அதைக் கைககள் நடுங்க தொட்டவன் வலப்பக்கமாய் திருப்ப சிறு சத்தத்துடன் அந்த அலமாரி உள்ளே திறப்பதற்கு ஏதுவாக திறந்துகொண்டது. தன் மொபைலில் டார்ச்சை ஆன் செய்தவன் உள்ளே செல்ல அவனைப் பின் தொடர்ந்தாள்.
ஒருவர் மட்டுமே நடக்கும் அவளவிற்கான பாதை.சரிவாய் சற்று கீழ் நோக்கி சென்ற பாதை ஒரு இடத்தில் முடிவுக்கு வர சுற்றில் தேடியவனின் கண்களில் பட்டது அந்த நட்சத்திர வடிவ திறக்கும் கருவி.பழைய காலத்தின் லாக்கர்களில் எல்லாம் இருப்பதைப் போன்று இருந்தது அது.
வலதுபுறம் சுற்றியவுடன் கதவு வெளிப்புறமாய் திறக்க வெளியே வந்தவர்கள் வீட்டின் பக்கவாட்டு இடத்தில் நின்றிருந்தனர்.அதாவது சற்றே உயரமான அந்த வீட்டின் தரைத் தளத்தின் அறையிலிருந்து பூமிக்கு உள் வழியாக ஓரமாய் இருந்த மகிழனின் அலுவலக அறையை கடந்து வெளிப்புறம் வந்ததைப் போன்ற அமைப்பு..
கதவை ஆராய்ந்தவளுக்கு வெளியிலிருந்து திறப்பதற்கான எந்த அடையாளமூம் இல்லாததால் கதவை மூடிய பின் அது சுவர் போலவே தோன்றுமே அன்றி இப்படி ஒரு கதவு இருப்பது யாருக்கும் நிச்சயம் தெரியாது என்பது புரிந்தது.
“ஷியாமா!!”
“இங்க எதுவும் பேச வேண்டாம் நான் இது வழியா மறுபடியும் ரூம்க்கே போறேன் நீங்க இதை பூட்டிட்டு அப்படி வாங்க..அங்க பேசிக்கலாம்..”
ஆமோதிப்பாய் தலையசைத்தவன் அவள் சற்று உள்ளே செல்லும் வரை பொறுத்திருந்து பின் கதவைப் பூட்ட அங்கு கதவு இருந்ததற்கான அடையாளமே இல்லாமல் போயிருந்தது.
அதிர்ச்சியில் இருந்து மீளாதவனாய் ஷியாமாவைத் தேடி தாத்தாவின் அறைக்குள் நுழைந்தான் மகிழன்.
தொடரும்...
Go to Vannamillaa ennangal story main page
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.