நின்னயே ரதி என்று நினைக்கிறேனடி கண்ணம்மா!
தன்னையே சகி என்று சரணம் எய்தினேன் !… கண்ணம்மா!….
நேரம் ஏழு மணியை தாண்டி விட்டது. ஆனால் பவித்ராவின் வேலை மட்டும் முடிந்த பாடில்லை. அது ஒரு ஆடிட்டிங் கம்பெனி. அங்கு பேப்பர் வடிவில் இருந்த விவரங்களை எல்லாம் கம்ப்யூட்டர்ரில் பதிவேற்றியது இவள் தான். ஒரு சில சிறிய கம்பெனி டேட்டாக்களை மட்டும் ஏற்றவில்லை. இப்போது அவை எல்லாத்தையும் பதிவேற்றும்படி சத்யா சொல்லியிருந்தான் அதுவும் இன்று ஒரு நாளுக்குள். அவளுக்கு அவனை அடையாளம் தெரியாமல் எல்லாம் இல்லை. தெரிந்து தான் இருந்தது. அவன் பழி வாங்க இப்படி செய்கிறான் என்று எண்ணியவள் முகத்தில் ஒரு வறண்ட புன்னகை தோன்றியது. என்ன பழி வாங்கிவிட முடியும் அவனால் என்று எண்ணியவள் அவளின் வேலையில் கவனத்தை திருப்பினாள். அவளுக்கு இன்று ஆஸ்ரமத்திற்கு போக முடியாது, பிள்ளைகள் காத்திருந்து சோர்ந்து போவார்கள் என்று தான் வருத்தமாக இருந்தது. கிட்டத்தட்ட முடித்து விட்டாள். இன்னும் ஒரு மணி நேரத்தில் வேலையை முடித்து விடலாம், குறைந்தபட்சம் அவர்களை சென்று பார்த்துவிட்டாவது வர முடியும் என்று எண்ணினாள் பவித்ரா. அவனின் அறையில் இருந்து இவளை தான் பார்த்து கொண்டிருந்தான் சத்யா. அவன் மனதில் யோசனை சூழ்ந்தது. அவளின் முகத்தில் இப்போதும் சோர்வு இல்லை. என்ன செய்தால் அவள் அழுவாள், அவளின் அமைதியை என்ன செய்தால் இழப்பாள், குறைந்த பட்சம் அவளின் சமநிலை தவற வேண்டும். அவள் இப்படியே அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து விடக்கூடாது, என்ன செய்யலாம் என.
அடுத்த ஒரு மணி நேரத்தில் வேலையை முடித்தவள் தன்னுடைய லேப்டாப்புடன் அவனின் அறைக்கதவை வந்து தட்டினாள்.
"வாங்க " அவனின் பதிலில் உள்ளே நுழைந்தாள் பவித்ரா.
"சார் டாட்டா எல்லாம் பீட் பண்ணியாச்சு. நீங்க ஒரு முறை செக் பண்ணி அப்ரூவ் பண்ணனும்" என்றவள் அவனின் முன் அவளின் லேப்டாப்பை வைத்தாள்.
அந்த இருக்கையில் சாய்ந்து அமர்ந்திருந்தவன் தன்னுடைய கழுத்தில் இருந்த டையை சிறிது தளர்த்திவிட்டான். பின் நேரத்தை பார்த்தான். மணி எட்டை தாண்டியிருந்தது. பின் அவளை பார்த்தான். அவளின் முகம் எப்போதும் போல எந்த உணர்வுகளையும் காட்டவில்லை. எரிச்சலாக வந்தது அவனுக்கு. இவளுடைய அமைதியை குலைக்க நான் என் அமைதியை இழக்க வேண்டும் போல என்று தோன்றியது அவனுக்கு.
பின் அவளின் வேலையை ஒரு முறை ஆய்வு செய்தவனுக்கு உண்மையிலேயே அவளின்
Like to read stories? Now you can read full novels at Chillzee KiMo. No wait time, No ads, No restrictions!!!