(Reading time: 10 - 20 minutes)
Vannamillaa ennangal
Vannamillaa ennangal

ஒருத்தர் மேல ஒருத்தரருக்கு இருந்தது இல்ல.சோ நிச்சயமா இது எனக்கு சாதாரண விஷயம் தான்.”

தேங்க் யூ எம் வீ..தேங்க்ஸ் பார் தி அண்டர்ஸ்டாண்டிங்..”

சோ உங்க சைட் விவரம் தெரிஞ்சா என் வீட்ல நான் பேச வசதியா இருக்கும்.உங்க ப்ரெண்ட்ஸ்க்கு ஓகே வா?”

அதெல்லாம் நான் கன்வின்ஸ் பண்ணிடுவேன்ஒன்னும் பிரச்சனையில்ல..பட் தியா வோட அப்பா அம்மா தான்!!?”

ம்ம் கொஞ்சம் கஷ்டம் தான் ஆனா முடியாதது இல்ல..அவங்களை நான் பார்த்துக்குறேன்..நீங்க வீட்ல பேசிட்டு சொல்லுங்க..எவ்வளவு சீக்கிரம் முடியுமோ கல்யாணத்தை முடிச்சுரலாம்..”

இதைவிட முக்கியமான வேலை என்ன இருக்கப் போகுது எனக்கு..இப்போவே டேடி கிட்ட பேசிட்றேன்..ரியலி அன் எக்ஸ்பெக்டட்..தேங்க்ஸ் அகெயின்”,என்றவனின் ஆர்பரிப்பும் துள்ளலும் மகிழனுக்கு விசித்திரமாய் தோன்றியது.

சூரஜ்ஜை தொழில் சம்மந்தமான மீட்டிங்கில் தான் சந்தித்திருக்கிறான்.மகிழன் எந்தளவு கம்பீரத்தைக் கடைப்பிடிப்பானோ அதே மாதிரியான ஒரு முதிர்ச்சி இருக்கும்.

ஆனால் இப்போது பேசியவனின் குரல் துள்ளிக் குதித்தோடும் கல்லூரி மாணவனைப் போன்று இருந்தது மகிழனிற்கு.அந்த எண்ணம் தோன்றிய அதே நேரம் மனம் அதுவாய் சோர்வுற்றது.

ஏனெனில் கல்லூரி காலத்தில் கூட மகிழன் அப்படி இருந்ததில்லை..அதனாலேயே கூட யாரோடும் ஒட்டுதலோ நட்பு பாராட்டும் தன்மையோ அவனிடத்தில் வந்திருக்கவில்லை.

இப்போது நினைத்தால் ஷியாமாவோடுடனான இலகுத்தன்மைக்குக் காரணம் கூட அவள் குணம் தான்.அவனை ஒத்த அத்தனையும் அவளிடத்திலும் இருந்தது என்று நன்றாகவே உணர்ந்திருந்தான்.அவளைக் கடந்து எந்த ஒரு செய்தியும் சாதாணமாய் கூட அவள் அனுமதியின்றி வெளியே செல்லாது என்பதே மிக முக்கிய காரணமாகவும் இருக்கலாம்.சில நொடிகளில் சிந்தனை கலைந்தவனாய் தலையை உலுக்கிக் கொண்டு அடுத்து செய்ய வேண்டிய காரியங்களைப் பற்றி யோசிக்க ஆரம்பிதிருந்தான்.

அங்கு ஷியாமா மகிழனின் வீட்டை அடைந்திருக்க அவளுக்காகவே  தோட்டத்தில் காத்திருந்த தியா இவளைக் கண்டதும் அருகே வந்தாள்.

ஷியாமா..”

ம்ம்..உங்களுக்கு பேச கூட வருமா..பரவால்லையே சொல்லுங்க..”

சாரி அண்ட் தேங்க்ஸ்..”

எதுக்கு?”

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.