(Reading time: 14 - 27 minutes)
Vannamillaa ennangal
Vannamillaa ennangal

அத்தனையும் சொல்லி தான் அனுப்பினார் எங்க நம்பூதிரி.

என் பையனும் எங்களோட வந்துருக்கான்..அவர் குறிச்ச நாள் நட்சத்திரம் இன்னும் இரண்டு நாள்ல வருது அந்த முகூர்தத்துல இவங்க கல்யாணம் முடிஞ்சுதுனா அதுக்கப்பறம் எல்லாமே சுபம் தான்.என்னை நம்பி உங்க பொண்ணை அனுப்புங்க..”

சந்தியாவுக்கோ கண்ணில் நீர் கோர்த்திருந்தது.பெற்றோரோ என்ன செய்வதென புரியாமல் கையை பிசைந்து கொண்டு நிற்க அதைக் கண்டு மேலும் கடுப்படைந்தவராய் தனக்குத் தெரிந்த அரைகுறைத் தமிழில் கத்த ஆரம்பித்திருந்தார் வர்மா.

உங்ககிட்ட உதவி கேட்டு நாங்க இங்க வரல..உங்களுக்கு வேற வழி கிடையாது சம்ஜே! நாளை மறுநாள் இவங்க கல்யாணம் நடக்கும்.நடக்கணும் அது மட்டுமில்லாம நாங்க சொன்ன எந்த காரணமும் வெளில யாருக்கும் தெரிய கூடாது.

அதைவிட முக்கியமா கல்யாணத்துக்கு அப்பறம் உங்க பொண்ணு உங்களைப் பார்க்க வரமாட்டா..நீங்களும் எந்த உரிமையும் எடுத்துகிட்டு வரக் கூடாது.பொண்ணு பெரிய இடத்துல வாழுறானு காசு பணம் எல்லாம் எதிர்பர்.து வந்துநிக்கக் கூடாது.

இப்படிபட்ட குடும்பத்துப் பொண்ணு தான் என் வீட்டு மூத்த மருமகனு தெரிஞ்சா..ச்சச்ச..சரி அது போகட்டும்உங்களைக் கண்காணிக்க என்னோட ஆட்கள் இங்க இருந்துட்டேதான் இருப்பாங்க..எனக்கு எதிரா எதாவது பண்ணணும்னு நினைச்சீங்க அவ்வளவு தான் சொல்லிட்டேன்..

இந்தாங்க பணம் கல்யாணத்துக்குப் புடவையும் அவளுக்குத் தேவையான நகைகளையும் வாங்கி வைங்க..கல்யாணத்தன்னைக்கு காலையில உங்களை அழைச்சுட்டுப் போக வண்டி வரும்.அதுவரை பெண்கள் இரண்டு பேரும் இந்த வீட்டை விட்டு எங்கேயும் போக கூடாது.”,என்றவர் லட்சுமியை அழைத்துக் கொண்டு விறு விறுவென சென்றிருந்தார்.

மழை பெய்து ஓய்ந்தவாறு இருந்தது அந்த இடமே..மூவரும் ஒருவருக்கொருவர் சமாதானப் படுத்தக் கூடத் தோன்றாமல் பிரமைப் பிடித்தாற் போன்று அமர்ந்திருந்தனர்.

வர்மா பேசியதிலிருந்தே அவரின் பண பலமும் ஆள் பலமும் நன்றாகவே புரிந்திருந்தது.தங்களால் நிச்சயம் ஒன்றும் செய்ய முடியாது என்பதை உணர்ந்த ஏழைப் பெற்றோர் அடுத்தகட்டமாய் தன் மகளை இதற்கு சம்மதிக்க வைக்கும் முயற்சியில் இறங்கியிருந்தனர்.

கல்யாண நாளும் வந்தது.கூறியபடியே விடியும் முன்பாக அவர்களை அழைத்துச் செல்வதற்கான வண்டி வந்திருக்க மூவரும் ஒருவரை ஒருவர் பிடித்தபடி பதட்டத்தோடு அதில் பயணத்தைத் தொடங்கியிருந்தனர்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.