(Reading time: 12 - 24 minutes)
Vannamillaa ennangal
Vannamillaa ennangal

வச்சு இவங்க இரண்டு பேரையும் கொல்லப் பார்த்தேன்..இப்போ என்ன அதுக்கு??

என் ஐயா..என் நண்பன் அமித்தை கொலைப் பண்ண இவங்களை என் கையாலேயே கொன்னாலும் தப்பு கிடையாது”,என்றவர் ஆக்ரோஷமாய் ராகேஷின் மீது பாயப் போக அத்தனை பேரும் சேர்ந்து அவரைத் தடுத்து நிறுத்தியிருந்தனர்.

முத்துண்ணா!!!”,மகிழனின் குரல் மொத்தமாய் ஓய்ந்து போயிருந்தது.உங்களிடம் இதை எதிர்பார்க்கவில்லையே என்ற ஆற்றாமைக் கொட்டிக் கிடந்தது.

நீங்க ஏன் தம்பி விசனப்படுறீங்க..விஷயம் தெரிஞ்சவுடனே எத்தனை கோபம் ஆத்திரம் வந்தது தெரியுமா எனக்கு..இது எனக்கு முன்னாடியே தெரியாது..அதுல் ஐயா கீழே விழுந்தது தானா நடந்தது இல்ல..ஆனாலும் இதுக்கு காரணமானவங்களை மாட்டிவிடக் கூடாதுனு நான் யாரையுமே பார்க்கலனு சொன்னேன்.

அப்பறம் சம்மந்தபட்டவங்ககிட்ட போய் பேசி புரிய வைக்க முயற்சி பண்ணேன்.இதோ நிக்குறானே கல்யாணியோட தம்பி இனைத் தாக்கின அப்பவும் அவங்களைக் காப்பாத்தனும்னு ஷியாமாகிட்ட பொய் சொன்னேன்.ஆனாஅப்போ எனக்குத் தெரிய வந்த விஷயங்கள் எல்லாம் என்னை மிருகமாவே மாத்திருச்சு..என்ன ஆனாலும் சரினு இவங்களை கொல்றதுக்கு முடிவெடுத்தேன்.

யாருனே தெரியாத ஒருத்தர் போன் மூலமா இவங்க அமித்தை கொலப் பண்ணதுக்கு நான் தான் சாட்சினு சொன்னேன்..வெளிலே சொல்லாம இருக்கணும்னா உடனே பணத்தை எடுத்துகிட்டு என்னைப் பார்க்க வரணும்னு சொன்னேன்.

நினைச்சா மாதிரியே ஓடி வந்தாங்க இரண்டு பேரும்.காசு கொடுத்து ஆள் வச்சு அடிச்சுத் தூக்கினேன்.ஆள் நடமாட்டம் கம்மியா இருந்ததால அந்த வண்டி பத்தின எந்த விவரமும் யாருக்கும் தெரியாம இருக்கும்னு நினைச்ச மாதிரியே நடந்தது.

ஆனா இந்த பாவிங்க இரண்டு பேரும் பொழச்சுட்டானுங்கனு தெரிஞ்சப்போ…இரத்தம் கொதிச்சுது..ஆனா இப்போ இந்த நிலைமையில் இவங்களைப் பாக்குறப்போ எல்லாம் மனசு குளிர்ந்து போகுது..போதுமா நான் தான் பண்ணேன் ஒத்துகிட்டேன் தான..என்ன பண்ணணுமோ பண்ணிக்கோ மா..”,என்றவர் மூச்சு வாங்க பேசி முடித்திருக்க லேசாய் புன்னகைத்த ஷியாமாவோ,

நடந்த நாடகத்தில் உங்க ரோல் பத்தி எல்லாம் சொல்லிட்டீங்க..ஆனா இதெல்லாம் பண்ண திட்டம் போட்டது சந்தியா தேவியா சரண்யா தேவியானு இன்னும் நீங்க சொல்லலையே ணா?”

“”உன்னை கெஞ்சி கேட்குறேன்மா..நான் தான் சொல்லிட்டேனே நான் தான் பண்ணேன்னு அப்பறம் என்னதண்டனை எதுவானாலும் எனக்கு கொடு..உன் கால்ல கூட விழறேன்”,என்வாறு அவள் காலைப் பிடிக்க போக அதற்குள் வீடே அதிரும் வண்ணம் கர்ஜித்திருந்தார் சந்தியா தேவி.

நான்தான் நான் மட்டும் தான் எல்லாத்துக்கும்எல்லாத்துக்கும் காரணம்..என்ன பண்ணிடுவ?!”,என்று கால் மேல் கால் போட்டு தன் தலை முடியை கோதி கொண்டையிட்ட வாறு அனைவரையும் மிரட்டும் பார்வை பார்த்திருந்தார்.

தொடரும்...

Episode # 13

Episode # 15

Go to Vannamillaa ennangal story main page

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.