(Reading time: 10 - 20 minutes)
Vannamillaa ennangal
Vannamillaa ennangal

ஒருத்தரை ஒருத்தர் பிடிச்சுருக்கு..ஆனா உங்களுக்கும் தியாவுக்கும் கல்யாண பேச்சு அதுகுள்ள மிஸ்டர் வர்மாவோட இறப்புனு நடந்த குழப்பங்காள்ல யாருக்கும் எதுவும் தெரியாமயே இருந்துருக்கு..”

தேங்க் காட்…!!!”,என்றவன் தலையை அழுந்தக் கோதி தன் இருக்கையில் சாய்ந்து அமர்ந்தான்.

ஆனாலும் இப்படி ஒரு ரியாக்ஷனை நான் எதிர்பார்க்கல உங்ககிட்ட..”

உனக்குத் தெரியாது நான் இப்போ எவ்வளவு நிம்மதியா இருக்கேன்னு..இந்த பிரச்சனையை எப்படி முடிக்குறதுனு ரொம்பவே குழம்பிருக்கேன்.சிம்பிள் லாஜிக் சின்ன வயசுல இருந்தே ஒரே வீட்ல வளர்ந்துருக்கோம் மோனியை பாக்குறப்போ வர்ற அதே பீல் தான் எனக்கு தியாவைப் பார்த்தாலும் வரும்.

அப்படியிருக்க அவளை எப்படி கல்யாணாம் பண்ண முடியும்.அது மட்டுமில்லாம என் அத்தை..காட் நினைச்சாலே தலை சுத்தும்..”

தி க்ரேட் எம்வீ யையே தெறிக்க விடுறதுக்கு ஆள் இருக்கு உங்க வீட்ல..சரி விஷயத்தை சொல்லிட்டேன்..இனி ஆக வேண்டியதை நீங்க பாருங்க அதே நேரம் என் பேர் எக்காரணம் கொண்டும் வெளியே வரக் கூடாது..மிஸ்டர் சூரஜ் கிட்டேயும் இதையே தான் சொல்லிருக்கேன்.”

ஷுவர் ஷுவர் எனிவே தேங்க் யூ சோ மச் பர் திஸ்..”

நோ ப்ராப்ளம் எதையோ நினைச்சு விசாரிக்கத் தொடங்க எதோ ஒரு விவரம் கிடைச்சுருக்கு அவ்ளோ தான்..ஓகே நான் கிளம்புறேன்..பை..”,என்றவள் தன் கண்ணாடியை மாட்டியவாறே வெளியே செல்ல அவளையே பார்த்திருந்தான் மகிழன்.

அவள் அங்கிருந்து சென்ற பின்பும் சில நிமிடங்கள் வாசலையே வெறிந்திருந்தவன் உணர்வு பெற்றவனாய் அடுத்து தான் செய்ய வேண்டியதைப் பற்றி கணக்கிட ஆரம்பித்தான்.முதல் வேலையாய் சூரஜிடம் பேசுவதே நல்லது என்று தோன்ற அவனின் எண்ணிற்கு அழைத்தான்.

ஹலோ எம்வீ?”

ஹாய் சூரஜ் எப்படியிருக்கீங்க?”

நான் நல்லாயிருக்கேன்..நீங்க எப்படி இருக்கீங்க?எதுவும் முக்கியமான விஷயமா நீங்களே கால் பண்ணிருக்கீங்க..!”,என்றவனின் குரலில் எதிர்பார்ப்பு அப்பட்டமாய் தெரிந்தது.

ஐ அம் வெரி பைன்..அண்ட்..அது..இப்போ தான் ஷியாமா வந்துட்டு போனா..”

“…”

உங்களுக்கும் தியாவுக்குமான காதலைப் பத்தி சொன்னா..பர்ஸ்ட் ஆப் ஆல் கங்க்ராட்ஸ்..”

எம் வீ!!!”

என்னாச்சு ஏன் இவ்ளோ ஷாக் ஆகுறீங்க?எனக்கும் தியாக்கும் எப்பவுமே பெருசா எந்த ஈடுபாடும்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.