(Reading time: 11 - 21 minutes)
Vannamillaa ennangal
Vannamillaa ennangal

தொடர்பும் இருந்திருக்கவில்லை.

அவரிடம் விசாரித்த போது பணி முடிந்து வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த நேரம் மிகவும் அவசரமாய் ஒரு போன் செய்ய வேண்டும் என்று கூறி ஒருவர் வாங்கியதாகவும் பேசிவிட்டு கொடுத்துச் சென்றார் என்றும் கூறினார்.

அதைக் கடந்து எந்தவித தகவலையும் அவரிடம் பெற முடியாமல் போனது.அதை தவிர்த்து வர்மாவின்  மரணத்தைப் பற்றி யோசித்தால் மேலுமே குழப்பம்.

யாரேனும் அவரைக் கொன்றிருந்தால் கதவு எப்படி உள்புறமாய் தாழிடப்பட்டிருக்கும்.மகிழன் கூறியதை வைத்துப் பார்க்கும் போது அதற்கு மற்ற சாவியோ அல்லது வேறு எந்த யுத்தியும் பயன்படுத்தியிருக்க முடியாது என்பது தெளிவாய் தெரிகிறது.

தனக்குள் ஏதேதோ இப்படி யோசித்துக் கொண்டிருந்தவளைத் தேடி ஆஷிக்கும் மோனிஷாவும் வந்திருந்தனர்.

ஹே கைஸ்..”

ஹா…….ய்ய்ய்ய்…..”

என்ன இப்படி அழுது வடியுறீங்க இரண்டு பேரும்…”

வர வர வீட்டுல இருக்கவே பிடிக்கல ஷியாம்ஸ்..”

ம்ம் நிலைமை சரியில்ல வாட் டு டூ..சீக்கிரமே எல்லாம் நார்மல் ஆகும் ஆஷிக்..”

ம்ம் நம்பிக்கிட்டு இருக்க வேண்டியது தான்..ஒண்ணும் நடக்கப் போறது இல்ல..”

அட என்ன மோனி நீ கூட இப்படி ஆய்ட்ட..”

ரொம்ப கஷ்டமா இருக்கு கா..பாவம் தியா தீப்தி எல்லாம்ரொம்ப வருத்தப்பட்டா என்கிட்ட..இந்த புக்கெல்லாம் படிக்கும் போது அப்படியே  வேற உலகத்துக்குள்ள போற மாதிரி இருக்குமே..அதுமாதிரி எங்கேயாவது போய்டணும் போல இருக்கு..”

அப்போ எதாவது புக் படிக்க வேண்டியதுதான..”

என்கிட்ட இருக்குற எல்லாமே நான் படிச்சுட்டேன்..இதுக்கு மேல படிக்கனும்னா தாத்தாவோட புக்ஸை தான் படிக்கனும்..”,என்றவள் சலிப்பாய் கூற சட்டென ஷியாமாவுக்குள் ஒரு யோசனை தோன்றியது.

அப்போ அதையே பண்ணிடுவோம்..வாயேன் எதாவது நல்ல புக் இருக்கானு பார்ப்போம்.”

அப்படியா சொல்றீங்க?”

ம்ம் எனக்குமே எதாவது படிக்கலாம்னு தோணுது..நீயும் வாயேன் ஆஷிக்

அம்மாடி தாய் குலங்களா ஆளை விடுங்க..நீங்க போய் என்னவோ பண்ணுங்க..”,என்றவாறு அவன் நகர்ந்துவிட பெண்கள் இருவருமாய் அந்த புத்தக அறையை நோக்கிச் சென்றனர்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.