தாத்தாவின் அறைக்குள் நுழைந்தவன் தலையில் கை வைத்தவாறு அப்படியே அமர்ந்து விட்டிருந்தான்.அவனது மனநிலை உணர்ந்தவளுக்கோ என்ன கூறுவது என்று புரியவில்லை.சில நிமிடங்கள் அங்கு பெரும் மௌனமே நிலவியிருந்தது.
“மகிழன்..”
“என்ன சொல்றதுனு தெரில ஷியாமா..சொந்த வீட்டுல என்ன நடக்குதுனு கூட தெரியாம வாழ்ந்துட்டு இருக்கேன்..ஒரு மெஷின் மாதிரி தான் நானும் இந்த வீட்டுல இருந்துருக்கேன்..”
“ஏன் இப்படி பேசுறீங்க..என்னோட கணிப்புப் படி உங்க தாத்தா மிஸ்டர் வர்மா ஒரு கொடுங்கோல் ஆட்சி நடத்திருக்கார்னு தான் சொல்லுவேன் இந்த வீட்ல..உங்களுக்குனு இல்ல இதைப் பத்தி அந்த கொலைகாரனைத் தவிர யாருக்கும் தெரிஞ்சுருக்க வாய்ப்பில்ல..
யாருக்கு எது தெரியணும் எது தெரியக் கூடாது யார் எப்படி இருக்கணும்னு எல்லாமே மிஸ்டர் வர்மா தான் டிஸைன் பண்ணிருக்கார்.நடந்த எல்லாத்தையும் விட எனக்கு அதிர்ச்சியான விஷயமே அது தான்.அத்தனை பேரும் படிச்சவங்க..சொசைட்டில ஒரு பெரும் புள்ளி அப்படி இருந்தும் அத்தனை பேரோட மைண்டும் அவர் பண்ற சிஸ்டம்ல தான் இருந்துருக்கு..
ஈவன் யூ…எந்த அளவு அவர் மேல நீங்க வச்சுருக்க பாசத்தை அவருக்கு சாதகமா யூஸ் பண்ண முடியுமோ அந்தளவு யூஸ் பண்ணிருக்கார்.ரத்த சொந்தகளுக்குள்ளேயே இப்படி பட்ட விஷயங்கள் நடந்துதுனா நாட்டில இல்ல உலகதேதுல யாரை நாம நம்ப முடியும்..
சாரி..எதோ தோணிணதை சொல்லிட்டேன்..நிச்சயம் இது எனக்குத் தேவையில்லாதது தான்..ஓகே லெட் மீ கம் டு த பாயிண்ட்..கேஸ் ஓவர் மகிழன்..நாளைக்கு காலையில் இந்த வீட்ல இருக்குற எல்லார் முன்னாடியும் குற்றவாளியை அறிமுகப்படுத்துறேன்.உங்க அம்மா உட்பட எல்லார் முன்னாடியும்..”
“அவங்க எதுக்காக….பெரியம்மா பண்ணிண தப்புக்கு….”
“உங்களோட எல்லா கேள்விக்குமான பதில் நாளைக்கு காலையிலே கிடைச்சுரும்..பாதியை நான் சொல்றேன்..மொத்தத்தையும் சொல்ல வேண்டியவங்க சொல்லுவாங்க…ட்ரஸ்ட் மீ..”
ஆழ் மூச்செடுத்துத் தன்னை நிதானப்படுத்தியவனாய் எழுந்ததவன்,”ஓகே மார்னிங் ஒன்பது மணிக்கு எல்லாரையும் கீழே வர சொல்லிட்றேன்..”
“தேங்க் யூ..அண்ட் நாளைக்கு நான் கொடுக்கப் போற அத்தனை விளக்கங்களும் ஒரு அதிகாரியோடதாகவே இருக்கும்..இனியும் இந்த வேஷம் தேவைப்படாது இல்லையா?”
“ம்ம்..பட் வேஷமா ஆரம்பிச்து இப்போ உண்மை ஆயிருக்குனு நம்புறேன்..”
இயல்பாய் சிரித்தவள்,”அதுல எந்தவித சந்தேகமும் வேண்டாம்..முதல் காதல் மட்டுமில்ல முதல் நட்பும் ரொம்பவே ஸ்பெஷல் தான்..”என்றவள் கை குலுக்கி நகர்ந்தாள்.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.
Let me see if your reason matches my version
Wonderful epi 👏🏻 Sandhya is ultimate