“ஷியாமா என்ன சொல் வர்ற?!!”
“சாரி மகிழன்..நீங்க இதை ஏத்துகிட்டுதான் ஆகணும்..ஏற்கனவே நான் சொன்ன மாதிரி அத்தனைக்கும் காரணம் யாருனு தெரிய வரும்போது உங்க மனநிலைமை கண்டிப்பா நல்லாயிருக்காது..ரிலாக்ஸ்..”
“சொல்லுங்க முத்து அண்ணா நான் சொல்றதெல்லாம் சரி தான..நீங்க உதவினது உங்களோட நண்பனின் மனைவி சந்தியா தேவிக்கும் அவங்களோட அக்கா சரண்யா தேவிக்கும் தான்..அப்படி தான!”
“என்ன தியாவுக்கு அக்காவா?”,சாந்தி தேவி வாய்விட்டே கேட்டிருந்தார்.அதற்குள் முத்து பேச ஆரம்பித்திருந்தார்.
“இதோ பாரு ம்மா..உனக்கு என் மேல என்ன கோபமோ தெரில இப்படி அப்பட்டமான பழி சுமத்துற..அதைக் கூட பொறுத்துக்குறேன்..ஆனா மனநிலை சரியில்லாத ஒருத்தங்க மேல இப்படி அபாண்டமா பழி போடாதம்மா நல்லதுக்கே இல்ல…ஒண்ணா ரெண்டா பத்து வருஷத்துக்கு மேல அறைக்குள்ளேயே அடைஞ்சு கிடக்குறவங்களைப் போய் இப்படி சொல்ல எப்படிமா மனசு வருது உனக்கு?”
“ நீங்களே இத்தனை யோசிக்கும் போது நான் ஒருத்தர் மேல கொலைப் பழி போடும் முன்ன எவ்வளவு யோசிக்கணும்??”
“சரி ஓகே அதையும் தெளிவு பண்ணுவோம்..அதற்கான சாட்சி இதோ இவர் தான்..”,என்றவள் கல்யாணியின் தம்பியை நோக்கி கைகாட்ட வெளியே நின்றிருந்தவன் உள்ளே நுழைந்தான்.நடக்கும் எதற்கும் எந்த எதிர்வினையுமின்றி குனிந்தவாறே அமர்ந்திருந்தார் தியா தேவி.சரண்யாவோ ஷியாமாவையே முறைத்துப் பார்த்திருந்தார்.
“யாருக்காகவும் எதுக்காகவும் தயங்க வேணாம்..உங்களுக்குத் தெரிஞ்சதை சொல்லுங்க..”
“நான் தான் இவங்ககிட்ட உண்மையை சொன்னேன்..முதல் முதலா சந்தேகம் வந்தது பெரியய்யா இறந்த அன்னைக்கு சாய்ந்திரம் என்கிட்ட ரொம்பவே ஒருமாதிரி பேசிட்டு இருந்தார்.
என்னவோ மனசே சரியில்ல டா ஏதோ நடக்கப் போகுதுங்கிற மாதிரியே இருக்கு..நான் போய்டா இந்த குடும்பத்தை யாரு பார்த்துப்பானு பயமா இருக்குனு..என்னென்னவோ சொன்னார்.
சமாதானப்டுத்தினாலும் எனக்கு மனசு கேக்கல..அன்னைக்கு ராத்திரி எல்லாரும் தூங்கினப்பறம் நான் இங்க வாசல்லயேதான் சுத்திட்டு இருந்தேன்..அப்பப்போ உள்ளே எட்டிப் பார்த்துட்டு என்னையறியாம கண்ணசந்துட்டேன்..
எதோ சத்தம் கேட்டு உள்ளே பார்த்தப்போ சின்னையாவோட அம்மா ஐயாவோட அறைக்