(Reading time: 10 - 20 minutes)
Vannamillaa ennangal
Vannamillaa ennangal

தொடர்கதை - வண்ணமில்லா எண்ணங்கள் - 10 - ஸ்ரீ

ந்த பெரிய கட்டிடத்தின் முன் இறங்கியவள் உள்ளே சென்று வரவேற்பாளினியிடம் அப்பாய்ண்மெண்ட் விஷயத்தைக் கூறிவிட்டு காத்திருந்தாள்.

அவளை உள்ளே அழைக்கும் வரை மொபைலை ஆராய்ந்து கொண்டிருந்தவள் அதன் பின் எழுந்து அவர்கள் கூறிய வழியில் சென்று சூரஜ் என்ற பெயர்பலகைத் தாங்கி நின்ற கதவைத் தட்டிவிட்டு உள்ளே நுழைய அவளைப் பார்த்தவனின் விழிகள் நொடிப் பொழுதாயினும் பதட்டத்தைக் காட்டி நிதானித்திருந்தது.

“ஹாய் மிஸ்டர் சூரஜ்..”

ஹாய்..டேக் யுவர் சீட்..பை த வே நேத்து என்கூட போன்ல பேசினது?”

யா நான் தான்..ஷியாமா ராகவன்..”

.கே சொல்லுங்க என்ன விஷயமா என்னை பார்க்க வந்துருக்கீங்க?அதுவும் பர்சனலா மீட் பண்ணணும்னு சொல்லிருந்தீங்களே?!”

வெல்..சுத்தி வளைச்சு பேச வேண்டாம்னு நினைக்குறேன்..மிஸ்டர் மகிழன் வீட்ல நீங்க என்னைப் பார்த்துருக்கீங்க கரெக்டா?”

ஆர் யூ ஜோக்கிங்..நான் ஏன் எம்வீ வீட்டுக்குப் போகணும்?அதுவும் நீங்க அங்க இருக்கீங்கனே இப்போ நீங்க சொல்லி தான் தெரியுது எனக்கு..”

ஓவர் ஸ்மார்டா இருக்க ட்ரை பண்ண வேணாமே..நான் எந்த ப்ராப்ளமும் பண்ண வரலைஐ அம் ஷுவர் அன்னைக்கு நான் பார்த்தது உங்களை தான்..

எதோ ஒரு பழைய படத்துல வருமே அது மாதிரி உங்க பேஸ்ல மாஸ்க் போட்டு வேணா காட்டுங்க இந்த கண்ணை வச்சு அடிச்சு சொல்லுவேன் அது நீங்க தான்னு..”

இங்க பாருங்க மிஸ்..என் இடத்துக்கே வந்து தேவையில்லாத எதையெதையோ பேசி என் நேரத்தை வீணடிக்குறீங்க..நானா அனுப்புறதுக்கு முன்னாடி ப்ளீஸ்..”,என்றவன் வாசல் கதவை நோக்கி கை நீட்ட எந்த உணர்ச்சியும் வெளிக் காட்டாதவளாய்,

ஓகே தென்..உங்களுக்கு நல்லது பண்ணலாம்னு நினைச்சேன்..வேண்டாம்னு சொன்னா நான் என்ன பண்றது..தியாவோட மேரேஜ்ல பார்க்கலாம் சீக்கிரமே..பை..”,என்று அவள்போக்கில் கூறிவிட்டு நகர எத்தனித்திருந்தாள்.

வாட் என்ன சொன்னீங்க??யார் மேரேஜ்??”

“”ம்ம் அதான் மகிழனுக்கும் அவரோட அத்தை பொண்ணு தியாக்கும்..”

“!!!??”

என்ன இப்படி ஷாக் ஆகுறீங்க?தியாவைத் தெரியுமா??”

அஅது..வந்து..அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல..”

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.