(Reading time: 9 - 18 minutes)
Vannamillaa ennangal
Vannamillaa ennangal

தொடர்கதை - வண்ணமில்லா எண்ணங்கள் - 05 - ஸ்ரீ

ஷிக் மோனிஷாவோடு கிளம்பியவள் முதலில் சென்று இறங்கியது ஜெய்ப்பூரின் கட்டட கலைக்கு அழகிய சான்றான ஜல் மஹாலில்.மகிழன் கூறிய போது கூட பெரிதாய் எடுத்துக் கொள்ளாதவள் அவர்கள் இருவரும் பேசியதை கேட்ட பின்பு நொந்து கொண்டாள்.சிறு பிள்ளைகளாய் அரற்றிக் கொண்டே வந்தனர்.

ஜல் மஹால் என்பது மன் சாகர் ஏரியில் கட்டப்பட்ட ஐந்து அடுக்கு மாளிகை.அதில் நான்கு தளங்கள் நீருக்குள் அமைந்திருக்க மேல்தளம் மட்டுமே மேற்பரப்பில் காட்சிளிக்கிறது.அந்த காலத்தில் டக் ஹண்டிங் போன்ற பொழுதுபோக்கிற்காக அமைக்கப்பட்ட மஹால் என்று கூறப்டுகிறது.

Vannamilla ennangal

காரிலிருந்து இறங்கியவள் விருப்பமே இல்லாமல் இரண்டு நொடி அதைப் பார்த்துவிட்டு மற்றவர்களைப் பார்த்து போலாமா என்று கேட்க ஆஷிக் அவளை விசித்திரமாய் பார்த்தான்.

வாட்?”

நிஜமாவே நீங்க ஆர்க்யாலஜி ஸ்டுடண்ட் தானா?”

ஏன் அப்படி கேக்குற?”

இல்ல ஏதோ டூரிஸ்ட் மாதிரி வந்தோம் பார்த்தோம் கிளம்பலாமானு கேக்குறீங்க?டூரிஸ்ட் கூட போட்டோ எடுக்காமா இங்க இருந்து போக மாட்டாங்க!”

ஆனாலும் நீ ரொம்ப யோசிக்குறஇப்போ எல்லாம் கூகுள்ல தேடினா எல்லா மைனியூட் டீடெயில்ஸும் போட்டோவோட கிடைக்குது.அதனால எடுக்கல.ஆல்சோ என் தீசிஸ் மெயினா ஆம்பர் ஃபோர்ட் பத்தி தான்..விளக்கம் போதுமா இல்ல வேற எதுவும்??”

தெரியாம கேட்டுட்டேன் முறைக்காதீங்க..போலாம் போலாம்..”,என்றவன் வாயை மூடிக்கொள்ள மோனிஷா நமட்டுச் சிரிப்பு சிரித்தவாறே ஷியாமாவோடு சேர்ந்து கொண்டாள்.

அடுத்ததாக அவர்கள் சென்ற இடம் இரண்டாம் ஜெய் சிங் எனும் மன்னரால் கட்டப்பட்ட மிகவும் பிசித்தி பெற்ற ஜந்தர் மந்தர்.இதன் பெயர் காரணமானது,ஜந்தர் என்றால் கருவி மந்தர் என்றால் கணிப்பு எனவே கணிப்புக் கருவி என்று பொருள்படும்.

நேரத்தைக் கணக்கிடுவது, கிரகணங்களை முன்னறிவிப்பது, கதிரவனைச் சுற்றும் புவியின் பாதையில் விண்மீன்களின் இடத்தைத் தடமறிவது, கோள்களின் சாய்மானங்களை அறிவது மற்றும் கோள்களின் கோணவேற்றங்களை அறிவது மற்றும் அவை தொடர்பான இட அட்டவணைகள் போன்றவற்றிற்காக மாபெரும் வடிவவியற் கருவிகளை இந்த வான் ஆய்வுக்கூடம் கொண்டுள்ளது. 

இந்த வானியல் ஆராய்ச்சி வளாகம் யுனெஸ்கோ சர்வதேச அமைப்பினால் உலகப்பண்பாட்டு சின்னமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது மட்டுமல்லாமல், “முகலாய ஆட்சியின் இறுதிக்காலத்தில்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.