages kudunga ji.....story mudinjàthe theriala avlo interesting epi ji....
Ellame unexpected twists than madam ji
thank you and great going