(Reading time: 14 - 27 minutes)
Vannamillaa ennangal
Vannamillaa ennangal

குடும்பம் அவளது பாட்டி பொதுவாக கிராமங்களில் அழைக்கப்படும் மருத்துவச்சி எனப்படும் செவிலிப் பணி செய்து வந்தார்.

அமுதாவிற்கும் சரண்யாவிற்கும் பாட்டியோடு சேர்ந்து மருத்துவ உதவி செய்வதில் ஆர்வம் இருக்க சுற்றி இருக்கும் கிராமங்களுக்குச் செல்லும் போது அவர்களையும் அழைத்துச் செல்வார்.அப்போது எல்லாம் வீட்டில் நடக்கும் பிரசவங்களே அதிகம் என்பதால் அவரை அழைத்துச் செல்ல பக்கத்து ஊர் மக்கள் கூட வருவர்.

இப்படியான அவரது விருப்பத்தைப் புரிந்து கொண்ட பாட்டி அவர் குடும்பத்துக்கு உதவும் என்று எண்ணி தெரிந்தவர்கள் மூலம் ஊட்டியில் உள்ள மருத்துவமனையில் தற்காலிகமாக சரண்யாவையும் அமுதாவையும் வேலைக்குச் சேர்த்து விட்டார்.

அதன் மூலம் ஓரளவு மருந்து மாத்திரைகளைப் பற்றி இருவரும் நன்றாகவே அறிந்து கொண்டனர்.இதற்கிடையில் அமுதாவிற்கு திருமணம் முடிந்துவிட பாட்டிக்கும் வயதான காரணத்தினால் சரண்யா வேலைக்கு செல்வதைக் குறைத்துக் கொண்டு அவருக்கு உதவியாய் சென்று கொண்டிருந்தாள்.

இயல்பிலேயே சரண்யா சற்றுத் துடுக்குத்தனம் நிறைந்தவராக இருக்க சந்தியாவோ பெற்றோரை அன்றி ஒன்றும் அறியாதவளாய் இருந்தாள்.மிகவும் சாது..அதிர்ந்து கூடபேசத் தெரியாது என்பார்களே அப்படியான பெண்.பள்ளியின் இறுதி வருடடத்தில் இருந்தாள்.

அப்படி ஒரு முறை சரண்யா பக்கத்து ஊர் சென்றிருந்தபோது தான் அவள் வீட்டிற்கு வர்மா தன் மனைவியோடு வந்திருந்தார். வாசலில் நின்றவர்களை யார் என்னவெனத் தெரியவில்லை எனினும் பெரிய மனித தோரணை நன்றாகவே இருந்ததால் உள்ளே அழைத்து அமருவதற்கு பாயை விரித்து நகர்ந்து நின்றனர் சந்தியாவின் பெற்றோர்.

லட்சுமி தேவி சாதாரணமாய் இருப்பதாய் தெரிந்தாலும் வர்மாவிற்கு அங்கு இருப்பதில் விருப்பமில்லை என்பது அவர் முக பாவனையிலேயே தெரிந்தது.

வணக்கம் நாங்க ஜெய்ப்பூரில் இருந்து வரோம்.இது என் கணவர்.பெரிய சமீன்தார் குடும்பம் எங்களோடது.இப்போ இங்க ஏன் வந்துருக்கோம்னாஉங்க பொண்ணை என் முதல் பையனுக்குப் பொண்ணு கேட்டு வந்துருக்கோம்..”

“!!!!”

அம்மா என்ன சொல்றீங்க..நீங்க யாரு என்னனே தெரில திடீர்னு வந்து இப்படி சொன்னா…”

உங்க பயம் புரியுது ஆனா அந்தளவு பயப்பட ஒண்ணும் இல்ல..எங்க பொண்ணு மாதிரி பார்த்துப்போம்..”

நீங்க சொல்றது எல்லாம் சரிம்மா ஆனா உங்க தகுதி என்ன!!அதுக்கு ஈடா எங்களால எதுவுமே

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.