(Reading time: 11 - 21 minutes)
Vannamillaa ennangal
Vannamillaa ennangal

அனைத்தையும் நினைவுப்படுத்த முயன்று கொண்டிருந்தாள்.

கட்டில்..அந்தபக்கம் பாத்ரூம்..இன்னொரு பக்கம் சின்ன பால்கனி..சோபா..அப்பறம் அப்பறம்..ஆங்..அந்த அலமாரி!!!!”,அன்று பார்த்தபோதே சிறு வித்தியாசம் தோன்றியது இப்போது நியாபகத்திற்கு வந்தது.

புத்தகங்களுக்கே இத்தனை முனைப்போடு ஒழுங்கு படுத்தியவரின் அறையின் அலமாரியில் கலைப் பொருட்கள் என்று பெரிதாய் எதுவும் இருக்கவில்லை.இப்போது எதோ ஒன்று புரிவதைப் போல் இருந்த நேரம் மோனிஷா அவளை அழைத்து அந்தபுத்தகத்தைக் காட்டினாள்.

அக்கா இது இருக்கு பாருங்க”,என்று அவள் காட்டிய படத்தை கவனமாய் கவனித்தவள் தன் கற்பனையில் அதற்கு உருவம் கொடுக்க முயல ஒருவழியாய் அவளின் யூகம் சரி என்றானது.

அங்கிருந்து தனது அறைக்கு வந்தவள் முதல் வேலையாய் மகிழனிற்கு அழைத்தாள்.ஓரளவு விவரத்தைக் கூறி இரவு அவன் தாத்தாவின் அறைக்குச் சென்றே ஆக வேண்டும் என்று கூற அவனும் சீக்கிரமே வீட்டிற்கு வருவதாய் கூறி அழைப்பைத் துண்டித்தான்.

பின்னிரவுகளில் வீட்டிற்கு வந்தவன் ஷியாமாவிற்கு அழைக்க முதல் அழைப்பிலேயே ஏற்று காதில் வைத்தவள்,

வந்துட்டீங்களா?”

தூங்கிருப்பனு நினைச்சேன்..யா என் ஆபீஸ் ரூம்ல தான் இருக்கேன்..கம்..”,பதில் கூட கூறாமல் அழைப்பைத் துண்டித்து விட்டு கீழே விரைந்தாள்.

போலாமா?”

“”ஏன் இவ்ளோ டென்ஷன்..வா போலாம்..”,என்றவன் வேறெதுவும் கூறாது முன்னே செல்ல அவனைப் பின் தொடர்ந்தாள் ஷியாமா.

உள்ளே சென்று கதவைத் தாழிட்ட பின் மகிழன் விளக்குகளை ஒளிர விடமுதல் வேலையாய் அலமாரியின் அருகில் சென்றவள் அதைத் தள்ள முயற்சிக்க அவள் செய்கையை விசித்திரமாய் பார்த்திருந்தான் மகிழன்.

ஷியாமா இது எந்தளவு பாசிபில்னு நினைக்குற..மேபி முன்னாடி அந்த இடத்துல டனல் இருந்துருக்கலாம்..ஆனா..இப்போ..”,எனும்போதே சற்று தள்ளி நின்று அவனை நோக்கி அந்த இடத்தைப் பார்க்குமாறு கூற..மூன்று புத்தகங்கள் இருந்த இடத்தில் ஒன்று புத்தகம் போல் இருந்த மரப்பெட்டகம்.

இருவருக்குமே காண்பதெல்லாம் அதிசயம் போல் தோன்றினாலும் நிஜம் என்பது மனதை உரைக்க ஷியாமா அந்த பெட்டகத்தைத் திறக்க அதனுள் கதவைத் திறக்கும் வட்டமான தாழ்ப்பாள் இருந்தது.

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.