(Reading time: 14 - 27 minutes)
Vannamillaa ennangal
Vannamillaa ennangal

கோயம்புத்தூரில் இருந்த ஒரு சிறு கோவில் மண்டபத்தில் இரு தரப்பு பெற்றோர் தவிர யாரும் இன்றி அமித்வர்மா சந்தியா தேவியின் கழுத்தில் தாலி கட்டியிருந்தார்.

திருமணம் முடிந்து மணமக்கள் சந்தியாவின் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்.ஊரே வந்து மணமக்களை வேடிக்கைப் பார்த்தது.அத்தனை பழியையும் தன் மேல் போட்டுக் கொண்டார் சந்தியாவின் தந்தை.

வதியான இடம் என்பதால் மகளுக்கு நல்வழி ஏற்படுத்திக் கொடுப்பதற்காக தானே இந்த கல்யாணத்திற்கு சம்மதம் தெரிவித்ததாகக் கூறிவிட்டார்.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாய் பேச ஆரம்பித்திருக்க பெற்றவர்களோ கண்ணீர் மல்க அமைதி காத்திருந்தனர்.அது மட்டுமன்றி வர்மா அங்கிருந்து கிளம்பும் நேரம் பெரிய தொகையை சந்தியாவின் அப்பா கைகளில் திணித்துவிட்டு  வந்தார்.

காரில் ஏறி அமரும் வரையுமே ஒரு ஜடம் போல் அத்தனையையும் செய்து கொண்டிருந்த சந்தியா தன் பெற்றோரைத் திரும்பியும் பார்க்கவில்லை.அதையும் விட அங்கிருந்து கிளம்பிய பின்னரே தன்னருகில் கணவன் என்று அமர்ந்திருந்தவனைப் பற்றிய சிந்தனையே எழுந்தது.பயம் மொத்தமாய் மனதை ஆக்கிரமித்திருக்க என்ன செய்ய வேண்டும் என்று கூடத் தெரியாமல் கண்ணை இறுக மூடி அமர்ந்து கொண்டாள்.

மணமக்கள் ஜெய்ப்பூருக்கு அழைத்து வரப் பட்டிருக்க வீட்டின் ஆடம்பரமும் செல்வச் செழிப்பும் பெரிதாய் மிரட்டியது.லட்சுமி தேவி தான் அவளை உண்மையாகவே மகள் போல் பார்த்துக் கொண்டார் ஒவ்வொரு கட்டத்திலும்.வீட்டில் மற்றவர்களைப் பார்த்த போது மேலும் பதட்டம் அவளிடத்தில்.

அதைவிட உள் நுழைந்த அடுத்த நொடி அமித் வர்மா ஒன்றும் கூறாமல் அவர் போக்கில் உள்ளே சென்று விட அவரவர் வேலையைப் பார்க்க மற்றவர்கள் சென்றுவிட திக்குத் தெரியாத காட்டில் தனித்து விடப்படட்டதைப் போன்று தவித்துப் போனார் சந்தியா.

பணிப்பெண் ஒருவர் வந்து லட்சுமி தேவி அழைப்பதாய் கூறி அவரை உள்ளே அழைத்துச் செல்ல அங்கு பூஜையறையில் அவளுக்காக காத்திருந்தார் லட்சுமி. அவளைத் தன்புறம் அழைத்து விளக்கேற்ற வைத்து தன்னோடு அழைத்துச் சென்றவர் அவளை ஒரு அறையில் அமர்த்திச் சென்றார்.அன்று முழுவதும் அவளுக்கான அனைத்தையும் அவரே பார்த்துக் கொண்டார்.

இரவு நேரம் நெருங்கிய போது புதுமணத் தம்பதிகளுக்கான சம்பிரதாயaத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு அவர்களது குடும்ப வழக்கப்படி சந்தியா தேவியை அலங்கரித்து அமித் வர்மாவின்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.