(Reading time: 12 - 24 minutes)
Vannamillaa ennangal
Vannamillaa ennangal

கதவைத் தட்டிட்டே இருந்தாங்க..கண்ணாடி வழியா அவங்க பேசினது என் காதுல விழலனாலும்..அவங்க நினைவு இல்லாம ஆக்ரோஷமா கத்தல..நம்ம ஒருத்தரை சாதாரணமா எழுப்புறதுக்கு எப்படி தட்டுவோமோ அப்படி தான் கூப்டாங்க..

அடுத்து என்னனு பாக்குறதுக்குள்ள எனக்கு என்னவோ நடந்து நான் அங்கேயே விழுந்துட்டேன்.அது தூக்கமா மயக்கமானு தெரியவே இல்லை.ரொம்ப நேரத்துக்கு அப்பறம் கண்விழிச்ச அப்போ எந்த வித சத்தமும் இல்லாம அமைதியா தான் இருந்தது.

ஒண்ணும் புரியாம நானும் கெஸ்ட் கவுஸுக்கு போய்ட்டேன்.விடிஞ்சப்பறம் ஐயா இறந்த செய்தி கேட்டு என்னால தாங்கவே முடில எதைப் பத்தியும் யோசிக்கவும் முடில.அதிலிருந்து வெளியே வரவே கொஞ்ச நாள் தேவைப்பட்டது எனக்கு..

அப்பறம் பொறுமையா யோசிக்கும் போது அன்னைக்கு நடந்ததெல்லாம் நியாபகத்துக்கு வந்தது.இருந்தும் சின்னையாக்கு ஏற்கனவே என்னைப் பிடிக்காத காரணத்துனால யார்கிட்டேயும் எதுவும் சொல்லல..ஆனாலும் இதைப் பத்தி தெரிஞ்சுக்கணும்னு ஒரு நாள் யாருக்கும் தெரியாம இவங்க இருக்குற ரூம்க்கு போனேன்..

அப்போ இவங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருக்குற சத்தம் கேட்டுது..ரொம்ப சாதாரணமா பேசிட்டு இருந்தாங்க..திடீர்னு பேச்சு சத்தம் நின்னு போச்சு..நான் பயத்துல கீழே இறங்கி வந்துட்டேன்..

அப்போவே இதை யார்கிட்டேயாவது சொல்லிரணும்னு ரொம்ப நினைச்சுட்டு இருந்தப்போ தான் அடுத்த ரெண்டு நாள்ல என்னை கல்லால அடிச்சு காயப்படுத்தினாங்க..

அதை ஷியாமா மேடம் கிட்ட சொல்றதுக்காக அவங்களை கூப்பிட்டு பேச ஆரம்பிக்கும் போது முத்து அண்ணா வந்துட்டாரு..அவரு எங்களைப் பேச விடாம அவங்களை கூடவே கூட்டிட்டு போய்ட்டார்.

ஆனா அதுக்கப்பறம் யாருக்கும் தெரியாம மேடம் என்கிட்ட பேச வந்தாங்க அப்போ இது எல்லாத்தையுமே நான் சொல்லிட்டேன்..”,என்றவன் கூறிய ஒவ்வொன்றையும் விதிர்த்துப் போய் கேட்டுக் கொண்டிருந்தனர் அத்தனை பேரும்.

என்ன முத்து அண்ணா இது போதுமா இல்ல..சிட்டிலயே நம்பர் ஒன் டாக்டரைக் கூப்பிட்டு சர்டிபிகேட் வாங்கி காட்டினாதான் நம்புவீங்களா!”

அது..அது..”

ஏன் பதட்டப்படுறீங்க..அப்பறம் எதையாவது சொல்ல மறந்துறப் போறீங்க..நீங்க பண்ணிண தப்பை நீங்களாவே சொல்லிட்டா நல்லது..”

என்ன மா தப்பு பண்ணிட்டாங்க என்ன பெரிய தப்பு பண்ணிட்டேன்..ஆமா நான் தான் ஆளை

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.